உள்ளடக்கத்துக்குச் செல்

சேலம் துறைமுக மின் நிலையம்

ஆள்கூறுகள்: 42°31′34.73″N 70°52′35.42″W / 42.5263139°N 70.8765056°W / 42.5263139; -70.8765056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேலம் துறைமுக மின் நிலையம்
Salem Harbor Power Station
புட் பிரிண்டு மின் நிறுவனம் கட்டியுள்ள தற்போதைய மின் நிலையம்
நாடுஅமெரிக்கா
அமைவு42°31′34.73″N 70°52′35.42″W / 42.5263139°N 70.8765056°W / 42.5263139; -70.8765056

சேலம் துறைமுக மின் நிலையம் (Salem Harbor Power Station) என்பது அமெரிக்காவின் மாசசூசெட்சு மாநிலத்திலுள்ள சேலம் நகரத்தில் அமைந்துள்ள ஓர் இயற்கை எரிவாயு எரியூட்டும் மின் உற்பத்தி நிலையமாகும்.[1] சேலம் துறைமுக நகரத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் இம்மின் நிலையம் அமைந்துள்ளது. இதே தளத்தில் காலாவதியான நிலக்கரி எரியூட்டும் ஆலையை மாற்றி 2018 ஆம் ஆண்டு முதல் இயற்கை எரிவாயு எரியூட்டும் நிலையமாக இந்நிலையம் செயல்படத் தொடங்கியது.[2]

சேலம் துறைமுக மின் நிலையம் 1800 ஆம் ஆண்டுகளில் கடலிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் அமைந்துள்ளது. முன்னதாக இப்பகுதி கப்பல்கள் மற்றும் படகுகளைக் கட்டி நிலைப்படுத்துவதற்காக அமைக்கப்படும் கப்பல்துறை மேடை மற்றும் நிலக்கரி களஞ்சியமாக இருந்தது. அசல் தொழிற்சாலையின் கட்டுமானம் 1950 ஆம் ஆண்டுகளில் தொடங்கியது. இத்தொழிற்சாலை பல முறை விரிவாக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டிலிருந்த அசல் நிலக்கரி எரியூட்டும் தொழிற்சாலை

அசல் தொழிற்சாலையை விட இது சிறியதாகும். 40 ஏக்கர் நீர்முனை நிலத்தை எதிர்கால வளர்ச்சிக்கு பயன்படுத்த அமைவிடம் அனுமதிக்கிறது. 2012 ஆம் ஆண்டில் ஃபுட் பிரிண்ட் பவர் நிறுவனம் வாங்கிய 60 ஆண்டு பழமையான நிலக்கரி ஆலை 2014 ஆம் ஆண்டு மே 31 அன்று அகல்நிலைக்கு கொண்டு வரப்பட்டது. தொழிற்சாலையை இடிக்கும் பணிகள் 2016 ஆம் ஆண்டு நிறைவடைந்தன. அதே நேரத்தில் புதிய தொழிற்சாலை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Salem Harbor Footprint". Footprint Power. பார்க்கப்பட்ட நாள் 2 June 2016.
  2. "Salem power plant online". Salem News. பார்க்கப்பட்ட நாள் 12 June 2018.
  3. Helms, Chris (7 February 2013). "Salem Harbor Power Station CEO Touts Design of New Facility". Marblehead Patch (Salem, Massachusetts) இம் மூலத்தில் இருந்து 30 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130630030345/http://marblehead.patch.com/articles/salem-harbor-power-station-ceo-touts-design-of-new-facility-b6d04fb7.