ஜாலான் தம்புசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜாலான் தம்புசாமி (Jalan Thamboosamy) என்பது தம்புசாமி பிள்ளை எனும் மலேசியத் தமிழரின் நினைவாக விளங்கும் ஒரு சாலையின் பெயர். தம்புசாமி பிள்ளை மலேசியாவுக்கு ஆற்றியுள்ள சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்தச் சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது.

தம்புசாமி சாலை சௌக்கிட் பகுதியில் உள்ள தியோங் நாம் சீனக் குடியிருப்பு பகுதியையும் ஜாலான் பெத்ராவையும் இணைக்கின்றது. தம்புசாமி சாலை ஒரு தமிழரின் பெயரில் இருந்தாலும் அங்கு அதிகமான சீனர்கள் வாழ்கின்றனர். இந்தச் சாலைக்கு அருகாமையில் உள்ள ஜாலான் பெத்ராவில் மலாய்க்காரர்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. ஜாலான் தம்புசாமியில் ஒரு சீனர் கோயிலும் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சீனர்களின் Hungry Ghost Festival எனும் ’பசிப் பேய்’ திருவிழா நடைபெறுகிறது.[1]

இந்தச் சாலையில் இப்பொழுது அடிக்கடி கார் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. தவிர, மழைகாலங்களில் திடீர் வெள்ளமும் ஏற்படுகிறது என்று அப்பகுதியில் வாழும் கடைக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர். [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாலான்_தம்புசாமி&oldid=2171272" இருந்து மீள்விக்கப்பட்டது