செயற்கை இதயமுடுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு இதயமுடுக்கி, செண்டிமீட்டர்களில் அளவுகோல்
சிரையினூடாக செலுத்தப்படுவதற்கான மின்முனையுடனான ஒரு செயற்கை இதயமுடுக்கி (செண்ட். ஜூட் மெடிக்கலிலிருந்து)இந்த கருவியின் நீளம் சுமார் 4 செண்டிமீட்டர்கள் உள்ளது, மின்முனை 50 முதல் 60 செண்டிமீட்டர்கள் (20 முதல் 24 இஞ்சுகள்) அளவாயிருக்கிறது.

ஒரு இதயமுடுக்கி (pacemaker) அல்லது செயற்கை இதயமுடுக்கி(artificial pacemaker), இதயத்துடைய இயற்கையான முடுக்கியுடன் தவறாக அர்த்தங்கொள்ளக்கூடாது) என்பது இதயத் தசைகளை மின் முனைகள் தொடர்பு கொள்ளும்போது வெளிவரும் மின் துடிப்புகளைப் பயன்படுத்தி இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் ஒரு மருத்துவக் கருவியாகும். இதயமுடுக்கியின் முக்கிய நோக்கம் ஒரு போதுமான இதய விகிதத்தை பராமரிப்பதாகும். இதயத்துடைய இயற்கை முடுக்கியானது போதுமான வேகத்திற்கு செயல்படாததால் அல்லது இதயத்துடைய மின்கடத்தும் அமைப்பில் தடுப்பு இருப்பதால் இது அவசியமாகிறது. நவீன இதயமுடுக்கிகள் வெளியிலிருந்தே நிரல் ஏற்கக்கூடியவைகளாய் இருக்கின்றன. மேலும் இதயவியல் மருத்துவர் தனித்தனி சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான தகுந்த வேகமுறைமைகளை நியமிக்க முடிகிறது. சில கருவிகள் ஒரே ஒற்றை உட்பொருத்தக்கூடிய கருவியில் இதயமுடுக்கியையும் உதறல்நீக்கியையும் (டீஃபிப்ரிலேட்டர்) சேர்க்கின்றன. மற்றவற்றில் இதயத்தின் பல்வேறு இடங்களை பல மின்முனைகள் தூண்டிவிட்டு இதயத்தின் கீழ் அறைகளின் ஒத்தியங்கலை மேம்படுத்துகின்றன.

வரலாறு[தொகு]

முதன் முதல் உருவாக்கப்பட்ட உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கி.
1958 ஆம் ஆண்டில், ஆர்ன் லார்சன் (1915-2001) ஒரு உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைப் பெறக்கூடிய முதல் நபர் ஆனார்.அவருடைய வாழ்நாளில் அவர் மொத்தம் 26 கருவிகளைப் பெற்று, இதயமுடுக்கிகள் தேவைப்படுகிற மற்ற நோயாளிகளுக்காக பிரச்சாரம் செய்தார்.

1899ம் ஆண்டில், ஜே.ஏ. மெக்வில்லியம் என்பவர் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் (ஆங்கிலேய மருத்துவ இதழ்), இதயம் சுருங்காத நிலையின் போது இதயத்திற்கு மின் தூண்டுதல் அளிப்பது இதயக்கீழறையில் சுருக்கத்தை உண்டாக்கிய தம்முடைய பரிசோதனைகளைக் குறித்து அறிவித்திருந்தார். மேலும் நிமிடத்திற்கு 60-70 என்ற இடைவெளிகளில் தூண்டுதல் அளிக்கப்படும்போது நிமிடத்திற்கு 60-70 துடிப்புகள் வீதத்தில் இதயத் தாளம் தூண்டப்பட்டதாகவும் அறிவித்தார்.[1]

