ஜான் டைலர் (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் டைலர்
பிறப்புசெப்டம்பர் 23, 1783(1783-09-23)
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு13 ஏப்ரல் 1824(1824-04-13) (அகவை 40)
அடக்கத்தலம்ஆங்கர் ,எசெக்ஸ், இங்கிலாந்து
தொழில்கவிஞர், புதின எழுத்தாளர்
இலக்கிய இயக்கம்கற்பனாவாதம்

ஜான் டைலர் (Jane Taylor (செப்டமபர் 23, 1783 – ஏப்ரல் 13, 1824)) என்பவர் ஆங்கில கவிஞர் மற்றும் புதின எழுத்தாளர் ஆவார். உலகப்புகழ் பெற்ற டுவிங்கிள், டுவிங்கிள், லிட்டில் ஸ்டார் எனும் பாடலை எழுதியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[1] முந்தைய காலங்களில் இவரும் இவருடைய சகோதரியும் அன் டைலரும் இணைந்து கவிதைகளை எழுதியதால் டுவிங்கிள் டுவிங்கிள் பாடலுக்குறிய ஆசிரியர் யார் என்பதில் பலமுறை குழப்பம் ஏற்படுவதுண்டு.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் செப்டமபர் 23, 1783இல் இலண்டனில் பிறந்தார். பின் தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் உள்ள லவென்ஹாமில் தங்கினார்.அங்கு தற்போதும் இவர் பிறந்த வீடானது கட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரின் தாய் அன் டைலரும் எழுத்தாளர் ஆவார். பின் ஜான் டைலர் கோல்செஸ்டரில் வாழ்ந்து வந்தார். அங்குதான் ஒலி இயைபு எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.[2] இருந்தபோதிலும் ஆன்கர் மற்றும் லன்ஹாமிலும் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இவருடைய தட்ந்தை ஐசக் டைலர் , செதுக்கு பணியாளர். ஓவியர் மற்றும் மந்திரி தாய் அன் டைலர் (1757-1830) நீதி மற்றும் மத போதனைகள் கொண்ட நூல் மற்றும் இரு புதினங்கள் உட்பட ஏழு நூல்களை எழுதியுள்ளார்.[3]

சான்றுகள்[தொகு]

  1. "ஜான் டைலர்-குறிப்பு". Unknown parameter |wesite= ignored (உதவி)
  2. Dutch Quarter
  3. ODNB entry for Taylor, Ann (1757–1830), by Robin Taylor Gilbert Retrieved 27 May 2013. Pay-walled.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டைலர்_(கவிஞர்)&oldid=2707404" இருந்து மீள்விக்கப்பட்டது