உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. அனில் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனில் குமார் இந்தியாவைச் சேர்ந்த இதழாளரும், எழுத்தாளரும் ஆவார். கர்மவீரா என்ற கன்னட வார இதழின் முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். முன்னர், சம்யுக்த கர்நாடகா என்ற கன்னட இதழின் துணை ஆசிரியராகவும் விளங்கினார். இந்திய, வெளிநாட்டு செய்தித்தாள்களிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்த போது, இதழியல் துறையில் ஆர்வம் கொண்டு கன்னட இதழ்களில் பணிக்குச் சேர்ந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியா, உஷா கிரானா போன்ற பிரபல செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._அனில்_குமார்&oldid=2715022" இலிருந்து மீள்விக்கப்பட்டது