சைமன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைமன் சிங்
Simon Singh TAM London 2009.jpg
அக்டோபர் 2009ல்
பிறப்பு1 சனவரி 1964 (1964-01-01) (அகவை 59)
சோமர்செட், இங்கிலாந்து
பணிஎழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்
வாழ்க்கைத்
துணை
அனிதா ஆனந்த்
பிள்ளைகள்ஹரி சிங்
வலைத்தளம்
SimonSingh.net

சைமன் சிங் (Simon Singh, பி. ஜனவரி 1, 1964) ஒரு ஐக்கிய இராச்சிய எழுத்தாளர் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர். அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான விசயங்கள் குறித்து வெகுஜன மக்களுக்காக பல எளிய நூல்களை எழுதியவர். இந்திய மரபினரான சிங் கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் துகள் இயற்பியலில் முனைவர் (பி.எச்டி) பட்டம் பெற்றுள்ளார். பிபிசி நிறுவனத்தில் பணியாற்றிய சிங் அறிவியல் குறித்த பல ஆவணப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார்.

சிக்கலான அறிவியல் மற்றும் கணித தலைப்புகளில் சிங் எழுதியுள்ள நூல்களும் உருவாக்கியுள்ள ஆவணப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரித்தானியப் பேரரசின் சர் பட்டம், கெல்வின் பதக்கம், லீலாவதி விருது, மதிப்புறு முனைவர் பட்டங்கள் உட்பட பல விருதுகளையும் சிறப்புகளையும் சிங் வென்றுள்ளார். ஃபெர்மாவின் இறுதித் தேற்றம், மறைமொழியியல், பெரு வெடிப்பு, மாற்று மருத்துவம் போன்ற தலைப்புகளில் இவர் நூலகளும், ஆவணப்படங்களும் உருவாக்கியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_சிங்&oldid=3582284" இருந்து மீள்விக்கப்பட்டது