செலுத்தல்கள் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செலுத்தல் வங்கிகள் (Payments Bank) குடிபெயர் உழைப்பாளர்கள், சிறு வருமானக் குடும்பங்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் அமைப்புச்சாரா துறையினருக்காக உருவாக்கப்படும் வங்கிகளாகும். இவர்களது செலுத்தல்களுக்கும் பெறுதல்களுக்கும் இது வழி வகுக்கும்.[1] இந்திய அரசு வங்கித்துறையை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல முன்வைத்துள்ள பல செயற்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். இத்தகைய வங்கிகளை தனியார்துறையில் நிறுவிட நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சூலை 10, 2014 அன்று வெளியிட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இவற்றை நிறுவிடும் உரிமங்களுக்கு விண்ணப்பிக்க பெப்ரவரி 2, 2015 கடைசி நாளாகும்.[1]

இவை ரூபாய் 1,00,000 வரை மட்டுமே வைப்புக்களைப் பெற முடியும். கடன்கள் வழங்க இயலாது. இணையவழியாக இயக்கப்படலாம். கடனட்டைகளும் பற்றட்டைகளும் வழங்க இயலும். சேமிப்பாளர்களின் பாதுகாப்பிற்காக மற்ற வங்கிகளைப் போலவே ரிசர்வ் வங்கியில் கட்டாய சேமிப்பு நிதியைப் பராமரித்தலும் பெறப்பட்ட வைப்புகளில் 75% வரை குறிப்பிட்ட பாதுகாப்பான வைப்புநிதிகளில் முதலீடு செய்தலும் கட்டாயமாகும்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Five things you should know about 'payments bank'". டி.என்.ஏ. 2 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலுத்தல்கள்_வங்கி&oldid=3930270" இலிருந்து மீள்விக்கப்பட்டது