உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் நூலின் அட்டைப்படம்.

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்பது சோசலிசவாதியும், அமெரிக்கப் பத்திரிகையாளருமான ஜான் ரீட் என்பவர் எழுதிய டென் டேய்ஸ் தட் சூக் த வேர்ல்ட் (Ten Days That Shook the World) என்னும் புகழ் பெற்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு ஆகும். ரா. கிருஷ்ணையா இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். உருசியாவில் 1917 அக்டோபரில் இடம்பெற்ற சோசலிசப் புரட்சியின் இறுதிப் பத்து நாட்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. ரீட் பல போல்செவிக் தலைவர்களோடு நெருக்கமாகத் தொடர்பில் இருந்தவர். இந்நூலில் உள்ள பெரும்பாலான விடயங்கள் ரீடின் நேரடி அநுபவங்களின் வாயிலாகப் பெறப்பட்டவை. இந்நூலை எழுதிமுடித்த சிலநாட்களிலேயே ரீட் விசக் காய்ச்சலினால் இறந்துவிட்டார். மாசுக்கோவில் சோவியத் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இவரது உடலும் அடக்கம்செய்யப்பட்டது.

நோக்கம்[தொகு]

"வீறுகொண்டு எழுந்த வரலாறு, கண்கொண்டு அதைக் கண்டேன். அந்த வரலாற்றில் ஒரு கீற்றே இந்தப் புத்தகம். நவம்பர் புரட்சியை[1] விவரமாய்ச் சித்தரிப்பதே அல்லாமல் இப்புத்தகம் வேறொன்றும் செய்ய முயலுவதாய்க் கூறிக்கொள்ளவில்லை." என்றவாறு இந்நூலுக்கு ரீட் எழுதிய முன்னுரையில் தெரிவித்துள்ளார்.[2] எனவே, தான் நேரடியாக அறிந்துகொண்ட தகவல்களையும், நம்பத்தகுந்த பிற மூலங்களில் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களையும் பயன்படுத்தி அக்டோபர் புரட்சிபற்றி விபரிப்பதே நூலாசிரியரின் நோக்கம் என்பது வெளிப்படை.

குறிப்புகள்[தொகு]

  1. இது அக்டோபர் புரட்சியையே குறிக்கிறது. ஜான் ரீட் இந்நூலில் நவம்பர் புரட்சியென்றே குறிப்பிடுகிறார். இதற்கான காரனம் தெரியவில்லை.
  2. ரீட், ஜான்., 1976, பக். 15.

உசாத்துணைகள்[தொகு]

  • ரீட், ஜான்., உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், மொழிபெயர்ப்பு: ரா. கிருஷ்ணையா, முன்னேற்றப் பதிப்பகம், 1976.