ஊத்துமலை
ஊத்துமலை | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 8°59′30″N 77°31′54″E / 8.9916°N 77.5318°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
வட்டம் | வீரகேரளம்புதூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,737 |
மொழிகள் | |
• அதிகாரபூர்வமானவை | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
ஊத்துமலை (Uthumalai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் ஒரு கிராமம் ஆகும். இது தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம்புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது.[1]
வரலாறு
[தொகு]திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊத்துமலை பரப்பளவு அடிப்படையில் மிகப்பெரியது.
இந்த நிலங்கள் மெட்ராஸ் பிரசிடென்சியில் 1803 நிரந்தர குடியேற்றத்தின் ஒரு பகுதியாக அமைந்தன. மேலும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியால் (ஈ.ஐ.சி) ஜமீன்தாரி தோட்டமாக அங்கீகரிக்கப்பட்டது, இதன் அரண்மனை வீரகேரளம்புதூரில் இருந்தது.[2] 1823ஆம் ஆண்டில், இது 123 சதுர மைல்கள் (320 km2) பரப்பளவுடன், 14,612 மக்கள் தொகையுடன் இருந்தது.[3] நிர்வாக ரீதியாக 1917 இல் தென்காசி தாலுகாவில் இணைந்திருந்தது. அறுபத்து மூன்று கிராமங்களை உள்ளடக்கி மாவட்டத்தின் அனைத்து ஜமீன்தாரிகளில் மூன்றாவது பெரிய இடமாகும். 51,246 மக்கள் தொகையுடன் மதிப்பிடப்பட்டுள்ளது.1956 ஜமீன்தாரிமுறை ஒழிப்பின் படி தற்போது 2 ஆம் நிலை ஊராட்சியாக உள்ளது இங்கு பெரியகுளம் மற்றும் சின்னதான் குளம் என்று இரு குளங்கள் உள்ளது இதன் மூலம் விவசாயம் நடைபெறுகிறது மேலும் மழை அல்லாத சமயங்களில் வானம் பார்த்த பூமியாகவே அறியப்படுகிறது
புள்ளிவிவரங்கள்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் உத்துமலை 2168 வீடுகளையும் 7737 மக்கள்தொகையையும் கொண்டுள்ளது.இதில் 3788 ஆண்களும் 3949 பெண்களும் உள்ளனர். மக்களில் சிலர் பட்டியல் சாதியினரின் உறுப்பினர்களாக வகைப்படுத்தப்பட்டனர்; பட்டியல் பழங்குடியினரின் உறுப்பினர்கள் யாரும் இல்லை.[4]
பொருளாதாரம்
[தொகு]2011 ஆம் ஆண்டில் கிராமத்தின் பரப்பளவு 3,443 ஹெக்டேர் (8,510 ஏக்கர்), விவசாயம் உள்ளூர் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Revenue Administration". Tirunelveli District Administration. பார்க்கப்பட்ட நாள் 16 October 2018.
- ↑ Wives, Widows, and Concubines: The Conjugal Family Ideal in Colonial India. Indiana University Press.
- ↑ The Hollow Crown: Ethnohistory of an Indian Kingdom. University of Michigan Press.
- ↑ "Search Details". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 16 October 2018.
மேலும் படிக்க
[தொகு]- Baker, Christopher (January 1976). "Tamilnad Estates in the Twentieth Century". The Indian Economic & Social History Review 13 (1): 1-44. doi:10.1177/001946467601300101.
- Dirks, Nicholas B. (April 1986). "From Little King to Landlord: Property, Law, and the Gift under the Madras Permanent Settlement". Comparative Studies in Society and History 28 (2): 307–333. doi:10.1017/S0010417500013888. https://archive.org/details/sim_comparative-studies-in-society-and-history_1986-04_28_2/page/307.
- Seylon, Raman N. (2004). "Study of Poligar Violence in Late 18th Century Tamil Country in South India". African and Asian Studies 3 (3–4): 245–272. doi:10.1163/1569209332643692.