சோனியா அக்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனியா அக்தர்
Sonia Aktar
தனிநபர் தகவல்
தேசியம்வங்காளதேசி
பிறப்பு15 சூலை 1997 (1997-07-15) (அகவை 26)
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்

சோனியா அக்தர் தும்பா (Sonia AktarTumba) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒரு நீச்சல் வீராங்கனையாவார். 1997 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

2016 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி செனிரோ நகரத்தில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் கட்டற்ற வகை நீச்சல் போட்டியில் போட்டியிட்டார். அங்கு இவர் 29.99 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 69 ஆவது இடத்தைப் பிடித்தார்.[1] இப்போட்டியில் சோனியா அக்தர் தும்பா அரையிறுதிக்கு முன்னேறவில்லை.

2022 ஆம் ஆண்டில் அங்கேரி நாட்டின் புடாபெசுட்டு நகரத்தில் நடைபெற்ற உலக நீர்விளையாட்டு வெற்றியாளர் போட்டிகளில் கலந்து கொண்டு வங்காளதேச நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sonia Aktar". rio2016.com. Archived from the original on 6 August 2016. பார்க்கப்பட்ட நாள் 12 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனியா_அக்தர்&oldid=3918038" இலிருந்து மீள்விக்கப்பட்டது