ஜான் வி. எவான்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் வி. எவான்சு
பிறப்பு5 சூலை 1933 (அகவை 90)
படித்த இடங்கள்
பணிவானியல் வல்லுநர்
வேலை வழங்குபவர்

ஜான் வி. எவான்சு (John V. Evans, பிறப்பு: 5 சூலை 1933) என்பவர் இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்க வானியலாளர் ஆவார்.

ஜான் எவான்சு இங்கிலாந்து, மான்செசுட்டரில் 1933 இல் பிறந்தார். இவர் மான்செசுட்டர் பல்கலைக் கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். 1960 இல் இருந்து இவர் மசாசூசட் தொழில்நுட்பக் கழகத்தின் இலிங்கன் ஆய்வகப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[1]

இவர் கதிர்வீச்சு வானியலில் (Radio-Astronomy) பேரார்வம் காட்டினார். மின்னணு மண்டில மின்னன் அடர்த்தியை அளக்க, நிலாவின் நீண்ட அலைநேரக் கதிர் எதிரொளி மங்கலைப் பயன்படுத்தலாம் என்பதை நிறுவினார். இவர் ஜி.என்.டெய்லருடன் இணைந்து, வெள்ளி, நிலா இரண்டின் ரேடார் எதிரொளி ஆய்வை மேற்கொண்டார். 1975 இல் ஆப்பில்டன் பரிசு பெற்றார்.[1]

இவர் டி. ஏகுஃபோர்சுடன் இணைந்து ரேடார் வானியல் என்ற நூலை எழுதினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Evans, John V. (1933-)". scienceworld.wolfram.com. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2015.
  2. Evans, J. V. and Hagfors, T. (1968). Radar Astronomy. நியூயார்க்: McGraw-Hill. 

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_வி._எவான்சு&oldid=2734159" இலிருந்து மீள்விக்கப்பட்டது