1936ம் ஆண்டில், சிட்னியின் ராயல் பிரின்ஸ் ஆல்ஃப்ரட் மருத்துவமனையின் டாக்டர். மார்க் சி லிட்வெல் சிட்னி பல்கலைகழகத்தின் மருத்துவர் எட்கர் எச் பூத்துடைய துணையுடன் ஒரு கையடக்கமான கருவியை உண்டாக்கினர். இது ஒரு “மின் முனையில் செருகப்பட்டு” “ ஒரு முனை ஆழமான உப்பு திரவத்தில் தொய்க்கப்பட்ட ஒரு தோல் துண்டுடன் பொருத்தப்பட்டது”, மற்றொரு முனையில் “அந்த ஒரு முனை தவிர மற்றெல்லா இடங்களும் காப்பிடப்பட்டு, தகுந்த இதய அறையில் அமிழ்த்தப்பட்டது”. “இதயமுடுக்கி விகிதமானது நிமிடத்திற்கு 80 முதல் 120 வரை வேறுபடக்கூடியதாயிருந்தது. அதே போன்று மின்னழுத்தமும் 1.5 முதல் 120 வோல்டுகளாக வேறுபடக்கூடியதாயிருந்தது”. 1928 ஆம் ஆண்டு சிட்னியில் உள்ள கிரௌன் ஸ்ட்ரீட் மகளிர் மருத்துவமனையில் ஒரு இறந்து பிறந்த குழந்தையை மறுபடியும் உயிர்ப்பிக்க இந்த உபகரணம் பயன்படுத்தப்பட்டது. “10 நிமிட தூண்டுதலுக்குப் பிறகு” அதன் இதயம் “இயல்பு நிலைக்கு வந்தது”.[2][3]

1942 ஆம் ஆண்டில், தனியாக வேலை செய்துகொண்டிருந்த ஆல்பர்ட் ஹைமன் என்ற உடற்செயலியல் மருத்துவர், தன்னுடைய சொந்த மின்னியக்க கருவி ஒன்றை விவரித்தார். அது ஒரு சுருள்வில் கை-சுழற்றி மோட்டார் மூலமாக இயங்கினது. ஹைமன் தாமே தம்முடைய கண்டுபிடிப்பிற்கு “செயற்கை இதயமுடுக்கி” என்று பெயரிட்டார். அந்த பெயரே இந்நாள் வரை வழங்கிவருகிறது.[4][5]

1930களின் தொடக்கத்திலிருந்து இரண்டாம் உலகப் போர் வரை நடைபெற்ற ஆராய்ச்சிகளின் வெளிப்பதிவில் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டது. ‘மரித்தவர்களை உயிர்ப்பிப்பதால்’ இயற்கையோடு இடையூறு செய்வதாக பொதுமக்கள் எண்ணியதின் விளைவாக இது ஏற்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு, “ஹைமன் தன்னுடைய உடன் மருத்துவர்கள் மற்றும் அக்காலத்திலிருந்த செய்தித்தாள் பதிப்புகளின் வாயிலான எதிர்மறையான பிரகடனத்தினால் மனிதர்களில் தன்னுடைய இதயமுடுக்கியின் பயன்பாடு குறித்த தரவை வெளியிடவில்லை. லிட்வெல் இதை அறிந்திருந்திருக்கக் கூடும். ஆகவே தன்னுடைய பரிசோதனைகளை மனிதர்களில் மேற்கொள்ளவில்லை”.[3]

டொரண்டோ பொது மருத்துவமனையில் இதயமார்பக அறுவை சிகிச்சை மருத்துவர் வில்ஃப்ரட் கார்டன் பிக்லோ மேற்கொண்ட கவனிப்புகளிலின் அடிப்படையில் 1950 ஆம் ஆண்டு கனடாவின் மின்பொறியாளர் ஜான் ஹாப்ஸ், ஒரு புற இதயமுடுக்கியை வடிவமடைத்து உருவாக்கினார். சருமத்தூடான வேகக்கட்டுப்பாட்டை வெற்றிடக்குழாய் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரு பெரிய புறக்கருவி பயன்படுத்தப்பட்டது. இது பார்ப்பதற்கு சற்று நளினமற்று காணப்பட்டு சிகிச்சை பெறுபவருக்கு வலியுமளித்தது. இந்த கருவி ஒரு AC சுவர் தாங்குகுழியினால் இயக்கப்பட்டு கீழறை உதறலைத் தூண்டி சிகிச்சை பெறுபவர் மின்சாரம் பாய்ந்து இறப்பதற்கான அபாயத்தைப் பெற்றிருந்தது.

