சேலம் நிறைகோல் தமிழ்ச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



சேலம் நிறைகோல் தமிழ்ச்சங்கம்:[தொகு]

சேலம் நிறைகோல் தமிழ்ச்சங்கம் தமிழின் பெருமையை உலகறியச் செய்யவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தம் பணிகளைச் செய்து வருகிறது. மறைந்து வரும் தமிழரின் பண்பாடு, நாகரீகம், கலை போன்றவற்றை நிலைநாட்டும் நன்னோக்கோடும், எங்கோ ஒரு மூளையில் முடங்கிக்கிடக்கும் திறமை வாய்ந்தவர்களின் திறனை வெளிக் கொணர்வதற்காகவும் இச்சங்கம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது.

வரலாறு:[தொகு]

சேலம் நிறைகோல் தமிழ்ச்சங்கம் 13 உறுப்பினர்களைக் கொண்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் நாள் முனைவர் அ. இளவரசி முருகவேல், முனைவர் ஶ்ரீ.அழகுலெட்சுமி, முனைவர் ப. சசிரேகா ஆகியோரால் உருவாக்கப்பட்டது. தற்போது இச்சங்கத்தின் தலைவராக முனைவர் அ. இளவரசி அவர்கள் பொறுப்பேற்று இச்சங்கத்தினை வழிநடத்தி வருகிறார். இச்சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 13 உறுப்பினர்கள் தங்களின் பங்கினை ஆற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு பதிவு:[தொகு]

சேலம் நிறைகோல் தமிழ்ச்சங்கம் முறையாக பதிவு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு சங்கப்பதிவு செய்வதற்காக சேலம் சங்கப்பதிவு அலுவலகத்தில் 21.10.2021 அன்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு 04.01.2022 அன்று SRG/Salem West/3/2022 என்று சங்கப்பதிவு எண் கிடைக்கப்பெற்றது.இச்சங்கம் தமிழ்நாடு அரசு சங்கப்பதிவு பெற்றது நடத்தப்படுகிறது என்பது பெருமைக்குரியதாகும்.

நோக்கம்[தொகு]

சேலம் நிறைகோல் தமிழ்ச்சங்கம் தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்யவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் இனிவரும் காலங்களில் வருங்காலத் தலைமுறையினருக்கு தமிழ் மொழியின் சிறப்புகளை உணர்த்தி மொழிப்பற்றை ஏற்படுத்துவதற்காகவும் உருவானதாகும். • மறைந்து வரும் தமிழரின் பண்பாடு, நாகரீகம், மற்றும்கலை இலக்கிய வாழ்வியல் கூறுகளை மீட்ருவாக்குதல். • தமிழ்மொழியின்சிறப்பையறிந்த அறிஞர் பெருமக்கள், கலைஞர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரையும் இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்துவரை நோக்கமாக கொண்டுள்ளது. • திறமை வாய்ந்தவர்களின் திறனை வெளிக்கொணர்வதற்கான களமாக சேலம் நிறைகோல் தமிழ்ச்சங்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. • பழமை வாய்ந்த தமிழ் மொழியை ஆராய்ச்சியாளர்களின் வழி ஆராய்ந்து தரவுகளை, வருங்காலத் தலைமுறையினருக்கு தெறியப்படுத்தும் வகையில் பதிப்புக் குழுமமாக செயல்பட்டு நூல்களாக, இதழ்களாக வெளியிடும் பணியைச் செய்வதை பணியாகக் கொண்டுள்ளது. • பல்வேறு போட்டிகளை நடத்தி அதில் திறம் வாய்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களைப் பெருமைபடுத்தும் வகையில் சான்றிதழ்கள், விருதுகள், பரிசளிப்புகள் வழங்கி சிறப்பிக்கும் நோக்கில் செயல்படுகிறது. • திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள், கணினித்தமிழ்ப் பயிற்சிகள் மற்றும் விரிவாக்கப்பணிகள் போன்றவை நடத்துதல்.

கொள்கை[தொகு]

• தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகச் செயல்படுதல். • தமிழ்மொழியோடு பிறமொழிகளையும் பேணிக் காப்பது. • வியாபார நோக்கமற்ற பொதுநல அமைப்பாகச் செயல்படுதல். • தனியொருவரின் விருப்பங்களையோ, அமைப்பிற்கு முரண்பாட்டுக் கருத்துக்களையோ, செயல்பாடுகளையோகொள்கைகளையோ செயல்படுத்துவதற்கு இடம்அளிக்காது. • மக்கள், சமூகம் மற்றும் அரசுக்கு எவ்வகையிலும் எதிராக செயல்படாதிருத்தல். • மொழிப்பற்று மிக்கவர்களை இணங்கண்டு அவர்களை ஒருங்கிணைத்து தமிழ்மொழி வளர்ச்சி மேம்பாட்டிற்காக இச்சங்கம் செயல்பட்டு வருகிறது.