சோடியம் புரோப்பனோயேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் புரோப்பனோயேட்டு[1]
Sodium propanoate.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் புரோப்பனோயேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் புரோப்பியோனேட்டு
நாப்ரோபியோன்
இ281
இனங்காட்டிகள்
137-40-6 Yes check.svgY
ChEBI CHEBI:132106 N
ChEMBL ChEMBL500826 Yes check.svgY
ChemSpider 8399 Yes check.svgY
EC number 205-290-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8724
UNII DK6Y9P42IN Yes check.svgY
பண்புகள்
C3H5NaO2
வாய்ப்பாட்டு எடை 96.060 கி/மோல்
தோற்றம் ஒளியூடுறுவும் படிகங்கள்
மணம் இலேசான அசிட்டிக்-பியூட்டைரிக் நெடி
உருகுநிலை
1 கி/மி.லி
கரைதிறன் எத்தனால் (1 கி/24 மி.லி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சோடியம் புரோப்பனோயேட்டு (Sodium propanoate) என்பது Na(C2H5COO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் புரோப்பியோனேட்டு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைப்பர். புரோப்பியோனிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் புரோப்பனோயேட்டு எனப்படுகிறது. வெண்மை நிறப் படிகங்களாகக் காணப்படும் இச்சேர்மம் ஈரக்காற்றிலுள்ள நீரை உறிஞ்சும் நீருறிஞ்சியாகக் கருதப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

புரோப்பியோனிக் அமிலத்துடன் சோடியம் கார்பனேட்டு அல்லது சோடியம் ஐதராக்சைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் சோடியம் புரோப்பனோயேட்டு உருவாகிறது.

பயன்கள்[தொகு]

ஐரோப்பிய யூனியன்[2], அமெரிக்கா[3], ஆத்திரேலியா, நியூசிலாந்து[4] போன்ற நாடுகளில் உணவு பாதுகாப்புப் பொருளாக சோடியம் புரோப்பனோயேட்டு பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பாவில் அனுமதிக்கப்படும் உணவு கூட்டுப்பொருட்களுக்கு வழங்கப்படும் எண் இதற்கு இ281 என வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுமனை தொழிலில் ரொட்டி உற்பத்தியில் வார்ப்பு தடுப்பியாக இதைப் பயன்படுத்துகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index, 11th Edition, 8623.
  2. UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". 2011-10-27 அன்று பார்க்கப்பட்டது.
  3. US Food and Drug Administration: "Listing of Food Additives Status Part II". 2011-10-27 அன்று பார்க்கப்பட்டது.
  4. Australia New Zealand Food Standards Code"Standard 1.2.4 - Labelling of ingredients". 2011-10-27 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]