ஜான் ரீட்
ஜான் ரீட் | |
---|---|
![]() ஜான் ரீட், அமெரிக்கப் பத்திரிகையாளர் | |
பிறப்பு | ஜான் சிலாசு ரீட் அக்டோபர் 22, 1887 போர்ட்லாந்து, ஒரிகன், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | அக்டோபர் 17, 1920 மாசுக்கோ, Russian SFSR | (அகவை 32)
இறப்பிற்கான காரணம் | Scrub typhus |
கல்லறை | Kremlin Wall Necropolis |
தேசியம் | அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆவார்டு பல்கலைக்கழகம் |
பணி | பத்திரிகையாளர் |
அரசியல் கட்சி | அமெரிக்கப் பொதுவுடமைத் தொழிற் கட்சி |
வாழ்க்கைத் துணை | லூய்சி பிரையன்ட் |
கையொப்பம் | ![]() |
ஜான் சிலாசு "ஜாக்" ரீட் (John Silas "Jack" Reed) (அக்டோபர் 22, 1887 – அக்டோபர் 17, 1920), ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரும், கவிஞரும், சோசலிசவாதியும் ஆவார். 1917 ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற போல்செவிக் புரட்சி குறித்த நேரடி அனுபவங்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்னும் நூல் தொடர்பில் இவர் பெரிதும் அறியப்படுகிறார். இவர் எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான லூய்சி பிரையன்ட் என்பவரை மணந்தார். ரீட் 1920ல் உருசியாவில் காலமானார். இவரது உடல் முக்கியமான உருசியத் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட செஞ் சதுக்கத்தில் கிரெம்ளின் சுவர் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த மதிப்பு இவர் உட்பட இரண்டு அமெரிக்கர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]ஜான் ரீட் ஒக்டோபர் 22, 1887 அன்று ஒரிகனின் போர்ட்லாந்து நகரிலுள்ள தனது பாட்டியின் மாளிகையில் சீனப் பணியாளர்களுடன்[1] பிறந்தார்.
படிப்பும் எழுத்துப் பணியும்
[தொகு]உயர்நிலைப் பள்ளி படிப்பு முடித்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார்.[2] ஹார்டுவர்டில் ஜான்ரீடு நான்கு ஆண்டுகள் இருந்தார். செல்வச் சீமான்களின் புதல்வர்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.பக்திமிக்க சமூகவியல் போதனாசிரியர்களின் விரிவுரைகளைக் கேட்டார். முதலாளித்துவ அரசியல் பேராசிரியர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டார். கோடீஸ்வர பிரபுக்களின் கோட்டையில் சோஷலிஸ்டு மன்றம் ஒன்றை அமைத்தார். மாணவராக இருக்கும்போதே லம்ப்பூன் என்ற நகைச்சுவை ஏட்டின் ஆசிரியராக இருந்தார் பெரிய செய்தியேடுகளில் சர்வதேச நிகழ்ச்சிகளை எழுதினார்.மெக்சிகோ குடியானவர் போராட்டம் நடத்திய செய்திகள் பற்றி மெட்ரோபாலிட்டன்மற்றும் புரட்சிகர மெக்சிகோ எனும் புத்தகத்திலும் எழுதினார்.
மூலதனத்தினை எதிர்த்து பீட்டர்சன் பாட்டாளி வர்க்கம் புரியும் போர் எனும் நாடகக் காட்சியை எழுதினார். புரட்சி யுகம், கம்யூனிஸ்ட் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.லிபரேட்டர்எனும் ஏட்டிற்கு கட்டுரைகள் எழுதுபவராகவும் இருந்தார். புதிய கம்யூனிஸ்ட் பத்திரிக்கையான தொழிலாளர் குரல் (Voice of labour)ஜான் ரீட்-ஐ ஆசிரியராக கொண்டிருந்தது. இறுதியாக,கர்னீலவ் முதல் பிரேஸ்த்-லித்தோஸ்ஸ்க் வரை என்ற புத்தகம் எழுதி முடிக்கும் முன்பு இறந்து விட்டார்.