செலினா ஜெயிட்லி
அழகுப் போட்டி வாகையாளர் | |
![]() செலினா ஜெயிட்லி (2007) | |
பிறப்பு | 24 நவம்பர் 1981 சிம்லா, இமாச்சலப் பிரதேசம்[1] |
---|---|
கல்வி நிலையம் | St. Joseph College |
தொழில் | விளம்பர அழகி, நடிகை |
செயல் ஆண்டுகள் | 2001–தற்போதும் |
உயரம் | 1.70 m (5 ft 7 in) |
பட்ட(ம்)ங்கள் | பெமினா மிஸ் இந்தியா யூனிவர்ஸ் 2001 |
Major competition(s) | பெமினா மிஸ் இந்தியா யூனிவர்ஸ் 2001 (Winner) மிஸ் யூனிவர்ஸ் (4th Runner-up) |
Spouse | Peter Haag (தி. 2011) |
Children | 2 |
செலினா ஜெயிட்லி (Celina Jaitly; பிறப்பு - 24 நவம்பர் 1981)[2][3] ஒரு இந்திய நடிகையும் முன்னாள் அழகியும் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா யூனிவர்ஸ் பட்டம் வென்றவர்.
இளமைப் பருவம்[தொகு]
ஜெயிட்லி பஞ்சாபி தந்தைக்கு மகளாகப் பிறந்தார்.[4] இவரது தந்தை வி.கே. ஜெயிட்லி இந்திய இராணுவத்தில் தளபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாய் முன்னாள் ஆப்கானிய அழகு இராணியாக இருந்தவர்.[5] இவரது சகோதரர் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
செலினா லக்னோ உட்பட பல நகரங்களில் வளர்ந்தவர். இவர் லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசரி பள்ளியில் படித்தார். இவரது தந்தை பணியாற்றிய ஒரிசாவில் உள்ள பெர்ஹம்புரிலும் கல்வி பயின்றார். இவர் தனது பெரும்பாலான நாட்களை மேற்கு வங்காளத்தின், கொல்கத்தாவில் கழித்தார். இவர் இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் பட்டம் பெற்றார்.
தொழில் வாழ்க்கை[தொகு]
2001 ஆம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஜெயிட்லி முதல் இடத்தைப் பெற்று பெமினா மிஸ் இந்தியா யூனிவர்ஸ் 2001 என்ற பட்டத்தை வென்றார். மேலும், இவர் "மிஸ் மார்கோ பிடிபுல் ஸ்கின்", "இந்தியாடைம்ஸ் சர்பர்ஸ் சாய்ஸ்", மற்றும் "மோஸ்ட் வான்டட்" விருதுகளையும் வென்றுள்ளார். இவற்றைத் தொடர்ந்து இவர் மிஸ் யூனிவர்ஸ் 2001 போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டார். அதில் இவர் இறுதிப் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றார்.[6]
முதல் முறையாக 2003 ஆம் ஆண்டில் இவர் ஜனஷீன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டில் ஜெயிட்லி நியூசிலாந்துக்குச் சென்று தனது முதல் அகில உலகப் படமான லவ் ஹாஸ் நோ லாங்க்வேஜ் என்ற காதல் நகைச்சுவைப் படத்தில் நடித்தார்.
இந்திய ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவராகவும் ஜெயிட்லி விளங்குகிறார்.[7][8][9]
திரைப்பட விவரங்கள்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2003 | ஜனஷீன் | ஜெசிக்கா பெரைரா | |
கேல் | சாஞ் பத்ரா | ||
2005 | சில்சிலே | பிரீத்தி | |
நோ என்ட்ரி | சஞ்சனா சக்சேனா | ||
சூர்யம் | மது | தெலுங்கு மொழிப்படம் | |
2006 | ஜவானி திவானி : எ யூத்புல் ஜாய் ரைட் | ரோமா பெர்னாண்டஸ் | |
ஜிந்தா | நிஷா ராய் | ||
டாம், டிக், அண்ட் ஹாரி | செலினா | ||
அப்னா ஸப்னா மனி மனி | சானியா பத்னாம் | ||
2007 | ரெட் : தி டார்க் சைட் | அனஹிதா சக்சேனா | |
ஷகலக பூம் பூம் | ஷீனா | ||
ஹேய் பேபி | சிறப்புத் தோற்றம் | ||
2008 | சி கொம்பனி | கவர்ச்சி நடிகை | |
மனி ஹை தோ ஹனி ஹை | சுருதி | ||
கோல்மால் ரிடேர்ன்ஸ் | மீரா | ||
2009 | பேயிங் கெஸ்ட் | கல்பனா | |
ஆக்சிடென்ட் ஆன் ஹில் ரோட் | சோனம் சோப்ரா | 31 டிசம்பர் 2009 வெளியீடு | |
ஒன் நைட் | |||
அனார்கலி | |||
2010 | ரன் போலா ரன் | 22 ஜனவரி 2010 வெளியீடு | |
த குவெஸ்ட் ஆப் ஷேகரேசடே | அறிவிக்கப்பட்டது | ||
ஹலோ டார்லிங் | கேண்டி பெர்னாண்டஸ் | ஆகஸ்ட் 20 அன்று வெளியாகிறது | |
ஸ்ரீமதி | சோனியா | கன்னட மொழிப் படம்-படப்பிடிப்பில் | |
வில் யு மேரி மீ | தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் | ||
2011 | தேன்க் யு |
உசாத்துணை[தொகு]
- ↑ "http://www.imdb.com/name/nm1380415/". External link in
|title=
(உதவி); Missing or empty|url=
(உதவி) - ↑ "I am unlucky in love: Celina". The Hindu (Chennai, India). 25 November 2008. Archived from the original on 28 ஜூன் 2010. https://web.archive.org/web/20100628013525/http://www.hindu.com/thehindu/holnus/009200811251560.htm. பார்த்த நாள்: 13 May 2009.
- ↑ Gavin Rasquinha, Reagan (19 November 2006). "On your guard". Times of India. http://timesofindia.indiatimes.com/City_Supplements/Lucknow_Times/On_your_guard/articleshow/481635.cms. பார்த்த நாள்: 13 May 2009.
- ↑ "The whole world knows me: Celina Jaitley". Sify.com. Indo-Asian News Service. 14 July 2008. 2009-04-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Celina Jaitley". The Global Indian. 2009-04-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-02-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Celina Jaitly". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 December 2002. http://timesofindia.indiatimes.com/articleshow/30891361.cms. பார்த்த நாள்: 11 November 2008.
- ↑ Hingorani, Piya (30 June 2009). "Celina Jaitley campaigns for gay rights". CNN-IBN. 3 ஆகஸ்ட் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 July 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ""Bollywood supports gay rights", says_Celina Jaitley". Sify. 29 June 2009. 4 July 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Celina Jaitley talks about Twitter, LGBT issues". HeadlinesIndia. 14 September 2009. 22 செப்டம்பர் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 September 2009 அன்று பார்க்கப்பட்டது.