வால்ட்டேர் பிரிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வால்ட்டேர் பிரிட்டு (Walter Brit) ( பிரிட்டு, பிரிட்டி, அல்லது பிரித்தசு எனவும் அழைக்கப்படுகிறார்) ( 1390) ஆக்சுபோர்டு மெர்ட்டன் கல்லூரியின் ஆய்வுறுப்பினர் ஆவார். இவர் வானியலிலும் கணிதவியலிலும் பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் மருத்துவத்திலும் ஒரு பாடநூல் எழுதியுள்ளார். இவர் ஜான் வைக்கிளிப்பின் மாணவர் ஆவார். De auferendis clero possessionibus எனும் நூலையும் இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது.[1]

இனங்காணல் சிக்கல்[தொகு]

அந்தோனி வுடு 17 ஆம் நுற்றாண்டில், பிரிட்டு எனும் பெயரை வால்ட்டேர் புருட்டு எனும் பெயரோடு பொருத்தி இனங்கண்டார். வால்ட்டேர் புருட்டு இயர்போர்டு திருச்சவையின் ஓர் அடிநிலை மாந்தன் அல்லது மனிதன் ஆவார். இவரது வழக்கு ஜான் பாக்சே பேரில் 1391 இல் இயர்போர்டில் தாமசு திரிவெனந்து பேராயர் முன்னிலையில் நடந்தது. என்றாலும், நடப்பு புலமையாளர் இவ்வழக்கு முடிவுறவில்லை என கூறுகிறது.[2]

பாக்சே புருட்டு மீது வழக்கில் உள்ள கட்டுரைகளை அச்சிடுகிறார். இதைத் தன் வழக்கில் பாக்சே தனக்குச் சாதகமாக வாதாடி, பேராயம் இறுதி முடிவெடுக்கும்படி, தன் கருத்துகளை முன்வைக்கிறார். முப்பத்தேழு கட்டுரைகள் தேர்ந்தெடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்கு(ஓர்வுக்கு) அனுப்பப்பட்டன. புருட்டு மேலும் உருட்டுக்கு ஆட்படாமலதிருக்க, தப்பித்துக் கொண்டுள்ளார்.

அறிவியல் எழுத்துகள்[தொகு]

Theorica Planetarum எனும் நூல் அடிக்கடி பிருட்டுவினது எனப் போடிலைன் நூலகத்தின் இரு கையெழுத்துப் படிகளில்( xv. ff. 58 b-92, and Wood, 8 d, f. 93) இவரது கையெழுத்து இடப்பட்டுள்ளதால் கூறப்ப்படுகிறது; பெடெர்சன் இது பிரிட்டுவினது என்றாலும், இது சைமன் பிரேதான் நூலென சிலரால் முன்வைக்கப்படுவதுண்டு.[2]

வழக்கில் உள்ள இந்த நூல் பின்வரும் சொற்களுடன் தொடங்குகிறது: Circulus ecentricus, circulus egresse cuspidis, et circulus egredientis centri idem sunt,[3] ஆனால், மற்றொரு நூல் பின்வரும் சொற்களுடன் தொடங்குகிறது: Circulus ecentricus, vel egresse cuspidis, vel egredientis centri, dicitur,[4] என்பதால் இவை வேறுபடுகின்றன. மேலும் இதில் ஆசிரிய உரிமை பால்டசாரே பொங்கோம்பகுனியால் திரட்டிய சான்றுகளால் (அறிக்கைகளால்) நிறுவப்படுகின்றன ( in Della Vita e delle Opere di Gherardo Cremonese e di Gherardo di Sabbionetta)[5] எனவே, இது 13 ஆம் நுற்றாண்டு சேர்ந்த இளவல் கிரெமோனா நகர ஜெரார்டு (Gerardus de Sabloneto) இயற்றியதே எனலாம். Theorica என முடியும் பின்குறித்த நூல், வரலாற்றாசிரியர்களால் பிருட்டுவினது எனவும் பிரேதானுடையது எனவும் மாறி மாறி உரிமை கோரப்படுகின்றது.

பிரிட்டு, Theoremata Planetarum எனும் நூலையும் இயற்றியதாக ஜான் பேல் கூறுகிறார். ஆனால், தாமசு டேன்னர் இது திகுபையின் கையெழுத்துப் படி, f. 190 b (இப்போது f. 169 b) யில் உள்ளதே என்கிறார். இந்த, 1300 ஆம் ஆண்டு சார்ந்த கையெழுத்துப் படி, உண்மையில் யோகான்னசு சாக்ரோபாசுக்கோ இயற்றிய நூலாகும்.

இறுதியாக, Cirurgia Walteri Brit எனத் திகுபையின் மற்றொரு கையெழுத்துப் படி (xcviii. f. 1 b) இல் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்க அட்டவணை, பெயரற்ற ஆங்கில மருத்துவக் குறிப்பீடே. மேற்குறித்த நூலோடு இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை (f. 257).

குறிப்புகள்[தொகு]

  1. (trans.) On Stealing the Possessions of the Clergy
  2. 2.0 2.1 Pedersen, Olaf "Bryt, Walter". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/3454.  (Subscription or UK public library membership required.)
  3. (trans.) " இந்த மையம்பிறழ் வட்டமும், அதன் இடது புள்ளியிலும், வட்ட மையத்திலும் இருந்துள்ள இடப்பெயர்வும் உள்ளமையும் இரண்டும் ஒன்றே அல்லது ஒத்ததே..."
  4. (trans.) " மையம்பிறழ் வட்டமும் பிறழ்புள்ளி அல்லது மையத்தில் இருந்தான இடப்பெயர்வும் ... என அழைக்கப்படும்.")
  5. (trans.) Of the Life and the Works of Gerard of Cremona and Gerard de Sabloneta


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்ட்டேர்_பிரிட்டு&oldid=3612071" இலிருந்து மீள்விக்கப்பட்டது