சோவெனெல் மொயீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோவெனெல் மொயீசு
Jovenel Moïse
Kelly Craft poses a photo with Haitian President Moise (cropped).jpg
2019 இல் மொயீசு
எயிட்டியின் அரசுத்தலைவர்
பதவியில்
7 பெப்ரவரி 2017 – 7 சூலை 2021
முன்னவர் யோசெலெர்ம் பிரிவெர்த் (பதில்)
பின்வந்தவர் குளோட் யோசெப்பு (பதில்)
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 26, 1968(1968-06-26)
துரோ-டு-நோர்டு, எயிட்டி
இறப்பு 7 சூலை 2021(2021-07-07) (அகவை 53)
பேட்டியன்-வில்லா, எயிட்டி
இறப்பிற்கான
காரணம்
சுடப்பட்டுப் படுகொலை
அரசியல் கட்சி தெத் கேல் கட்சி[1]
வாழ்க்கை துணைவர்(கள்) மார்ட்டீன் மொயீசு (1996)
பிள்ளைகள் 3

சோவெனெல் மொயீசு (Jovenel Moïse; 26 சூன் 1968 – 7 சூலை 2021) எயிட்டியத் தொழிலதிபரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2017 முதல் 2021 இல் படுகொலை செய்யப்படும் வரை எயிட்டியின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.

2016 நவம்பர் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மொயீசு 2017 பெப்ரவரியில் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[2][3] 2019-ஆம் ஆண்டில், நாட்டில் அரசியல் குழப்பநிலை தோன்றியது. மொயீசு பதவி விலகுவதற்கான கோரிக்கைகள் நாட்டில் பெரும் நெருக்கடியாக மாறியது.[4][5]

2021 சூலை 7 அதிகாலையில், 28 பேர் அடங்கிய கும்பல் ஒன்று மொயீசின் இல்லத்தின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியது.[6] இதன்போது மொயீசு சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி மார்ட்டீன் படுகாயமடைந்தார்.[7][8] பதில் பிரதமர் குளோட் யோசப் தனது அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "அடையாளம் தெரியாத நபர்கள் மொயீசு மீது தாக்குதல் நடத்தியது, அவர்களில் சிலர் எசுப்பானிய மொழியில் பேசினர்" என்று குற்றம் சாட்டினார்.[9] மொயீசின் படுகொலையைத் தொடர்ந்து, இடைக்காலப் பிரதமர் குளோட் யோசப் நாட்டின் அதிகாரத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Our Campaigns – Political Party – Haitian Tèt Kale (PHTK)". மூல முகவரியிலிருந்து 7 July 2021 அன்று பரணிடப்பட்டது.
  2. cep_haiti (28 November 2016). "Résultats préliminaires des élections présidentielles du 20 Novembre 2016 pic.twitter.com/i9GsrkkU8p".
  3. Brice, Makini (29 November 2016). "Businessman Moise wins Haiti election in first round – provisional results". Port-au-Prince: ராய்ட்டர்ஸ். http://uk.reuters.com/article/uk-haiti-elecion-idUKKBN13O08L. 
  4. Padgett, Tim. "Moïse Mess: Haiti's Political Standoff – And Humanitarian Crisis – Won't Likely End Soon". மூல முகவரியிலிருந்து 8 October 2019 அன்று பரணிடப்பட்டது.
  5. "Miami Herald". மூல முகவரியிலிருந்து 6 October 2019 அன்று பரணிடப்பட்டது.
  6. "Haiti President Jovenel Moise assassinated in attack on his residence". மூல முகவரியிலிருந்து 7 July 2021 அன்று பரணிடப்பட்டது.
  7. EUGENE, Ody BIEN. "Le président Jovenel Moïse blessé mortellement lors d'une attaque armée, confirme le PM Claude Joseph – Juno7" (fr-FR). மூல முகவரியிலிருந்து 7 July 2021 அன்று பரணிடப்பட்டது.
  8. Ma, Alexandra. "The president of Haiti has been killed" (en-US). மூல முகவரியிலிருந்து 7 July 2021 அன்று பரணிடப்பட்டது.
  9. "Haiti - FLASH : President Jovenel Moïse Assassinated by mercenaries (official) Updated 7am + video - HaitiLibre.com : Haiti news 7/7" (7 July 2021). மூல முகவரியிலிருந்து 7 July 2021 அன்று பரணிடப்பட்டது.
  10. "The assassination of Haiti's president: What happened, and what could be next" (in en-US). Global News. https://globalnews.ca/news/8012305/haiti-president-assassinated-what-happened/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோவெனெல்_மொயீசு&oldid=3193501" இருந்து மீள்விக்கப்பட்டது