செல்பேசி சூரிய மின்னேற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்பேசி சூரிய மின்னேற்றி
செல்பேசி சூரிய மின்னேற்றி
செல்பேசி சூரிய மின்னேற்றி

செல்பேசி சூரிய மின்னேற்றிகள் (Solar cell phone chargers) என்பவை சூரியவொளித் தகடுகளைப் பயன்படுத்தி செல்பேசி மின்கலங்களுக்கு மின்னேற்றுகின்றன.[1] வழக்கமாகப் பயன்படுத்தும் செல்பேசி மின்னேற்றிகளுக்கு இவையொரு மாற்றாக விளங்குகின்றன. மற்றும் சில சந்தர்ப்பங்களில் இவற்றை மின்நிலையங்களில் இணைத்து மின்சாரத்தை வெளியிடச் செய்யவும் முடியும்.[2]

கையடக்க செல்பேசிகளுக்கான பொது சூரிய மின்னேற்றிகளை தெருக்கள், பூங்காக்கள், சதுக்கங்கள் போன்ற பொதுவிடங்களில் நிரந்தரமாக நிறுவமுடியும். செம்புற்று ஆற்றல் நிறுவனம் கண்டறிந்து நிறுவிய பொது சூரிய மின்னேற்றியைத் தொடர்ந்து செம்புற்று மரத்தை உலகின் முதலாவது மாதிரி சூரிய மின்னேற்றியாக ஐரோப்பிய ஆணையம் பிரகடனப்படுத்தியது. 2011 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஆணையம் கொண்டாடிய வளம்குன்றா ஆற்றல் வாரம் நிகழ்ச்சியில் இந்தச் சூரிய மின்னிலையம் ஆற்றல் நுகரும் பிரிவில் பரிசினை வென்றது.[3][4]

உலகளாவிய நகரும் தொலைதொடர்பு வகை செல்பேசி வகைகளுக்காக,[5] சிலவகை செல்பேசிகளில் பேசிக்கு உள்ளேயே சூரிய மின்னேற்றி நிறுவப்பட்டு வணிகரீதியாக விற்பனைக்கும் கிடைக்கிறது.[6].[7]

சூரிய செல்பேசி மின்னேற்றிகள் மடக்கி வகை, சுழலும் வகை உள்ளிட்ட பல்வகை வடிவமைப்பு மாதிரிகள் மற்றும் கட்டமைப்புகளில் விற்பனைக்கு வருகின்றன.[8]

சூரியமின்கலம் வெளி மேற்பரப்பிலும் மற்றும் உலோக நிக்கல் ஐதரைடுகள் உட்புறமாகவும் வைக்கப்பட்டுள்ள பட்டை வடிவ செல்பேசி மின்னேற்றிகளும் வருகின்றன.

தற்போதைய சூரிய செல்பேசி மின்னேற்றித் தொழில்நுட்பம், சூரிய மின்னாற்றலைத் தினமும் பயன்படுத்த திறனுள்ள மின்னேற்றிகளை உருவாக்குகிறது. செல்பேசிகள் மின்னேற்றம் பெறும் நேரம் அதில் பயன்படுத்தப்படும் மின்கலன்களின் வலிமையைப் பொறுத்து மாறுபடுகிறது. நாளுக்கு நாள் மின்கலன்களின் இத்திறன் அதிகரித்தும் வருகிறது.[9] மின்னேற்றித் தொழில்நுட்பம் மேலும் விரிவடைந்து, நவீனவகை செல்பேசிகளில் வெளி மடங்கு மின்னேற்றிகள் சிறிய அளவு இடத்திற்குள் பராமரித்து அவை திறன்பேசிகளை மூன்று மணி நேரத்திற்குள் மின்னேற்றம் செய்து வெற்றி கண்டுள்ளன.[10]

மற்ற செல்பேசித் துணைக் கருவிகளான கம்பியிலா பரிமாற்றிகள், தலையணி ஒலிவாங்கிகள், ஒலிபரப்பும் செல்பேசி முதலானவற்றிலும் பயன்படுத்த சூரிய செல்பேசி மின்னேற்றிகள் கிடைக்கின்றன.[5]

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]