சோபா நகரப் பேரங்காடி
Appearance
![]() இரவு நேரத்தில் சோபா நகரப் பேரங்காடி | |
இருப்பிடம்: | இந்தியா, திருச்சூர், புழாக்கல் |
---|---|
அமைவிடம் | 10°33′00″N 76°10′59″E / 10.549886°N 76.183081°E |
திறப்பு நாள் | 17 December 2015[1][2] |
உரிமையாளர் | சோபா நிறுவனம் |
கட்டிடக் கலைஞர் | y |
மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 450,000 சதுர அடிகள் (42,000 m2)[1][2] |
தள எண்ணிக்கை | 3 |
வலைத்தளம் | www.sobhacity.co.in |
சோபா நகரப் பேரங்காடி (Sobha City Mall) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் நகரத்தின் புழாக்கல் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகம் 2015 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 17 அன்று திறக்கப்பட்டது.[1][2] வணிக வளாகம் 4.7 ஏக்கர் (1.9 எக்டேர்) நிலத்தில் கட்டப்பட்டு 450,000 சதுர அடி (42,000 சதுர மீட்டர்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[1][2] பேராங்காடி முற்றிலுமாக மையமாக குளிரூட்டப்பட்டிருக்கிறது. ஐனாக்சு லீசர் நிறுவனத்தின் ஆறு திரையரங்குகள் இப்பேரங்காடியில் இயங்குகின்றன. ஆடம்பர வணிக உணவு விடுதிகள், அலுவலக இடம், உணவகங்கள் மற்றும் 600 கார்களை நிறுத்தும் வசதியை சோபா நகரப் பேரங்காடி வழங்குகிறது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Sobha City Mall".
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Sobha City Mall Details".
- ↑ "Sobha City Mall: Thrissur, Kerala's cultural capital, gets a new landmark". Zee News. 18 December 2015. http://zeenews.india.com/news/kerala/sobha-city-mall-thrissur-keralas-cultural-capital-gets-a-new-landmark_1835809.html. பார்த்த நாள்: 20 August 2018.
- ↑ "Sobha City in Thrissur by 2011". Projects Monitor. Retrieved 2012-01-08.