சோடியம் பென்சீன்சல்போனேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
515-42-4 | |
ChemSpider | 10139 |
DrugBank | DB7350000 |
EC number | 208-198-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 517327 |
| |
UNII | K5RM14AZHX |
பண்புகள் | |
C6H5NaO3S | |
வாய்ப்பாட்டு எடை | 180.15 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 450 °C (842 °F; 723 K) சிதைவு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் பென்சீன்சல்போனேட்டு (Sodium benzenesulfonate) என்பது C6H5SO3Na என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் நீரில் கரையும் உப்பாகக் காணப்படுகிறது. பென்சீன்சல்போனிக் அமிலத்துடன் சோடியம் ஐதராக்சைடை சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தினால் சோடியம் பென்சீன்சல்போனேட்டு உருவாகும். சில அழுக்குநீக்கிகளில் இது ஒரு பொதுவான மூலப்பொருளாகவும் உள்ளது. பொதுவாக நீரிலிருந்து இச்சேர்மம் ஒற்றை நீரேற்றாகப் படிகமாகிறது.[1]
சோடியம் பென்சீன்சல்போனேட்டு உப்பை வலிமையான காரத்துடன் சேர்த்து சூடாக்கினால் சல்போனிக் அமில நீக்கம் நிகழ்கிறது. தொடர்ந்து அமிலத்தின் வினையால் பீனால் கிடைக்கிறது. இந்த வினை ஒரு காலத்தில், பீனாலுக்கான முக்கிய தயாரிப்பு முறையாக இருந்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Otto Lindner, Lars Rodefeld (2005), "Benzenesulfonic Acids and Their Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a03_507
- ↑ W. W. Hartman (1923). "p-Cresol". Organic Syntheses 3: 37. doi:10.15227/orgsyn.003.0037.