உள்ளடக்கத்துக்குச் செல்

செவிலியர் கல்லூரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனிதர்களுக்கான உடல் நலத்தில் நோய்கள் மற்றும் அவைகளுக்கான சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவக்கூடிய கல்வியில் இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை அளிக்கும் கல்லூரிகள் செவிலியர் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள செவிலியர் கல்லூரிகள்

[தொகு]

தமிழ்நாட்டில் செவிலியர் கல்விக்கான இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் என இரு வகையாக உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

அரசுக் கல்லூரிகள்

[தொகு]
  1. செவிலியர் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.
  2. செவிலியர் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை.
  3. செவிலியர் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சென்னை.

சுயநிதிக் கல்லூரிகள்

[தொகு]

தமிழ்நாட்டில் செவிலியர் கல்விக்கான 125 சுயநிதிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இளநிலைப் பட்டப்படிப்புகள்

[தொகு]

செவிலியர் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புகள் இரு வகையாக உள்ளன.

  • இளம் அறிவியல் (செவிலியர்- பொது)- அரசுக்கல்லூரிகள் 3 மற்றும் 125 சுயநிதிக் கல்லூரிகளிலும் உள்ளது.
  • இளம் அறிவியல் (பயிற்சி பெற்ற செவிலியருக்கானது)- அரசுக்கல்லூரி 1 மற்றும் 31 சுயநிதிக் கல்லூரிகளிலும் உள்ளது.

முதுநிலைப் பட்டப்படிப்புகள்

[தொகு]

செவிலியர் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகள் அரசுக்கல்லூரி 1 மற்றும் 37 சுயநிதிக் கல்லூரிகளிலும் உள்ளது. இந்தப் பட்டப்படிப்புகள் பாடங்கள் மற்றும் இடங்கள் ஆகியவை கல்லூரிகளுக்கேற்ப மாறுபடுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவிலியர்_கல்லூரிகள்&oldid=1369846" இலிருந்து மீள்விக்கப்பட்டது