சோடியம் மூவெத்தில்போரோ ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோடியம் மூவெத்தில்போரோ ஐதரைடு
இனங்காட்டிகள்
17979-81-6
பண்புகள்
C6H16BNa
வாய்ப்பாட்டு எடை 122.02
தோற்றம் வெண்மையான திண்மம்
உருகுநிலை
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உடனடியாகத் தீப்பற்றும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சோடியம் மூவெத்தில்போரோ ஐதரைடு (Sodium triethylborohydride) என்பது NaBH(C2H5)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இக்கரிம போரான் சேர்மம் நிறமற்றதாகவும், காற்றில் தீப்பற்றும் திண்மமாகவும் காணப்படுகிறது. இலித்தியம் மூவெத்தில்போரோ ஐதரைடு (LiBH(C2H5)3) போல டெட்ரா ஐதரோ பியூரான் கரைசல் என்ற பெயரில் விற்கப்படாமல், சோடியம் மூவெத்தில்போரோ ஐதரைடு தொலுயீன் கரைசலில் வைக்கப்பட்டு வர்த்தக ரீதியாக விற்கப்படுகிறது. பொதுவாக உலோக ஆலைடுகளை ஐதரைடுகளாக மாற்றும் செயல்முறையில், ஒருபடித்தான வினையூக்க வினையை குறைத்துச் செயலூக்கம் நிகழ்த்த இதைப் பயன்படுத்துகிறார்கள். சூடான சோடியம் ஐதரைடின் தொலுயீன் நீர்மக்குழம்புடன் மூவெத்தில்போரேன் சேர்த்து சூடாக்குவதால் சோடியம் மூவெத்தில்போரோ ஐதரைடு உருவாகிறது [1]. டிரைமெத்தில்போரோ ஐதரைடு படிவரிசையில், கட்டமைப்பு அடிப்படையில் டிரையெத்தில்போரோ ஐதரைடுடன் ஒத்திருப்பதாக நம்பப்படும் இச்சேர்மம் தொலுயீன் கரைசலில் நான்குபகுதி கட்டமைப்பை ஏற்றுள்ளது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Binger, P.; Köster, R., "Sodium triethylhydroborate, sodium tetraethylborate, and sodium triethyl-1-propynylborate", Inorg. Synth. 1974, 15, 136-141. எஆசு:10.1002/9780470132463.ch31
  2. Bell, N. A.; Coates, G. E.; Heslop, J. A., "Sodium hydridotrimethylboronate and its ether solvate. Study of hydridotrialkylboronates as reagents for the preparation of beryllium hydrides", J. Organomet. Chem. 1987, volume 329, 287-291. எஆசு:10.1016/0022-328X(87)80062-1.

.