ஜானி டெப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜானி டெப்
JohnnyDeppApr2011.jpg
ஏப்ரல் 2011 ல் ஜானி டெப்.
பிறப்புஜான் கிறிஸ்டோபர் டெப் II
சூன் 9, 1963 (1963-06-09) (அகவை 59)
ஓவென்ஸ் போரோ, கென்டக்கி, அமெரிக்கா
பணிநடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1984–தற்போது
துணைவர்ஷெரிலின் ஃபென் (1985–88)
வினோனா ரைடர் (1989–93)
கேட் மோஸ் (1994–98)
வனேசா பராடிஸ்(1998–2012)
வாழ்க்கைத்
துணை
லோரி அன்னே அலிஸன் (1983–86)
பிள்ளைகள்லில்லி-ரோஸ் மெலடி டெப் (பிறப்பு 1999)
ஜான் கிறிஸ்டோபர் "ஜேக்" டெப் III (பிறப்பு 2002)[1]

ஜானி டெப் (Johnny Depp) என்பவர் ஓர் அமெரிக்க நடிகர். இவர் 1963 ஆம் ஆண்டு சூன் திங்கள் 9 ஆம் தேதி பிறந்தார். இவர் கோல்டன் குளோப் விருது மற்றும் சிறந்த நடிகருக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது வென்றுள்ளார். பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக உலகப் புகழ்பெற்றவர்.

தொழில் வாழ்க்கை[தொகு]

தொலைக்காட்சி[தொகு]

டெப், 1987 இல் வெளியான பாக்ஸ் தொலைக்காட்சி தொடரான 21 ஜம்ப் ஸ்ட்ரீட் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

திரைப்படம்[தொகு]

1992 ல் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜானி டெப்

டெப்பின் முதல் திரைப்படம் ”எ நைட் மேர் இன் எல்ம் இசுட்ரீட்” ஆகும். 2003 இல் வால்ட் டிஸ்னி கம்பனியின் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: தெ கர்ஸ் ஆப் தெ பிளாக் பெர்ல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.[2]

சார்லி அண்ட் தெ சாக்லேட் பேக்டரி படத்தில் சிறப்பாக நடித்ததால் இவருக்கு சிறந்த நடிகருக்கான எம்பயர் விருது வழங்கப்பட்டது. Johnny deep is legend இவர் கதை இல்லாமல் கூட படம் எடுப்பார் thing life ellamal padam etukka mattar

மேற்கோள்கள்[தொகு]

  1. "Baby boy for Depp and Paradis". BBC News. September 18, 2002. http://news.bbc.co.uk/2/hi/entertainment/1938099.stm. பார்த்த நாள்: November 21, 2008. 
  2. "Interview: Johnny Depp". MoviesOnline. ஜூலை 5, 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 3, 2006 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானி_டெப்&oldid=3573088" இருந்து மீள்விக்கப்பட்டது