சேபைன் (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சேபைன் (sabin) என்பது ஒலி உள்ளீர்ப்பின் (sound absorption) அலகு ஆகும். சபைன்கள் இம்பீரியல் அலகு அல்லது மெட்ரிக் முறைகளில் கொடுக்கப்படலாம். ஒரு சதுர அடி 100% உள்ளீர்ப்புப் பொருள் ஒன்று ஒரு சேபைன் உள்ளீர்ப்பைக் கொண்டிருக்கும். அதே போன்று, ஒரு சதுர மீட்டர் 100% உள்ளீர்ப்புப் பொருள் ஒன்று ஒரு மெட்ரிக் சேபைன் உள்ளீர்ப்பைக் கொண்டிருக்கும்.[1] வாலசு கிளெமெண்ட் சேபைன் என்பவரின் நினைவாக இவ்வலகிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

மெட்ரிக் அளவு முறையில் முழுமையான ஒலி உள்ளீர்ப்பு பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்:

A=S1α1+S2α2+...+Snαn=ΣSiαi

இங்கு,

A = அறையின் உள்ளீர்ப்பு (m2 மெட்ரிக் சேபைன்)

Sn = மேற்பரப்பின் பரப்பளவு (m2)

αn = மேற்பரப்பின் உள்ளீர்ப்புக் குணகம்

அரங்குகள், விரிவுரை மண்டபங்கள் போன்றவற்றின் எதிர்முழக்கத்தை அளவிடுவதற்கு சேபைன் அலகு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. *வரைவிலக்கணம்
  • Davis, D. and C. Davis. (1987) Sound System Engineering 2nd ed. Page 168.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேபைன்_(அலகு)&oldid=2186784" இருந்து மீள்விக்கப்பட்டது