சேனாங்காவு பகவதி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரீ சேனாங்காவு பகவதி கோவில் (ശ്രീ ചേനാങ്കാവ് ഭഗവതി ക്ഷേത്രം) கேரளத்திலுள்ள ஒரு பிரபலமான கோவிலாகும். இக்கோவில் வட கேரளத்தில், பய்யனூர் என்ற ஊரின் அருகில் அமைந்துள்ள கொறோம் என்ற கிராமத்தில் நிலைகொண்டுள்ளது. இக்கோவில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் விஷு மகோத்சவம் மற்றும் சப்தாக வாயனைக்குப் பெயர் போனதாகும், இரண்டும் ஏப்ரல் மாதத்தில் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரித் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இங்கே வரும் பக்தர்கள் "வலிய குருதி" என்ற வழிபாட்டை பகவதிக்கு செலுத்துவதே இங்கே இறைவிக்கு செலுத்தும் முக்கிய வழிபாடாகும்.