உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி.ஓ.சி.இ செயற்கைக் கோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி.ஓ.சி.இ
திட்ட வகைபுவி ஈர்ப்பு விசை மற்றும் கடல் மட்டங்களின் மாறுதல்களை அடையாளப்படுத்துதல்
இயக்குபவர்ESA
காஸ்பார் குறியீடு2009-013A
சாட்காட் இல.34602
இணையதளம்www.esa.int/SPECIALS/GOCE/index.html
விண்கலத்தின் பண்புகள்
ஏவல் திணிவு1,077 கிலோகிராம்கள் (2,374 lb)
உலர் நிறை872 கிலோகிராம்கள் (1,922 lb)
பரிமாணங்கள்5.3 by 2.3 மீட்டர்கள் (17.4 அடி × 7.5 அடி)
திறன்1600 வாட்டுகள்
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்17 March 2009, 14:21:00 (2009-03-17UTC14:21Z) UTC[1]

ஜி.ஓ.சி.இ செயற்கைக் கோள்( Gravity Field and Steady-State Ocean Circulation Explorer (GOCE)) , புவி ஈர்ப்பு விசை மற்றும் கடல் மட்டங்களின் மாறுதல்களை அடையாளப்படுத்துவதற்காக ஐரோப்பாவின் விண்வெளி ஆய்வு நிலையமான ஈசா(ESA)வால் 2009-ம் ஆண்டு ஏவப்பட்ட செயற்கைக் கோளாகும்.[1] இந்த செயற்கைக் கோள் 4 வருட காலமாக பெருங்கடல், கடல் மட்டம், பனிப்பாலங்களின் செயல்பாடுகள் மற்றும் பூமியின் உட்புறம் குறித்த தகவல்களை ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பியது .பூமியின் ஈர்ப்பு விசை வேறுபாடுகளை முப்பரிமாணத்தில் வரை படமாக்கி ஆய்வு செய்யக் கூடிய இச்செயற்கைக் கோள் மார்ச் 2011 ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய டோஹோகூ பூகம்பத்தில் இருந்து வெளியேறிய ஒலியலைகளையும் கண்டு பிடித்துப் பதிவு செய்தது .[2] எரிபொருள் தீர்ந்துபோன நிலையில் காணப்பட்ட இந்த செயற்கைக் கோள் , 2013 , 11 நவம்பர் அன்று பூமியில் விழுந்தது .'விண்வெளியின் ஃபெராரி' என்று அழைக்கப்பட்ட இந்த செயற்கைகோள் தான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் பூமிக்குள் தானாக வந்துவிழுந்துள்ள முதலாவது ஐரோப்பிய செயற்கைக் கோள் என்று கருதப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "GOCE launched and in orbit". ESA. 17 மார்ச்சு 2009. Retrieved 13 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Earthquake detected from space". Nature. 5 மார்ச்சு 2013. Retrieved 13 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "ஐரோப்பிய செயற்கைக் கோள் பூமியில் விழுந்தது". பிபிசி. 11 நவம்பர் 2013. Retrieved 13 நவம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி.ஓ.சி.இ_செயற்கைக்_கோள்&oldid=4052445" இலிருந்து மீள்விக்கப்பட்டது