உள்ளடக்கத்துக்குச் செல்

சோகினி ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோகினி ரே
பிறப்பு25 ஆகத்து 1966 (அகவை 57)
கொல்கத்தா
பணிமானிடவியலர்

சோகினி ரே (Sohini Ray) (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1966) இவர் ஓர் பாரம்பரிய மணிப்புரி நடனக் கலைஞர் ஆவார். [1] [2] இவர் இந்தியாவில் இருந்து சென்று தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஒரு நடன-ஆராய்ச்சியாளரும் மற்றும் மானுடவியலாளருமாவார் .

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

குரு பிபின் சிங், தர்சனா ஜாவேரி மற்றும் கலாவதி தேவி ஆகியோரின் கீழ் கொல்கத்தாவின் மணிப்புரி நர்ததனாலயாவில் ஏழு வயதிலிருந்து ரே மணிப்பூரி நடனம் பயின்றார். இவர் தனது பதினொரு வயதில் குரு பிபின் சிங்குடன் தனது பதினான்கு வயதில் அரங்கேற்றத்தைத் துவக்கி தொழில் ரீதியாக செயல்படத் தொடங்கினார். [3] இவர் பதினான்கு வயதிலிருந்தே குரு பிபின் சிங்கின் ஆராய்ச்சிக்கு உதவியாளராகவும் இருந்தார், மேலும் 1982 ஆம் ஆண்டில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்திலிருந்து மணிப்புரி நடனத்தில் தேசிய உதவித்தொகையைப் பெற்றார். ஒரே நேரத்தில் கொல்கத்தாவின் நவீன உயர்நிலைப் பள்ளியில் இருந்து தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அங்கு இவர் பள்ளி விழாக்களிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.

கல்வி வாழ்க்கை[தொகு]

ரே தனது அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை முடித்துள்ளார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் பட்டமும் பெற்றார். பின்னர், நடனத்தில் முதுகலை மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முனைவர் (சனாமகிசம்) பட்டமும் பெற்றார். உலக மதங்களின் ஆய்வு மையம், ஹார்வர்ட் தெய்வீக பள்ளி [4] மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம், மனிதநேய ஆராய்ச்சி நிறுவனம், இர்வின், கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஆகியவற்றில் ஆசிரியராக இருந்தார். இவர் இர்வின், கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டா பார்பரா கலிபோர்னியா பல்கலைக்கழகம், [5] மற்றும் சாண்டா மோனிகா கல்லூரி ஆகியவற்றில் கற்பித்தவர் மற்றும் பல வெளியீடுகளைக் கொண்டுள்ளார்.

நடன வாழ்க்கை[தொகு]

சோகினி ரே தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மணிப்புரி நடன நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கலை இயக்குநராக உள்ளார். [6] பாரம்பரியாமான மணிப்புரி நடனத்தில் ஹராவ்-கும்மி: மணிப்பூரி நடனத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள், கீதை-கோவிந்தா, [7] கிருஷ்ணா-நிங்சிங்பா ஆகிய பல நடனங்களை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற இடங்களில் நிகழ்த்தியுள்ளார். இதற்காக இவரே இயக்கி நடனமாடியுள்ளார். [8]

சாண்டா மோனிகா[தொகு]

சாண்டா மோனிகா கல்லூரி என்பது கலிபோர்னியாவில் அதிக மதிப்பீடு பெற்ற ஜூனியர் கல்லூரி ஆகும். இது கடந்த இருபது ஆண்டுகளாக மாநிலத்தில் மிக உயர்ந்த பரிமாற்ற வீதத்தை பராமரித்து வருகிறது. சோகினி ரே சாண்டா மோனிகா கல்லூரியில் முதல் மொழியியல் மானுடவியல் பாடத்திட்டத்தை நிறுவினார்.

கல்வி விருதுகள் மற்றும் சாதனைகள்[தொகு]

1988இல் இந்தியாவின் கொல்கொத்தா கல்கத்தா பல்கலைக்கழகம், ஜூபிலி பரிசு வழங்கியது. [9] 1988 இந்தியாவின், கொல்கத்தா பல்கலைக்கழகத்திடமிருந்து தேசிய உதவித்தொகை கிடைத்தது. 2011இல் கொல்கத்தா பல்கலைக்கழகதிசினை வழங்கியது. [10]

நடன விருதுகள் மற்றும் சாதனைகள்[தொகு]

1982-1986 முதல் இந்திய அரசிடமிருந்து தேசிய உதவித்தொகை பெற்றார். [9]
1988இல் நடந்த சங்கீதோத்ஸவ் என்ற நிகழ்ச்சியில் மணிப்புரி நடனத்தில் முதல் பரிசு பெற்றார்.
1988இல் மும்பையில் நடைபெற்ற கல்-கே-கலகார் சங்கீத் சம்மேலனத்தில் சிருங்கார-மணி விருது கிடைத்தது.
1999இல் கொல்கத்தா, மணிபுரி நர்த்தனாலயா என்ற அமைப்பு நாரதன் ஆச்சார்யா என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
2007இல் கலிபோர்னியா பாரம்பரிய இசைச் சங்கம், எலைன் வெய்ஸ்மேன் லாஸ் ஏஞ்சல்ஸ் புதையல் விருது வழங்கியது. [11]
2007இல் லெஸ்டர் ஹார்டன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
2008இல் லெஸ்டர் ஹார்டன் விருது வெற்றியாளரானார். [12]
2010இல் லெஸ்டர் ஹார்டன் விருதுக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டார்.

குறிப்புகள்[தொகு]

 1. Manipuri Dance and Culture - A World Heritage. "Manipuri Dance and Culture - A World Heritage". Medhajournal.com. Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
 2. [Devotional Dance by Chris Shull 2008-04-25, Page 15D, The Wichita Eagle]
 3. {{Cite web|url=http://www.medhajournal.com/index.php?option=com_content&view=article&id=488:manipuri-dance-and-culture-a-world-heritage&catid=91:cultural-heritage&Itemid=210%7Ctitle=Manipuri Dance and Culture - A World Heritage|last=Manipuri Dance and Culture - A World Heritage|date=|publisher=Medhajournal.com|archive-url=https://web.archive.org/web/20110714064730/http://www.medhajournal.com/index.php?option=com_content&view=article&id=4
 4. "Harvard Divinity School - Center for the Study of World Religions - Past Affiliates N-R". Hds.harvard.edu. 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
 5. "Ucsb | Theater | Dance". Theaterdance.ucsb.edu. 2011-10-31. Archived from the original on 2012-12-10. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
 6. "Manipuri tradition flourishes - Los Angeles Times". Articles.latimes.com. 1999-12-17. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
 7. "EducationWatch: ARIMM Hosts Conference". GRAMMY.com. 2008-10-14. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
 8. "Manipuri dance was a choice beyond me". 2013-01-22. பார்க்கப்பட்ட நாள் 2013-08-11.
 9. 9.0 9.1 Manipuri Dance and Culture - A World Heritage. "Manipuri Dance and Culture - A World Heritage". Medhajournal.com. Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
 10. "J.B. Donne Essay Prize on the Anthropology of Art Past recipients". Therai.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
 11. [Khokar, Ashish Mohan Attendance Dance annual of India 2007, pg 11]
 12. "Horton Awards Past Winners - Dance Resource Center of Los Angeles and Southern California". Drc-la.org. Archived from the original on 2013-06-02. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகினி_ரே&oldid=3794596" இலிருந்து மீள்விக்கப்பட்டது