பால் சால் உட்பட பல கண்டுபிடிப்பாளர்கள், இதை விட சிறிய ஆனாலும் இன்னமும் சற்று பெரிதாகவே காணப்பட்ட சருமத்தூடாக வேகக்கட்டுப்படுத்தும் கருவிகளை தொடரும் ஆண்டுகளில் உண்டாக்கினர். இவை மின்னளிப்பிற்கு ஒரு பெரிய மறுவூட்ட மின்கலத்தைப் பயன்படுத்தின.[6]

1967 ஆம் ஆண்டு, டாக்டர். வில்லியம் எல். விய்ரிக் மின்னசோடா பல்கலை கழகத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிட்டார். இந்த ஆய்வுகள் முழு இதயத்தடை ஏற்பட்டிருந்த விலங்கு ஆய்வுக்குட்படுபவைகளில் ஒரு இதயத்தசை மின்முனையைப் பயன்படுத்தி இதய விகிதம், இதய வெளியீடு மற்றும் சராசரி பெருந்தமனி அழுத்தங்கள் சீர்நிலைக்கு வருவது செய்து காட்டப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னான இதயத்தடுப்பை திறம்பட கட்டுப்படுத்தும் இந்த முறை, இக்கால கட்டத்தில் இதயத் திறப்பு அறுவைசிகிச்சையினால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது.[7]

சிலிக்கான் திரிதடையம் (டிரான்சிஸ்டர்) உருவாக்கப்பட்டு முதல் முறையாக 1956 ஆம் ஆண்டு வர்த்தக முறையில் கிடைக்கப்பெறுதல் எளிமையான இதயமுடுக்கி உருவாக்கலில் ஒரு மிக முக்கிய நிகழ்வாகும்.

1957 ஆம் ஆண்டு, மின்னசோடா, மினியாபொலிசை சேர்ந்த எர்ல் பாக்கன் என்ற பொறியாளர் டாக்டர். சி. வால்டன் லில்லிஹே என்பவரிடம் சிகிச்சை பெற்றவருக்கு முதன்முதலில், அணிந்துகொள்ளக்கூடிய புற இதயமுடுக்கியை உருவாக்கினார். திரிதடையமாக்கப்பட்ட இந்த இதயமுடுக்கி, ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் அமைக்கப்பட்டு, இதயவிகிதத்தின் வேகக்கட்டுப்பாட்டையும் மின்னழுத்த வெளிப்பாட்டையும் மாற்றியமைக்க கட்டுபாடுகள் கொண்டிருந்தது. இது சிகிச்சை பெறுபவரின் சருமத்தூடாக சென்ற மின்முனைகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. இவை இதயத்தசையின் மேற்பரப்பில் பொருத்தப்பட்டிருந்த மின்முனைகளில் சென்று முடிவடைந்தது.

ஸ்வீடனின் சோல்னாவிலுள்ள கேரலின்ஸ்கா நிறுவனத்தில் தான் முழுவதும் உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கி ஒன்று ஒரு மனிதருக்கு மருத்துவரீதியாக பொருத்தப்பட்டது. இது ரூன் எல்ம்க்விஸ்ட் மற்றும் அறுவை மருத்துவர் ஏக் சென்னிங்க் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட இதயமுடுக்கியைக் கொண்டு செய்யப்பட்டது. இது மார்பகத்திறப்பு மூலமாக இதயத்தசைக்குப் பொருத்தப்பட்ட மின்முனைகளோடு பொருத்தப்பட்டிருந்தது. இந்தக் கருவியானது மூன்று மணிநேரங்களுக்குப் பின்பு செயலற்றுவிட்டது. இரண்டாவது கருவியொன்று உட்பொருத்தப்பட்டது. இது இரண்டு நாட்களுக்கு நீடித்தது. உலகின் முதல் உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைப் பெற்ற சிகிச்சை பெறுபவராக ஆன் லார்சன், தன்னுடைய வாழ்நாளின் போது இதற்குப் பின் 26 வெவ்வேறு இதயமுடுக்கிகளை பெறலானார். இவர் 2001 ஆம் ஆண்டு 86 வயதில் மரித்தார்[8].

