செர்காரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செர்கேரியா (Cercaria) என்பது ஒட்டுண்ணிகளில் தட்டைப்புழு வகுப்பின் இளம் உயிரியாகும். இது வித்து அல்லது ரெடியாவின் முளை உயிரணுக்குள் உருவாகிறது.[1] ஒரு செர்கேரியா பெரிய ஊடுருவி சுரப்பிகளைக் கொண்ட குறுகலான தலையினைக் கொண்டுள்ளது.[2] இனத்தைப் பொறுத்து நீண்ட நீச்சல் "வாலுடனோ" அல்லது வால் இல்லாமலோ இருக்கலாம்.[1] நீந்திக்கொண்டு காணப்படும் செர்கேரியா ஒரு புரவலனைக் கண்டுபிடித்துக் குடியேறுகிறது. இங்கு இது முதிர்வடைந்தோ அல்லது மீசோசெர்கேரியாவாகவோ அல்லது மெட்டாசெர்கேரியாவாகவோ மாறும்.

செர்காரியா என்ற சொல் பேரினப் பெயராக விளக்கப்படுகிறது. இது இளம் உயிரியினைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.[3]

வட்டுயிரி (ரோட்டாரியா ரோட்டோடோரியா) சுரக்கும் வேதிப்பொருளான இசுகிசுடோசோம் பக்கவாதம் காரணி, செர்கேரியாவின் நீந்தும் தன்மையினைக் கட்டுப்படுத்துகிறது, இதனால் தொற்று தன்மையும் குறைகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Glossary". VPTH 603 Veterinary Parasitology. University of Pennsylvania School of Veterinary Medicine. பார்க்கப்பட்ட நாள் 2019-05-22.
  2. "Schistosoma". Australian Society for Parasitology. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.
  3. [1] in the World Register of Marine Species
  4. Gao, Jiarong; Yang, Ning; Lewis, Fred A.; Yau, Peter; Collins, James J.; Sweedler, Jonathan V.; Newmark, Phillip A. (2019). Khosla, Chaitan. ed. "A rotifer-derived paralytic compound prevents transmission of schistosomiasis to a mammalian host". PLOS Biology 17 (10): e3000485. doi:10.1371/journal.pbio.3000485. பன்னாட்டுத் தர தொடர் எண்:1545-7885. பப்மெட்:31622335. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்காரியா&oldid=3816624" இலிருந்து மீள்விக்கப்பட்டது