சோடியம் சிடானேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோடியம் சிடானேட்டு
White powder of sodium stannate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் எக்சாஐதராக்சோசிடானேட்டு(IV)
வேறு பெயர்கள்
டைசோடியம் எக்சா ஐதராக்சிடின்
சோடியம் சிடானேட்டு(IV)
சோடியம் சிடானேட்டு–3–நீர்
சோடியம் வெள்ளீய(IV) ஆக்சைடு நீரேற்று
இனங்காட்டிகள்
12027-70-2
பண்புகள்
H6Na2O6Sn
வாய்ப்பாட்டு எடை 266.73 கி/மோல்
தோற்றம் நிறமற்ற அல்லது வெண்மை
அடர்த்தி 4.68 கி/செ.மீ3
கொதிநிலை அறியப்படவில்லை
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1][1]
H300 + H310 + H330 + H410
தீப்பற்றும் வெப்பநிலை 57 °C (135 °F; 330 K)
Autoignition
temperature
இல்லை
Lethal dose or concentration (LD, LC):
2132 மி.கி/கி.கி [சுண்டெலி]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சோடியம் சிடானேட்டு (sodium stannate) என்பது H6Na2O6Sn அல்லது Na2[Sn(OH)6] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். முன்னதாக இச்சேர்மத்தை எக்சா ஐதராக்சோசிடானேட்டு(IV) என்ற பெயராலும் அழைத்தனர். வெள்ளீயம் உலோகம் அல்லது வெள்ளீய(IV) ஆக்சைடை சோடியம் ஐதராக்சைடில் கரைத்து நிறமற்ற இவ்வுப்பு உருவாக்கப்படுகிறது. ஐதரசன்பெராக்சைடு நிலைநிறுத்தியாக இது பயன்படுத்தப்படுகிறது [2].

முற்கால பழைய புத்தகங்களில் சிடானேட்டுகள் என்பவை சிலசமயங்களில் எளிய ஆக்சியெதிர்மின் அயனியைக் (SnO32−) கொண்டிருக்கும் சேர்மங்களைக் குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் இச்சேர்மத்தை சோடியம்-சிடானேட்டு-3-நீர் என்றனர். மூன்று படிக உள்நீர் கொண்ட நீரேற்று என்று பொருள்படும் வகையில் Na2SnO3•3H2O என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டால் குறிப்பிட்டனர் [1]. நீரிலி வடிவ சோடியம் சிடானெட்டு Na2SnO3 ஒரு தனித்த சேர்மமாகவே கருதப்பட்டு சிஏஎசு எண் 12058-66-1 என்று வழங்கப்பட்டுள்ளது [3] 12058-66-1 ,. மேலும், தனித்த பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் பராமரிக்கப்படுகிறது [4].

தனிமநிலை வெள்ளீயத்தை பொருத்தமான உலோக ஐதராக்சைடில் கரைத்து கார உலோக சிடானேட்டு சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன. சோடியம் சிடானேட்டு தயாரிக்க வேண்டுமெனில் பின்வரும் வினை நிகழ்கிறது :[5].

Sn   +   2 NaOH   +   4 H2O   →   Na2[Sn(OH)6]   +   2 H2

வெள்ளீயம் டையாக்சைடை ஒரு காரத்தில் கரைக்கும்போதும் இதைப்போன்ற ஒரு வினையே நிகழ்கிறது.

SnO2   +   2 NaOH   +   2 H2O   →   Na2[Sn(OH)6]

வெள்ளீயம் டையாக்சைடை சோடியம் கார்பனேட்டுடன் சேர்த்து கார்பனோராக்சைடு/கார்பனீராக்சைடு சுழலில் வறுத்தால் நீரிலி வடிவ சோடியம் சிடானெட்டு உருவாகிறது :[6].

SnO2   +   Na2CO3   →   Na2SnO3   +   CO2

எக்சாகுளோரோசிடானெட்டு எதிர்மின் அயனி ( [SnCl6]2−) போன்ற பிற சிடானேட்டுகள் போல இந்த எதிர்மின் அயனி எண்முக வடிவிலான ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். Sn—O பிணைப்பின் பிணைப்புத் தூரம் 2.071 Å ஆகும் [7].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Material Safety Data Sheet – sodium stannate trihydrate MSDS". Science Lab (21 May 2013). பார்த்த நாள் 1 June 2017.
  2. John Drury Clark (1972). Ignition! An Informal History of Liquid Rocket Propellants. Rutgers University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0813507251. 
  3. National Center for Biotechnology Information (2017). "Sodium Stannate". பப்கெம். பார்த்த நாள் 1 June 2017.
  4. "Sodium Stannate MSDS". Santa Cruz Biotechnology (14 June 2011). பார்த்த நாள் 1 June 2017.
  5. Norman Greenwood; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0750633654. 
  6. Zhang, Yuanbo; Su, Zijian; Liu, Bingbing; You, Zhixiong; Yang, Guang; Li, Guanghui; Jiang, Tao (2014). "Sodium stannate preparation from stannic oxide by a novel soda roasting–leaching process". Hydrometallurgy 146: 82–88. doi:10.1016/j.hydromet.2014.03.008. 
  7. Jacobs, Herbert; Stahl, Rainer (2000). "Neubestimmung der Kristallstrukturen der Hexahydroxometallate Na2Sn(OH)6, K2Sn(OH)6 und K2Pb(OH)6" (in German). Z. Anorg. Allg. Chem. 626 (9): 1863–1866. doi:10.1002/1521-3749(200009)626:9<1863::AID-ZAAC1863>3.0.CO;2-M. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_சிடானேட்டு&oldid=2486439" இருந்து மீள்விக்கப்பட்டது