சைவ சமயக் கலைக்களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவசமயக் கலைக்களஞ்சியம் என்பது 2006 ஆண்டு முதல் 2012 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் சேக்கிழார் மனித வளமேம்பாட்டு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட சைவசமயம் பற்றிய ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும். [1] இந்தக் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளையும், 22 ஆயிரம் தலைமைப் பதிவுகளையும், 51 ஆயிரம் துணைப் பதிவுகளையும் கொண்டாதாகும்.[2]

இதன் தலைமைப் பதிப்பாசிரியர் பேராசிரியர் இரா. செல்வக்கணபதி ஆவார்.

தொகுதிகள்[தொகு]

சைவ சமயக் கலைக் களஞ்சியத்தின் தொகுதிகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.

  1. சைவ சமயம் – தமிழகம் (புதுச்சேரி மாநிலம் உட்பட)
  2. சைவ சமயம் - உலகம் (தமிழகத்துக்கு அப்பால்)
  3. சைவத்திருமுறைகள்
  4. திருமுறைத் தலங்கள்
  5. பிற்காலத் தலங்கள்
  6. சைவ சமய அருளாளர்கள்
  7. சைவ சமய அருள் நூல்கள்
  8. சைவ சித்தாந்தம்
  9. சைவ சமய அமைப்புகள்
  10. தோரணவாயில்

ஆசிரியர்கள்[தொகு]

இந்தக் கலைக்களஞ்சியத்தினை 50 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவோடு 220 சைவத் தமிழ் அறிஞர்களைக் கொண்ட ஆசிரியர் குழுவோடு இணைந்து பேராசிரியர் இரா. செல்வக்கணபதி உருவாக்கினார்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சைவ சமயக் கலைக் களஞ்சியம் தமிழ் மொழிக்கு கிடைத்த கொடை: துணைவேந்தர் ம.திருமலை
  2. "சைவ – சமயக் கலைக் களஞ்சியம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.

வெளி இணைப்புக்கள்[தொகு]