ச. ராஜாபாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ச. ராஜாபாதர் (27 மே 1916 - 9 பிப்ரவரி 1986) விடுதலைப் போராட்டத்திலும், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.[1][2]

பொதுவுடைமை இயக்கத்தில்[தொகு]

ராஜாபாதர் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த போது, மலேயா கணபதியுடன் ஏற்பட்ட நட்பினால் பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டார். இதனால், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மணலி கந்தசாமி மற்றும் ஏ. எம். கோபு ஆகியோருடன் விவசாய சங்க வேலைகளிலும் ஈடுபட்டார். பி. சீனிவாச ராவ் தலைமையில், பணி புரிந்தார். கைது செய்யப்பட்டு, மூன்று வருடம் சிறை சென்றார்.[சான்று தேவை]

சிறையிலிருந்து விடுதலை பெற்றவுடன், மறுபடியும் மயிலாடுதுறையில் பொதுவுடைமை இயக்கத்திலும், பொதுப்பணியிலும் ஈடுபட்டார். மயிலாடுதுறை வட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றார். நகரமன்ற உறுப்பினராக மூன்று முறை பணியாற்றினார்.[சான்று தேவை] 9 பிப்ரவரி 1986 அன்று இயற்கை எய்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ச சுபாஷ் சந்திர போஸ். பொதுவுடைமைப் போராளி ஏ. எம். கோபு, பக்கங்கள் 182 - 217. பாவை பதிப்பகம், சென்னை.
  2. த இந்திரஜித். வர்க்கப் போராளியின் வரலாற்றுச் சுவடுகள், பக்கங்கள் 102 - 118. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._ராஜாபாதர்&oldid=2717549" இருந்து மீள்விக்கப்பட்டது