சௌரா சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சௌரா சந்தை (Chaura Bazaar) இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் உள்ள ஒரு முக்கிய மற்றும் பழைய சந்தையாகும். இது லூதியானாவின் வணிக மையம் போன்று இயங்குகிறது.[1][2]

வரலாறு[தொகு]

சௌரா சந்தை 19 ஆம் நூற்றாண்டின் பழைய சந்தையாகும். சௌரா சந்தை தெருக்களில் சில பழைய கட்டிடங்கள் இன்னும் உள்ளன. லூதியானாவில் சட்லெச்சு ஆற்றின் கரையில் இச்சந்தை நிறுவப்பட்டது. "சௌரா சந்தை " என்றால் 'பரந்த சந்தை' என்று பொருளாகும். முந்தைய நாட்களில், சந்தையின் தெருக்கள் அகலமாக காணப்பட்டன. எனவே இந்த பரந்த தெருக்களில் இருந்ததால் இதன் பெயர் சௌரா சந்தை என்றானது. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் மக்கள்தொகை பெருக்கத்தால் தெருக்கள் மிகவும் குறுகலானவையாக மாறிவிட்டன. பகலில் வேகமாக தெருக்களை கடந்து செல்லமுடியாமல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குத்துச்சண்டை நாள் போலவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நெரிசல் மிகுந்த ஒரு சிறப்பு நாளாக அமைகிறது. திங்கட்கிழமை பெரும்பாலும் சந்தைக்கு விடுமுறையாகும். லூதியானாவில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது ஒரு பொருள் எங்கும் கிடைக்கவில்லை என்றால் அது சௌரா சந்தையில் இருந்து மட்டுமே கிடைக்கும் என்பது அப்பழமொழியாகும். பழைய லூதியானா நகரம் சௌரா சந்தை, தாரேசி, புரானா சந்தை மற்றும் காசு மண்டி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். முன்பு மக்கள் காசு மண்டியில் புல் விற்று வந்தனர். இன்று அது சற்று வெளிப்புறத்தில் நிகழ்கிறது. அந்த நேரத்தில் புல் ஒரு முக்கியமான பயன்படு பொருளாக இருந்தது, ஏனெனில் பெரும்பாலான போக்குவரத்து குதிரை வண்டிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. குதிரைகளுக்கு புல் மட்டுமே உணவாகவும் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chaura Bazaar may feature in Guddu Dhanoa's next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 Feb 2011 இம் மூலத்தில் இருந்து 2012-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120707160707/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-26/ludhiana/28636854_1_guddu-dhanoa-chaura-bazaar-first-movie. 
  2. "Illegal structures: MC trains guns on Chaura Bazaar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 Dec 2009 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103103244/http://articles.timesofindia.indiatimes.com/2009-12-29/ludhiana/28075525_1_temporary-encroachments-anti-encroachment-structures. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌரா_சந்தை&oldid=3742445" இலிருந்து மீள்விக்கப்பட்டது