சைமன் பிரேதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைமன் பிரேதான் (Simon Bredon) (1300 – 1372) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளரும் மருத்துவரும் ஆவார். இவர் ஆக்சுபோர்டு, மெர்ட்டன் கல்லூரி உறுப்பினர் ஆவார். இவர் 1330 முதல் 1342 வரை ஆக்சுபோர்டு, மெர்ட்டன் கல்லூரி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.முன்பே இவர் பால்லியோலில் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக மருத்துவ முனைவரும் ஆவார். இவர் ஆக்சுபோர்டு கல்லூரிகளில் தன் கையெழுத்து ஆவணங்களையும் கருவிகளையும் விட்டுச் சென்றார். இவற்றில் ஆக்சுபோர்டு, ஓரியேல் கல்லூரியில் விட்டுச் சென்ற வாகோளமும் உள்ளடங்கும். ( அண். 1340). இப்பொது இந்த வான்கோளம் அறிவியல் வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளது.

இவர் தான் முக்கோணவியலில் ஆய்வு மேற்கொண்ட மிக முந்தைய ஐரோப்பியக் கணிதவியலாளர் ஆவார்.

The equatorie of the planetis எனும் நூல் இவரால் எழுதப்பட்டது என்றாலும், ஜியோப்பிரே சாசர் அல்லது அவரது சமகால ஆசியர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. Theorica planetarum எனும் நூல் இவரால் எழுதப்பட்டதென முன்பு கூறிவந்தாலும், இப்போது இதை வால்ட்டேர் பிரிட்டு எழுதினார் என்று கருதப்படுகிறது.[1]

நூல்தொகை[தொகு]

  • Larry D. Benson, The Riverside Chaucer (3rd edn., Boston: Houghton Mifflin, 1987)
  • Robert T. Gunther, Historic Instruments for the Advancement of Science: A Handbook to the Oxford Collections Prepared for the Opening of the Lewis Evans Collection on May 5, 1925 (Oxford: Oxford University Press, 1925), pp. 19–20
  • Derek J. Price, ed., The equatorie of the planetis (Cambridge: Cambridge University Press, 1955)
  • F. N. Robinson, The works of Geoffrey Chaucer (2nd edn., Boston: Houghton Mifflin, 1957)
  • Keith Snedegar, 'Simon Bredon, a Fourteenth-Century Astronomer and Physician', in Lodi Nauta and Arjo Vanderjagt, eds., Between Demonstration and Imagination (Leiden: Brill, 1999), pp. 285–309
  • C. H. Talbot, 'Simon Bredon (c. 1300–1372), Physician, Mathematician and Astronomer', British Journal for the History of Science 1 (1962), 19–30

மேற்கோள்கள்[தொகு]

  1. Molland, George "Bredon, Simon". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/52668.  (Subscription or UK public library membership required.)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_பிரேதான்&oldid=3611718" இலிருந்து மீள்விக்கப்பட்டது