உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் இம்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் இம்ரே (John Imray) (11 சனவரி 1811 - 22 ஆகத்து 1880) என்பவர் இசுக்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவரும், சட்டமன்ற உறுப்பினரும், வேளாண்மை செய்பவரும், தாவரவியலாளரும் ஆவார்.

வாழ்க்கை

[தொகு]

1811 ஜனவரி 11 அன்று இசுக்கொட்லாந்தின் அங்கஸ், கிரேக் நகரில் ஜேம்ஸ் இம்ரே மற்றும் மேரி கீத் போர்டியஸ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1831 இல் எடின்பரோவில் உள்ள அரச கழக கல்லூரியில் மருத்துவப்பட்டம் பெற்றார்.[1] அடுத்த ஆண்டு டொமினிக்காவுக்குச் சென்று அங்கு ஏற்கனவே மருத்துவச் சேவை புரிந்து வந்த தனது மூத்த சகோதரர் கீத்துடன் சேர்ந்தார்.[2] "திறமை மற்றும் கடின உழைப்பால், இம்ரே விரைவில் டொமினிக்காவில் முன்னணி மருத்துவரானார்". மேலும் தனது வாழ்க்கை முழுவதும் அப்படியே இருந்தார்.[3]

மருத்துவப்பணிகள்

[தொகு]

இம்ரே தனது மருத்துவத் திறனை தாவரவியலாளரின் திறமையுடன் இணைக்க முடிந்தது. உதாரணமாக, 1848 ஆம் ஆண்டில் டொமினிக்கா தீவில் உள்ள எண்டெமிக் காய்ச்சலின் குணாதிசயங்கள் பற்றிய அவதானிப்புகளை வெளியிட்டார். இவர் சிகிச்சை செய்த பல நோயாளிகளின் விரிவான தினசரி கணக்கினை தெளிவுடன் எழுதினார். வழக்கமான சிகிச்சையானது கலோமெல், குயினின் மற்றும் கற்பூரத்தின் பல்வேறு சேர்க்கைகளைக் கொண்டு மலமிளக்கி தயாரிப்பது இதில் அடங்கும்.[4]

1862 இல் இம்ரே டொமினிகா தீவின் பயனுள்ள மரங்கள் என்ற நூலையும் வெளியிட்டார்.[5] ஏறக்குறைய 50 ஆண்டுகளாக [[அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ|கியூ, அரச கழக தாவரவியல் பூங்காவின் இயக்குநர்களான சர் வில்லியம் ஹூக்கர் மற்றும் அவரது மகன் ஆகியோருடன் தொடர்பில் இருந்தார். இவரது நினைவாக பல தாவரங்களுக்கு இவரது பெயரிடப்பட்டன. மேலும், டொமினிக்காவில் விவசாய கொள்கை மேம்பாடு, மற்றும் சுகாதாரம் வளர்ச்சியடைய கருவியாக இருந்தார்.

இறப்பு

[தொகு]

ஜான் இம்ரே திருமணம் செய்து கொள்ளவில்லை. 22 ஆகஸ்ட் 1880 அன்று செயின்ட் அரோமென்ட்டில் உள்ள தனது வீட்டில் வயிற்றுப்போக்கால் இறந்தார்.[6]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Surgical Examinations in Edinburgh". The Edinburgh Medical and Surgical Journal (North Bridge, Edinburgh: Adam Black) 36: 231. 1831. 
  2. Imray, Keith (1845). "Cases of Diabetes, with Observations, shewing the influence of a warm climate in the cure of that disease". The Edinburgh Medical and Surgical Journal (Edinburgh: Adam and Charles Black) 63: 65–. 
  3. "Obituary. The Honourable John Imray, M.D.". The British Medical Journal 2 (1033): 644. 16 October 1880. 
  4. Imray, John (1848). "Observations on the Characters of Endemic Fever in the Island of Dominica". The Edinburgh Medical and Surgical Journal 70: 253–287. 
  5. Imray M.D., John (1862). "The Useful Woods of the Island of Dominica". The Technologist 2: 382–391. 
  6. "Announcement", The Courier, Dominica, 23 August 1880
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_இம்ரே&oldid=3719915" இலிருந்து மீள்விக்கப்பட்டது