செயற்கை சிறுநீரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுநீரகம் உயிர் வாழ மிகவும் அவசியம். நோய் தொற்று, வயது, காயம்படுதல், சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவுகுறைதல், ஆகியவை சிறுநீரகத்தின் செயல்பாட்டை குறைக்கும். இதன் விளைவாக உடலில் நச்சு கழிவுகள் அதிகமாகும். இது மரணத்திற்கே வழிவகுக்கும்.

செயற்கை சிறுநீரகம்:[தொகு]

சிறுநீரகம் செயலிழந்தால் செயற்கை சிறுநீரகம் உயிர் காக்க பயன்படும். செயற்கை சிறுநீரகம் என்பது டயாலிசிஸ் எனும் முறையில் இரத்தத்தில் உள்ள கழிவு பொருள்களை நீக்கும் கருவியாகும். செயற்கை சிறுநீரகம் ஒரு புறம் மட்டுமே ஊடுருவி செல்லும் படலம் கொண்ட சிறு குழல்களை கொண்டதாகும். இதை டயலாசிங் என்னும் பிரிப்பு திரவத்தில் இனைக்கப்படும். இத்திரவம் இரத்தத்தில் உள்ள அதே அளவு சவ்வூடு பரவல் அழுத்தத்தைக் கொண்டிருக்கும். நோயாளியின் இரத்தம் இக்குழல்களின் வழியாக செலுத்தப்படும்போது, இச்செயல்பாட்டில் இரத்தத்தில் உள்ள கழிவு பொருள்கள் ஊடுருவல் முறையில் வெளியேற்றப்படும். கழிவு நீக்கம் செய்யப்பட்ட இரத்தம் மீண்டும் .நோயாளியின் உடலில் செலுத்தப்படும். இச்செயல்பாடு சிறுநீரகத்தின் செயல்பாட்டை ஒத்திருக்கிறது. இச்செயல்முறையில் சிறுநீரகத்தால் செயல்படும் 'மீண்டும் திரும்ப உறிஞ்சுதல்' மட்டும் நடைபெற இயலாது. சாதரணமாக நல்ல உடல் நிலையில் உள்ள மனிதரில் நாளொன்றுக்கு 180 லிட்டர் இரத்தம் சிறுநீரகத்தால் வடிகட்டப்படுகிறது. இதிலிருந்து நாளொன்றுக்கு 1-1.5 லிட்டர் அளவு கழிவு பொருள்கள் அடங்கிய நீர் சிறுநீராக வெளியேற்றப்படுது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_சிறுநீரகம்&oldid=2396713" இலிருந்து மீள்விக்கப்பட்டது