செல்வமுரளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்வமுரளி
பிறப்புசூன் 14, 1985 (1985-06-14) (அகவை 38)
மத்தூர், கிருஷ்ணகிரி
தேசியம்இந்தியன்
பணிமென்பொருள் உருவாக்குநர் & இதழாளர்

செல்வமுரளி (பிறப்பு: ஜூன் 14, 1985) மென்பொருள் உருவாக்குநரும் தமிழ்க் கணிமை வல்லுனரும் ஆவார்.[1] இவர் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் இந்தியக்கிளை ஒருங்கிணைப்பாளராகவும், பின் செயல் இயக்குநராகவும், அதன்பின் தலைவராகவும் இருந்தவர். இவரின் விவசாயம் என்ற குறுஞ்செயலிக்காக 2015 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினைப் பெற்றார்.[2][3] 2022 ஆம் ஆண்டு இந்தியா முழுவதுமிருந்து கூகுள் தேர்வு செய்து பயிற்சியளித்த நூறு சிறந்த குறுஞ்செயலி தயாரிப்பாளர்களுள் இவரும் ஒருவராவார். அந்தப் பயிற்சியின் முடிவில் சுந்தர் பிச்சையால் நேரில் அழைக்கப்பட்டுப் பாராட்டும் பெற்றார்.[4][5]

இவர் 1985 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் எனும் ஊரில் பிறந்தவர்.[2] இவர் கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் ‘விசுவல்மீடியா டெக்னாலஜிஸ்’ என்ற கணினி மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.[6] அக்ரிசக்தி என்ற விவசாய வார இதழையும் நடத்திவருகிறார்.[7] தமிழில் யுனி அம்மா என்ற பெயரில் 25 ஒருங்குறி எழுத்துருக்களை இலவசமாக வெளியிட்டுள்ளார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கிருஷ்ணகிரியில் கணினி நிறுவனம் நடத்தும் செல்வ முரளி உருவாக்கிய ’விவசாயம்’ செயலிக்கு விருது! Read more at: https://yourstory.com/tamil/08fcb9da4f-the-company-operates-a-system-of-wealth-creation-krishnagiri-murali-39-agriculture-39-award-to-the-processor-". யுவர் ஸ்டோரி. https://yourstory.com/tamil/08fcb9da4f-the-company-operates-a-system-of-wealth-creation-krishnagiri-murali-39-agriculture-39-award-to-the-processor-. பார்த்த நாள்: 5 January 2021. 
  2. 2.0 2.1 "செயலாலும் செயலியாலும் விவசாயிகளுக்கு உதவும் இளைஞர்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai/210271-.html. பார்த்த நாள்: 5 January 2021. 
  3. "”இந்த ஆப் உருவாகக் காரணமே நம்மாழ்வார்தான்!” - கணினித் தமிழ் விருது பெற்ற செல்வமுரளி". விகடன். https://www.vikatan.com/technology/gadgets/87701-an-interview-with-selvamurali-for-his-new-app-for-farmers. பார்த்த நாள்: 5 January 2021. 
  4. "விவசாயத்திற்காக மொபைல் செயலி : தமிழக இளைஞரை நேரில் அழைத்து பாராட்டிய சுந்தர் பிச்சை!". நியூஸ்18. பார்க்கப்பட்ட நாள் 26 December 2022.
  5. "கிராம இளைஞரை நேரில் உற்சாகப்படுத்திய சுந்தர் பிச்சை". தினமணி. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2022/dec/25/sundar-pichai-cheered-up-the-village-youth-in-person-3973100.html. பார்த்த நாள்: 26 December 2022. 
  6. "விவசாய புரட்சி: நம்மாழ்வார் கனவு செல்வமுரளியால் நிறைவு". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=1443852. பார்த்த நாள்: 5 January 2021. 
  7. "அக்ரிசக்தி விவசாயம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  8. "யுனி அம்மா Tamil Unicode Fonts". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வமுரளி&oldid=3626307" இலிருந்து மீள்விக்கப்பட்டது