சைலண்ட் ஹில் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சைலண்ட் ஹில்
இயக்கம்கிறிஸ்தோப் கான்ஸ்
தயாரிப்புடொன் கர்மொடி
சாமுவெல் ஹடிதா]]
கதைரோஜெர் அவாரி
இசைஜெஃப் டனா
அகிரா யமௌகா
நடிப்புராதா மிஷ்செல்
சான் பென்
லௌரி ஹோல்டென்
தெபோரா ஹாரா அன்கெர்
ஒளிப்பதிவுடான் லௌஸ்டன்
படத்தொகுப்புசிபாஸ்டின் பிரன்கெர்
வெளியீடு2006
ஓட்டம்127 நிமிடங்கள்
நாடுகனடா / ஜப்பான் / அமெரிக்கா / பிரான்ஸ்
மொழிஆங்கிலம்

சைலண்ட் ஹில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.கிறிஸ்தோப் கான்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராதா மிஷ்செல்,சான் பென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வகை[தொகு]

பேய்ப்படம் / மர்மப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தனது மகள் ஷாரன் தூக்கத்தில் நடப்பதை சரி செய்ய முடியாமல் தவிக்கும் ரோஸ், ஷாரன் தூக்கத்தில் குறிப்பிடும் 'சைலண்ட் ஹில்' எனும் இடத்திற்கு அவளை அழைத்துச்செல்ல முடிவெடுக்கிறாள். சைலண்ட் ஹில் செல்லும் பாதை மூடப்பட்டு இருப்பினும் தடையை மீறிச் செல்ல முற்படும் போது, இவர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் துரத்த நேரிடுகிறது. அதிலிருந்து தப்பிக்கும் முயற்சி ஒரு விபத்தில் முடிகிறது.

ரோஸ் கண்விழித்து பார்க்கும் போது, சைலண்ட் ஹில் ஊர் வாசலில் அவள் இருப்பதையும் ஷாரனைக் காணவில்லை என்பதையும் உணர்கிறாள். ஷாரனைத் தேடும் முயற்சியில் அவ்வூரின் மர்மத்தையும் அறிகிறாள்.

துணுக்குகள்[தொகு]

  • சைலண்ட் ஹில் என்ற பிரபல நிகழ்பட ஆட்டத்தின் திரைப்பட வெளியீடாகும்.
  • 165 இடங்களில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்புகள்[தொகு]