ஜமீன் இருதாலய மருதப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இருதாலய மருதப்பரின் முன்னோர்கள் விசுவநாதர் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பாளையக் காரர்களாகவும், ஆங்கிலேயர் காலத்தில் சமீன்தாரர்களாகவும் வீற்றிருந்து ஊற்று மலையை ஆண்டு வந்தனர். மருதப்பர் என்பது இச்சமீன் தலைவர்களுக்கெல்லாம் பொதுப்பெயர். இது அம்பை வட்டத்தைச் சேர்ந்த திருப்புடைமருதூர் என்னும் தலத்திலுள்ள இறைவன் பெயராகும். இவர்கள் கொல்லம் ஆண்டு 349 முதல் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவை சிறப்பாக நடத்தி வந்தனர்.

புலவர் போற்றும் புரவலர்[தொகு]

      அண்ணாமலை ரெட்டியார, புளியங்குடி முத்துவீரக் கவிராயர், கடிைக முத்துப்புலவர், மாம்பழக் கவிச்சிங்கக் கவிராயர் முகவூர் கவிராயர்கள் உட்பட ஏராளமான புலவர்கள் இவரைப் போற்றிப் பாடியுள்ளனர். உ.வே.சாமிநாத ஐயர் இவரது அன்றாட பணிகளையும் தமிழ்ப் பணிகளையும் 'என் சரிதம்' என்ற தமது வாழ்க்கை வரலாற்று நூலில் புகழ்ந்துள்ளார்.

காவடிச் சிந்து[தொகு]

       இருதாலய மருதப்பர் கழுகுமலையிலுள்ள முருகன் கோவிலுக்கு காவடி எடுப்பது வழக்கம். அப்போது வழிநடை களைப்பு தெரியாமல் இருப்பதற்காகப் பாடப்பட்ட பாடல்களே காவடிச் சிந்தாகும். காவடிச் சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியாரிடம் இருதாலய மருதப்பர் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். சங்கரன்கோவில் தல புராணத்தைப் பாடிய சீவல மாற பாண்டியன் இவரது முன்னோராவர்.
 1. மேற்கோள்:
  நெல்லைத தமிழ் சான்றோர்கள், ஆசிரியர் நல்லையராஜ், காவியா வெளியீடு, சென்னை

முதல் பதிப்பு: 2011