சோடியாக் கொலைகாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியாக் கொலைகாரன்Zodiac Killer
சோடியாக் கொலையாளி கடிதத்தில் கையெழுத்திட பயன்படுத்திய சின்னம்
Killings
பாதிக்கப்பட்டோர்:5 உறுதிசெய்யப்பட்ட இறப்புகள், 2 பேர் காயம், 20-28 பேர் இறந்திருக்கலாம் (37 பேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது)
Span of killings:1960கள்–1970கள்
நாடு:ஐக்கிய அமெரிக்கா
State(s):கலிபோர்னியா, நெவாடாவில் கூட இருக்கலாம்

சோடியாக் கொலைகாரன் (Zodiac Killer), என்பவன் 1960 களின்  இறுதியிலிருந்து 1970 களின் தொடக்கம் வரை வட கலிஃபோர்னியா மாகாணத்தில் தொடர் கொலைகளை செய்தவன். கொலைகாரனின் அடையாளம் தெரியவில்லை. 1968 திசம்பர் மற்றும் 1969 அக்டோபருக்கு இடைபட்டக் காலத்தில் பெனிசியா, வால்லோஜோ, ஏரி பெர்ரிஸ்சா, சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களால் இவனால் பாதிக்கப்புக்குள்ளாகி கொல்லப்பட்டனர். இவனால் 16 முதல் 29 வயதுக்கு உட்பட்ட நான்கு ஆண்களும் மூன்று பெண்களும் குறி வைக்கப்பட்டனர். கொலையாளி தந்திரமாகவும் மறைமுகமாகவும் குற்றத்தை உறுதி செய்யும் கடிதங்களை வரிசையாக உள்ளூர் பத்திரிக்கைக்கு அனுப்பி, சோடியாக் (zodiac) என்னும் பெயரைத் தன் அடையாளமாக்கினான். அந்தக் கடிதங்களில் நான்கு குறிப்புகளை (புதிர்) அனுப்பி இருந்தான். அவற்றில் ஒன்றுக்கு மட்டுமே சரியாகத் தீர்வுக் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[1]

சட்ட அமலாக்க மற்றும் தன்னார்வ ஆய்வாளர்கள் சந்தேக நபர்களின் பெயர்களை குறித்தனர், ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லை. சான் பிரான்சிஸ்கோ காவல்துறை (SFPD) 2004 இல் இவ்வழக்கை "செயலற்றது" (inactive) என்று குறிப்பிட்டது, ஆனால் 2007 மார்சில் இந்த கோப்பு மீண்டும் திறக்கப்பட்டது.[2][3] மேலும் இந்த வழக்கானது வால்லோஜோ நகரம், நாபா கவுண்டி, சோலனோ கவுண்டி ஆகிய இடங்களிலும் மீண்டும் திறக்கப்பட்டது.[4] கலிஃபோர்னியா துறை நீதிபதி 1969 முதல் இந்த படுகொலைகள் வழக்குகள் குறித்த ஆவணங்களை பராமரித்துவருகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zodiac Letters". Zodiackiller.com. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 9, 2011.
  2. SFPD News Release, March 2007
  3. "Zodiac: The killer who will not die". Archived from the original on ஆகத்து 24, 2011.
  4. Napa PD Website, Vallejo PD Website and "Tipline," Solano County Sheriff's Office
  5. California Department of Justice Website
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியாக்_கொலைகாரன்&oldid=3587075" இலிருந்து மீள்விக்கப்பட்டது