செருமாபென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செருமாபென்சீன்
Skeletal formula of germabenzene
Ball-and-stick model of the germabenzene molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
செருமைன்
வேறு பெயர்கள்
செருமாபென்சீன்; செருமின்; செருமானின்
இனங்காட்டிகள்
75920-32-0 Yes check.svgY
ChemSpider 16739132 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
C5H6Ge
வாய்ப்பாட்டு எடை 138.73 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

செருமாபென்சீன் (Germabenzene) என்பது C5H6Ge என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச்சேர்மம் ஆகும். பென்சீன் வளைய கட்டமைப்பில் உள்ள ஓர் ஐதரசன் அணுவுக்குப் பதிலாக ஒரு செருமேனியம் அணு இடம்பெற்றிருக்கும் வகைச் சேர்மங்களின் பிரதிநிதியாகவும் முதலாவது சேர்மமாகவும் செருமாபென்சீன் உள்ளது. இச்சேர்மம் கருத்தியலாக ஆய்வும் செய்யப்படுகிறது [1] மற்றும் 2,4,6- டிரிசு[பிசு(டிரைமெத்தில்சிலில்)பீனைல் குழுவாக மொத்தமாகவும் தயாரிக்கப்படுகிறது [2]. 2-செருமாநாப்தலீன் போன்ற நிலைப்புத்தன்மை கொண்ட நாப்தலீன் வழிப்பெறுதிகளாகவும் இச்சேர்மம் ஆய்வகங்களில் காணப்படுகிறது [3]. செருமானியத்திற்கும் கார்பன் அணுவுக்கும் இடையிலான பிணைப்பை சாத்தியமுள்ள வினைப்பொருட்களிடமிருந்து 2,4,6- டிரிசு[பிசு(டிரைமெத்தில்சிலில்)பீனைல் குழு பாதுகாக்கிறது. கார்பன் குழு பிரதிநிதிகளான சிலாபென்சீன், சிடானாபென்சீன் போல செருமாபென்சீனும் ஒரு அரோமாட்டிக் சேர்மமாகும்.

ஒரு நிலையான 2-செருமாநாப்தலீன் வழிப்பெறுதி

மேற்கோள்கள்[தொகு]

  1. Ebrahimi, A. A.; Ghiasi, R.; Foroutan-Nejad, C. (2010). "Topological Characteristics of the Ring Critical Points and the Aromaticity of Groups IIIa to VIa Hetero-Benzenes". Journal of Molecular Structure: THEOCHEM 941 (1–3): 47–52. doi:10.1016/j.theochem.2009.10.038. 
  2. Nakata, Norio; Takeda, Nobuhiro; Tokitoh, Norihiro (2002-06-01). "Synthesis and Properties of the First Stable Germabenzene". Journal of the American Chemical Society 124 (24): 6914–6920. doi:10.1021/ja0262941. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://dx.doi.org/10.1021/ja0262941. 
  3. Nakata, N.; Takeda, N.; Tokitoh, N. (2001). "Synthesis and Structure of a Kinetically Stabilized 2-Germanaphthalene: The First Stable Neutral Germaaromatic Compound". Organometallics 20 (26): 5507–5509. doi:10.1021/om010881y. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமாபென்சீன்&oldid=2564041" இருந்து மீள்விக்கப்பட்டது