உள்ளடக்கத்துக்குச் செல்

செய்யது முஹம்மது சலாஹூதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்யது முஹம்மது சலாஹூதீன் (Syed M. Salahuddin) ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இயங்கி வரும் ஈ.டி.ஏ அஸ்கான் குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும், துபாய், ஈ.டி.ஏ ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியவராவார்.

கல்வி

[தொகு]

1961 ல் சென்னை, சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

விருதுகள்

[தொகு]
  • 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற மத்திய கிழக்கிற்கான மேம்பாட்டுக்கான சிறந்த ஆசிய பங்களிப்பாளராக அவர் கௌரவிக்கப்பட்டார். இவ்விருதினை அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துபாயின் ஆட்சியாளருமான முகமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களிடமிருந்து பெற்றார்.[1].
  • 2006-07ஆம் ஆண்டிற்கான பிரவாசி பாரதீய சம்மான் விருதினை அவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.[2].

வரலாறு

[தொகு]

1973 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் ஒரு சிறிய கட்டுமான நிறுவனத்தை சலாஹூதீன் நிறுவினார். பின்னர், அல் குரைர் குடும்பம் மற்றும் புஹாரி குழுமத்துடன் இணைந்து ஈ.டி.ஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தை உருவாக்கினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயின் கட்டுமானங்கள், மின்னாற்றல் திட்டங்கள், உயர்த்தி பொறியியல், மொத்த வர்த்தகம், வாகன விற்பனை, மற்றும் வசதிகள் மேலாண்மை போன்ற பல்வேறு தொழில்களிலும் காலூண்றி வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.tradearabia.com/news/IT_133683.html துபாயின் ஆட்சியாளரிடமிருந்து விருது பெறும் பொழுது
  2. https://www.qsl.net/vu2sdu/etamd.html முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து விருது பெறும் பொழுது