செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A giant lock of the Saint Petersburg Dam

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் வெள்ளத்தடுப்பு அமைப்பு [1] (Saint Petersburg Flood Prevention Facility Complex, உருசியம்: Комплекс защитных сооружений Санкт-Петербурга от наводнений, kompleks zashchitnykh sooruzheniy Sankt-Peterburga ot navodneniy), பொதுவாக செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அணை, உருசியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரின் அண்மையில் கட்டப்பட்டுள்ள 25 km (16 mi) நீளமுள்ள வெள்ளத் தடுப்பிற்கான அணைகளின் அமைப்பாகும். இந்த அணை லோமோலோசோவிலிருந்து வடக்கே கோட்லின் தீவின் குரோன்ஸ்டாட்ட் வரையும் பின்னர் கிழக்கே திரும்பி லிசிலி நோசு முனை வரை அமைந்துள்ளது.

நேவா விரிகுடாவை பின்லாந்து வளைகுடாவிலிருந்து தடுத்து வெள்ளநீரிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரை காப்பாற்றுவதற்காக இந்த கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுப்படி பின்லாந்து வளைகுடாவிலிருந்து கடல்நீர் 300 முறை இந்த நகரில் வெள்ளமாகத் திரண்டு பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணைக்கட்டமைப்பு 5 m (16 அடி) வரை எழும் நீர்மட்டத்திலிருந்து நகரைக் காப்பாற்றும்.[2]

1978 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தக் கட்டமைப்பு உருசியாவின் மிக நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்ட திட்டமாக விளங்கியது. 1990களிலும் 2000களிலும் தொடர்ந்து தடைபட்டுவந்த இந்த்த் திட்டம் 2005ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரைச்சேர்ந்த விளாடிமிர் பூட்டின் உருசியத் தலைவராக பொறுப்பேற்றபின்னர் முழுவீச்சில் நடைபெறத் துவங்கியது. அனைத்து தென்பகுதியில் கட்டமைக்கப்பட்ட அமைப்புகளும் முடிவடைந்து 1.2 km (0.75 mi) நீளமுள்ள கடலடியில் செல்லும் சுரங்க சாலைப்பாதையும் தயாரானபிறகு இறுதியாக புடின் 2011ஆம் ஆண்டு இந்த அணைத்திட்டத்தை துவக்கி வைத்தார். [2][3] இதுவே உருசியாவின் நீளமான கடலடி சுரங்க சாலைப்பாதையாகும்.[4]

நேவா விரிகுடாவின் கடல்நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்கும் துணைத்திட்டமாக 30க்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களும் அணையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2003 ஆம் ஆண்டு பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கட்டமைப்பு மீண்டும் துவங்கும் முன்னர் இது "லெனின்கிராட் வெள்ளத்தடுப்பு அமைப்பு" என அலுவல்முறையாக அறியப்பட்டிருந்தது.
  2. 2.0 2.1 2.2 St. Petersburg gets protecting dam பரணிடப்பட்டது 2012-09-08 at the வந்தவழி இயந்திரம் Voice of Russia
  3. Saint Petersburg Dam official site (உருசிய மொழியில்)
  4. Ship opening S-1 at spb-projects.ru (உருசிய மொழியில்)

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Saint Petersburg dam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.