சேசகிரி ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேசகிரி ராவ்
Seshagiri Rao
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1994–1999
முன்னையவர்சிராலா கோவர்தன ரெட்டி
பின்னவர்அனந்த வர்ம மந்தேனா
தொகுதிபாபட்லா சட்டப்பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1933
இறப்பு (அகவை 86)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

சேசகிரி ராவ் (Seshagiri Rao) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1933 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் ஆந்திரப்பிரதேச சட்டமன்ற குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சேசகிரி ராவ் பாபட்லா கல்வி சங்கத்தின் தலைவராக இருந்தார். பாபட்லா பொறியியல் கல்லூரியையும் நிறுவினார். 1981 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டு நடைபெற்ர தேர்தலில் பாபட்லா தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] பின்னர், இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். குண்டூர் மாவட்ட காங்கிரசு கமிட்டியின் தலைவராகவும், ஆந்திரப் பிரதேச காங்கிரசு கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று தன்னுடைய 86 ஆவது வயதில் சேசகிரி ராவ் இறந்தார்.[1][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Bapatla ex-MLA Seshagiri Rao dead". The Hindu. 18 November 2019. பார்க்கப்பட்ட நாள் 19 November 2019.
  2. "Bapatla Assembly Constituency Election Result". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 18 November 2019.
  3. "Andhra Pradesh Assembly Election Results in 1994". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 18 November 2019.
  4. "Former MLA and Congress leader Seshagiri Rao passes away". The Hans India. 18 November 2019. பார்க்கப்பட்ட நாள் 18 November 2019.
  5. "బాపట్ల మాజీ ఎమ్మెల్యే కన్నుమూత!". HMTV (in தெலுங்கு). 18 November 2019. பார்க்கப்பட்ட நாள் 18 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேசகிரி_ராவ்&oldid=3813084" இலிருந்து மீள்விக்கப்பட்டது