சோபா நாகி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோபா நாகி ரெட்டி
சட்டப் பேரவை உறுப்பினர்
தொகுதிஅல்லகட்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1968-11-16)16 நவம்பர் 1968
அல்லகட்டா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு24 ஏப்ரல் 2014(2014-04-24) (அகவை 45)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (2012-2014)
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்பூமா நாகி ரெட்டி
பிள்ளைகள்பூமா அகிலபிரியா உடபட இரண்டு மகள்கள், ஒரு மகன்

சோபா நாகி ரெட்டி (Shobha Nagi Reddy) (16 டிசம்பர் 1968 - 24 ஏப்ரல் 2014)[1] இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தனது கட்சியில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு காரணமாக ராஜினாமா செய்யும் வரை 2012 வரை நான்கு முறை ஆந்திரப் பிரதேசத்தின் சட்டமன்றத்தில் அல்லகட்டா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2] ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றிய அவர், பிரஜாராஜ்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும், முன்பு பொதுச் செயலாளராகவும், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும் இருந்தார். 2012 இல், இவர் பிரசா ராச்சியம் கட்சியிலிருந்து விலகி, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவரது கணவர் பூமா நாகி ரெட்டியும் ஒரு அரசியல்வாதி ஆவார். அவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

இறப்பு[தொகு]

23 ஏப்ரல் 2014 அன்று தனது 45 வயதில் ஒரு வாகன விபத்தில் இறந்தார்.[3] இதைத் தொடர்ந்து இவரது கணவர் பூமா நாகிரெட்டியும், 12 மார்ச் 2017 அன்று மாரடைப்பில் இறந்தார். இவர்களுக்கு அரசியல்வாதியான பூமா அகிலபிரியா உட்பட மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhuma Shobha Nagireddy No More". Filmcircle. Archived from the original on 26 ஏப்பிரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்பிரல் 2014.
  2. "Shobha submits fresh resignation". Expressbuzz. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2012.
  3. "Bhuma, Sobha Nagireddy Declared Dead". Tollywooddaily (Hyderabad, India). 24 April 2014 இம் மூலத்தில் இருந்து 26 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140426235853/http://filmcircle.com/yrcp-leader-sobha-nagireddy-died-in-an-accident/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபா_நாகி_ரெட்டி&oldid=3926370" இலிருந்து மீள்விக்கப்பட்டது