உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரேக்கத் தொன்மங்களில் குறிப்பிடப்படும் ஜிரியன் (Geryon[Note 1] மேலும் Geryone; கிரேக்கம்: Γηρυών , [Note 2]), என்பவன் மெடூசாவின் பேரனும் பெகாச்சின் மருமகனுமான கிரிசோர் மற்றும் காலிர்ரோவின் மகன் ஆவான். இவன் ஒரு பயங்கர அரக்கனாக குறிப்பிடப்படுகிறான். இவன் மத்திய தரைக்கடலின் தொலைவில் உள்ளதாக தொன்மங்களில் குறிப்பிடப்படும் ஹெஸ்பெரைடுகளின் எரித்யா தீவில் வசித்ததாக கூறப்படுகிறான். கிரேக்கர்களின் பிற்காலத் தலைமுறையினர் இப்பகுதியினை தெற்கு ஐபீரிய மூவலந்தீல் உள்ள டார்டெசோசுடன் தொடர்புபடுத்தினர். [Note 3] பெரும்பாலான கருத்துகளின்படி ஜெரியனுக்கு மூன்று தலைகள், ஆறு கைகள், இடுப்புவரை மூன்று உடல்கள் கொண்டவன் என்றும், இடுப்புக்குக் கீழே இரண்டு கால்கள் மட்டும் இருந்த ஒரு அரக்கன் என்று விவரிக்கப்படுகிறான். சில தொன்மங்களில் இவனுக்கு இரண்டு சிறகுகளும் இருந்தனவாகக் கூறப்பட்டிருக்கிறது. என்றாலும் இவன் பொதுவாக ஒரு மனிதனாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். இவனிடம் இருந்த கால்நடைகள் அழகுக்காக புகழ் பெற்றவை.

தோற்றம்[தொகு]

ஜிரியனுடன் சண்டையிடும் ஹெராக்கிள்ஸ்,  கிமு 540, காலத்திய சாடியில் உள்ள சித்தரிப்பு லூவர்

எசியோடு கூற்றின்படி [Note 4] ஜிரியனுக்கு ஒரு உடலும் அதில் மூன்று தலைகள் இருந்ததன. அதேசமயம் எஸ்கிலஸ் கூற்றின்படி இவனுக்கு மூன்று உடல்கள் உள்ளது என்றார். [Note 5] ஸ்டெசிகோரோஸின் விளக்கத்தின்படி, இவனுக்கு ஆறு கைகளும், சிறகுகளும் இருப்பதாகவும் கூறினார்; [1] ஆறாம் நூற்றாண்டின் நடுக்காலத்திய சில சால்சிடியன் மட்பாண்டங்களில் ஜிரியனை சிறகுகள் கொண்டவனாக சித்தரிக்கின்றன. சிலவற்றில் இவனுக்கு ஆறு கால்கள் இருந்தன என்றும், மற்றவற்றில் மூன்று உடல்களுக்கும் சேர்த்து இரு கால்கள் இருந்ததாகவும் சித்தரிக்கின்றன. இந்த வினோதமான அம்சங்களைத் தவிர, இவனது தோற்றம் ஒரு போர்வீரனுக்குரிய தோற்றமாக இருந்தது. இவனுக்குச் சொந்தமாக ஏராளமான சிவப்புநிற அழகிய கால்நடைகள் இருந்தன. இவற்றை இரட்டைத் தலை கொண்ட செர்பெரசு என்னும் நாயும், எரித்யாவின் மகன் யூரிஷன் என்பவனும் காவல் காத்துவந்தனர். [Note 6]

தொன்மவியல்[தொகு]

ஹெராக்கிள்ஸின் பத்தாவது வேலை[தொகு]

ஹீலியோஸ் அளித்தக் கிண்ணத்தில் கடலில் பயணிக்கும் ஹெராக்ஸ். கிரிகோரியானோ எட்ருஸ்கோ அருங்காட்சியகம், என். 205336.

ஹெராக்ளிஸின் தனது பத்தாவது வேலையான ஜிரியனின் கால்நடைகளை (Γηρυόνου βόες) கொண்டு வருவதற்காக எரிதியாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு செல்லும் வழியில், அவர் லிபிய பாலைவனத்தைக் கடந்து [Note 7] செல்கையில் வெப்பத்தால் மிகவும் வெறுப்புற்றார், சூரியக் கடவுளான ஹீலியோசை நோக்கி குறிவைத்து ஒரு அம்பை விட்டார். ஹீலியோஸ் தெய்வம் "அவரது தைரியத்தைப் பாராட்டி" ஹெராக்கிள்சுக்கு ஒவ்வொரு இரவும் மேற்கிலிருந்து கிழக்கே கடலில் பயணிக்கப் பயன்படுக்கூடிய தங்கக் கோப்பையை வழங்கினார். எரித்யாவை அடைய ஹெராக்கிள்ஸ் இதைப் பயன்படுத்தினார்.

ஹெராக்கிள்ஸ் எரித்யாவை அடைந்தார். அப்போது இரண்டு தலை முரட்டு நாயான ஆர்திரஸ் அவர் மீது பாய்வதற்காக ஓடி வந்தது. அவர் உடனே தன் கதையை கொண்டு அதை அடித்துக் கொன்றார். ஆர்திரசுக்கு உதவுவதற்காக அசுரனுடைய காவற்காரன் ஓடி வந்தான். அவனும் கதைக்கு இரையானான்.

