சைவநெறிக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவநெறிக்கூடம் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து இளவயதினரால் தமிழ்மக்களது மார்க்கமாகிய சைவத்தினை அறிந்து புலம்பெயர் தமிழ்மக்களது சமய ஐயத்தினையும் வெளிநாட்டவர்களுக்கு எமது சமய, இனப்பண்பாட்டு விழுமியங்களினை சரியான உதாரணத்துடன் அகம்புறம் விளக்கச் செய்யும் நோக்குடன் 1994ல் நிறுவப்பட்ட சைவத்தமிழ்மன்றமாகும்.

செயற்பாடுகள்[தொகு]

பேர்ண் மாநிலத்தில் கோவில் கொண்டருள் பாலிக்கும் அருள்ஞானமிகு ஞானாம்பிகையுறை ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தினை 2007 முதல் அவனருளால் பரிபாலித்து வருகிறது.

எமது சுயதேடலின் கருவில் விளைந்த சைவநெறிக்கூடம் இன்று வெளிநாட்டவர்களுக்கு எமது மார்க்கத்தினை கோட்பாட்டுரீதியாகவும் செயற்பாட்டுவகையிலும் உயிரூட்டமாக விளக்குவதுடன் எமது வேரைக்காத்து சைவநெறியினை புலம் பெயர் தமிழ்மக்கள் ஒழுகக்கூடியவகையிலும் அதேநேரம் எமது இளந்தமிழ்ச்சமூகம் விருப்புடன் தமது சுயவிருப்பில் ஆர்வத்துடன் ஒழுகக்கூடியமார்க்கமாக எளிமையான ஊடகத்தினால் வெளிக்கொணரும் செயலில் ஈடுபட்டுள்ளது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாக்கிற்கேற்ப எமது மார்க்கம் புலம்பெயர்சூழலிற்கு அமைவாக ஒழுகக்கூடிய மார்க்கமாக அமைத்துக்கொடுக்கும் பொறுப்பு சைவஆன்மீக அமைப்புக்களது கடப்பாடாகும். அதேபோல் மனிதர்களால் சமயத்திற்குள் புகுத்தப்பட்ட விடயங்களை களைந்து செப்பனிடப்படுவதுடன் தமிழ்முறைப்படுத்தப்படவேண்டும். சைவசமயத்தவர் வெறுமனே சயமத்தினை வெளியில் இருந்து குறைகூறாது நேரடியாக செயலில் இறங்கி தவறுகளைத் திருத்த வேண்டும் என்ற உந்துதலில் குருவருள், இறையருள் திருவருள் நிறைகூட மேற்கண்ட நோக்கத்துடன் சைவத்தமிழ் மன்றமாக இயங்கிய சைநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானாம்பிகையுறைஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தினை சுவிஸ் தலைநகர் பேர்ண் மாநிலத்தில் அமைத்துச் செயற்படுகின்றது.

ஆன்மீக அமைப்புக்கள் தமது இனத்திற்கான பணியினையும் அதேபோல் மக்களின் அகத்தில் மற்றும் புறத்தில் உள்ள இடர்களைப்போக்கும் கருவியாகவும் அதேபோல் கடின நிலையினை தளர்த்தி ஆற்றுப்படுத்தும் உளச்சேவையும் புரியவேண்டும் அவாவுடன் இவ்வமைப்புத் தொண்டாற்றி வருகிறது.

காண்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவநெறிக்கூடம்&oldid=1435197" இலிருந்து மீள்விக்கப்பட்டது