சேங் லியோன்சாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேங் லியோன்சாங்
தாய்மொழியில் பெயர்曾联松
பிறப்புதிசம்பர் 17, 1917(1917-12-17)
இறப்புஅக்டோபர் 19, 1999(1999-10-19) (அகவை 81)
பணிபொருளியல் அறிஞர்
அறியப்படுவதுமக்கள் சீனக் கொடி வடிவமைப்பாளர்
சொந்த ஊர்ரூய்யின், வென்சோவ், செயியாங்
சேங் லியோன்சாங்
பண்டைய சீனம் 曾聯松
நவீன சீனம் 曾联松

சேங் லியோன்சாங் (Zeng Liansong) என்பவர் டிசம்பர் 17, 1917 முதல் அக்டோபர் 19, 1999 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு சீனர் ஆவார். இவர் மக்கள் சீனக் குடியரசின் கொடியை வடிவமைத்தார் [1][2]. சீனாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள செயியாங் மாகாணத்தின் வென்சோவ் நகரில் இடம்பெற்றுள்ள ரூய்யின் மாகாண நகரம் இவரது இருப்பிடமாகும் [1][2].

1936 ஆம் ஆண்டு நஞ்சிங் தேசிய மத்தியப் பல்கலைக்கழகத்தில் இவர் பொருளியல் துறையினுள் நுழைந்தார் [2][3]. இரண்டாம் சீன-சப்பானிய போரின்போது இவர் சப்பானியப் படைகளுக்கு எதிரான மோதலில் கலந்து கொண்டார். சாங்காய், மக்கள் சீன அரசியல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இவர் இருந்தார்.

1999 ஆம் ஆண்டு இவர் இறந்தார் [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Archived copy". February 11, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 3, 2009 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  2. 2.0 2.1 2.2 2.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-06-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-11-02 அன்று பார்க்கப்பட்டது.
  3. National Central University renamed Nanjing University in 1949.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேங்_லியோன்சாங்&oldid=3587058" இருந்து மீள்விக்கப்பட்டது