சலசலப்பைக் கேட்ட ஜிரியன் மூன்று கேடயங்களையும், மூன்று ஈட்டிகளையும் ஏந்திக்கொண்டு, மூன்று தலைக்கவசங்களை அணிந்துகொண்டு வந்தான். ஹெர்க்குலிஸ் அவனுக்கு எதிராகப் பாயாமல், அவனுக்கு விலாப்புறத்தில் ஓடி நின்றுகொண்டு, தன்னிடமிருந்த லெர்னியன் ஐதராவின் நஞ்சு தோய்ந்த அம்புகளில் ஒன்றை வில்லிலே மாட்டி, அவனுடைய மூன்று உடல்களையும் ஒரே சமயத்தில் துளைக்கும்படியாக அதைச் செலுத்தினார். என்ன நடந்ததென்று அசுரன் உணர்ந்துகொள்ளுமுன்பே, நஞ்சு இவனுடைய மூன்று தலைகளுக்கும் ஏறிவிட்டதால், தரையிலே உருண்டு விழுந்துவிட்டான். [Note 8]

ஹெராக்கிள்ஸ் கால்நடைகளை ஓட்டிக்கொண்டு, ஹீலியஸின் கிண்ணத்தில் ஏறி யூரிஸ்தியசிடம் கொண்டுசெல்ல புறப்பட்டார். கதையின் ரோமானிய பதிப்பு விவரிப்பில், செல்லும்போது வழியில் ஹெரக்கிள்ஸ் இத்தாலியின் அவென்டைன் மலையில் தூங்கும்போது காகஸ் என்னும் அரக்கன் சில கால்நடைகளைத் திருடினான். மேலும் அக்கால்நடைகளை பின்னோக்கி நடக்கும்படி செய்து அழைத்துச் சென்றான். இதனால் அவை எந்த தடமும் இல்லாமல் போய்விட்டன. இது இளம் வயது எர்மெசின் தந்திரத்தை ஒத்ததாக உள்ளது. சில பதிப்புகளின்படி, ஹெராக்கிள்ஸ் மீதமுள்ள தனது கால்நடைகளுடன் ஒரு குகையை கடந்தார். அப்போது அங்கு காகசால் திருடப்பட்ட கால்நடைகள் மறைத்து வைக்கபட்டிருப்பதைக் கண்டார். இதன்பிறகு நடந்த மோதலில் ஹெரக்கிள்ஸ் காகஸைக் கொன்றார், ரோமானியர்களின் கூற்றுப்படி, அங்கு ஒரு பலிபீடத்தை ஹெரக்கிள்ஸ் நிறுவினார், அங்கு கால்நடை சந்தையான ஃபோரம் போரியம் நடைபெற்றது.

ஹெராக்கிள்சுக்குத் தொந்தரவு கொடுக்கும் விதமாக, ஹேரா கால்நடைகளை கடித்தும், எரிச்சலூட்டி விரட்டவும் கேட்ஃபிளை என்னும் பூச்சிகளை ஏவி அதன்படி கால்நடைகளை விரட்டினாள். இதன்பிறகு அந்தக் கால்நடைகளை ஹெராக்கிள்ஸ் ஒரு வருடத்திற்குள் மீட்டெடுத்தார். மீண்டும் கால்நடைகளை ஓட்டிச் செல்லும் வழியின் உள்ள ஆற்றில் ஹேரா வெள்ளத்தை பாயவைத்தாள். இது ஆற்றின் நீர்மட்டத்தை மிகவும் உயர்த்தியது. இதனால் ஹெராக்கிள்ஸ் கால்நடைகளுடன் அதைக் கடக்க முடியவில்லை. பின்னர் தண்ணீரை ஆழத்தைக் குறைக்க ஹெராக்கிள்ஸ் ஆற்றில் கற்களைக் குவித்தார். அவர் இறுதியாக யூரிஸ்தியசின் அவையை அடைந்தபோது, கால்நடைகள் ஹேராவுக்கு பலியிடப்பட்டன.

குறிப்புகள்[தொகு]

  1. "Geryon". Collins English Dictionary
  2. Also Γηρυόνης (Gēryonēs) and Γηρυονεύς (Gēryoneus).
  3. The early third-century Life of Apollonius of Tyana notes an ancient tumulus at Gades raised over Geryon as for a Hellenic hero: "They say that they saw trees here such as are not found elsewhere upon the earth; and that these were called the trees of Geryon. There were two of them, and they grew upon the mound raised over Geryon: they were a cross between the spruce and the pine, and formed a third species; and blood dripped from their bark, just as gold does from the Heliad poplar" (v.5).
  4. Hesiod, Theogony "the triple-headed Geryon".
  5. Aeschylus, Agamemnon: "Or if he had died as often as reports claimed, then truly he might have had three bodies, a second Geryon, and have boasted of having taken on him a triple cloak of earth, one death for each different shape."
  6. Erytheia, "sunset goddess" and nymph of the island that has her name, is one of the Hesperides.
  7. Libya was the generic name for North Africa to the Greeks.
  8. Stesichorus, fragment, translated by Denys Page.

மேற்கோள்கள்[தொகு]

  1. Scholiast on Hesiod's Theogony, referring to Stesichoros' Geryoneis (noted at TheoiProject).


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிரியன்&oldid=3067978" இலிருந்து மீள்விக்கப்பட்டது