சேலம் கருப்பு ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேலம் கருப்பு ஆடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், மேச்சேரி, ஓமலூர் ஆகிய பகுதிகளில் காணப்படக்கூடிய ஒரு ஆட்டு இனமாகும். மேலும் இவை தர்மபுரி, ஈரோடு நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறன. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டதாகவும்,[1] அதன் கொம்புகள் பின்பக்கமாக நன்கு வளைந்தும் இருக்கும். பெரும்பாலும் ஒற்றைக் குட்டியை மட்டும்மே ஈனும்.[2] இவை பெரும்பாலும் இறைச்சித் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன

மேற்கோள்கள்[தொகு]

  1. "சேலம் கருப்பு". கட்டுரை. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். பார்த்த நாள் 2 சனவரி 2017.
  2. ஆர். குமரேசன் (2012 சூன் 25). "சேலம் கருப்பு!". கட்டுரை. விகடன். பார்த்த நாள் 2 சனவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_கருப்பு_ஆடு&oldid=2729500" இருந்து மீள்விக்கப்பட்டது