1969 ஆம் ஆண்டு, ஃபர்ம்ன் மற்றும் பிறர் தற்காலிக சிரைவழி வேகக்கட்டுப்படுத்தலை முதன்முதலில் செய்து காட்டினர். இதில் வடிகுழாய் மின்முனையானது சிகிச்சை பெறுபவருடைய கைஉட்சிரை வழியாக உட்செலுத்தப்பட்டது.[9]

1970 ஆம் ஆண்டு, மருத்துவர்கள் ஃபியாண்ட்ராவும் ரூபியோவும் மாண்டவீடியோ, யுருகுவேயின் காஸ்மு மருத்துவமனையில் ஸ்வீடன் நாட்டு எல்ம்க்விஸ்ட் வடிவமைப்பின் ஒரு மேம்பட்ட வடிவுருவை உட்பொருத்தினர். அந்தக் கருவியானது சிகிச்சை பெறுபவர் மற்ற நோய்களினால் ஒன்பது மாதங்கள் கழித்து மரிக்கும்வரை நீடித்தது. முந்தைய ஸ்வீடன் நாட்டில் வடிவமைக்கப்பட்ட கருவிகள் வெளியிலிருந்து ஒரு தூண்டற்சுருளைக் கொண்டு மின்னேற்றப்பட்ட மறுவூட்ட மின்கலங்களை பயன்படுத்தின.

பெருமளவிலான விலங்கியல் சோதனைக்குப்பின் வில்சன் கிரேட்பாட்ச் மூலமாக உருவாக்கப்பட்ட உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கிகள் 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக மனிதர்களில் பயன்படுத்தப்பட தொடங்கின. கிரேட்பாட்ச் கண்டுபிடிப்பு முந்தைய ஸ்வீடன் நாட்டு கருவிகளில் வேறுபட்டதாயிருந்தது. அவை ஆற்றல் மூலமாக முதனிலை மின்கலங்களைப் (பாதரச மின்கலம்) பயன்படுத்தின. முதல் சிகிச்சை பெறுபவர் மேலும் 18 மாதங்கள் வாழ்ந்தார்.

ஒரு உட்பொருத்தப்பட்ட இதயமுடுக்கியுடன் சிரையூடான வேகக்கட்டுப்படுத்துதலின் உபயோகம் 1962-63ல் முதன் முதலில் USAவின் பார்சொனெட் [10][11][12], ஸ்வீடனின் லாகர்க்ரென்[13][14] மற்றும் ஃபிரான்சின் ஜான் – ஜேக்ஸ் வெல்டி[15] ஆகியோரால் செய்யப்பட்டது.

இந்த சிரைவழி செயல்முறையில் ஒரு சிரை கிழிக்கப்பட்டு அதற்குள் கதிர்வீச்சு முறை (ஃப்ளூரோஸ்கோபி) வழிகாட்டலின் உதவியோடு வடிகுழாய் மின்முனையானது வலது கீழறையின் தடுப்புகளுக்குள் அமரும் வரை உட்செலுத்தப்பட்டது. 1960களின் மத்தியக் காலங்களில் இந்த முறை விரும்பப்பட்ட முறைமையானது.

உலகின் முதல் லித்தியம்-அயொடைட் மின்கல சக்தி பெற்ற இதயமுடுக்கி.கார்டியாக் பேஸ்மேக்கர்ஸ் இன்க். 1972

இதற்கு முற்பட்ட உட்பொருத்தக்கூடிய கருவிகள் அனைத்தும் நம்பகமற்றதாய் அப்போது கிடைக்கப்பெற்ற முதனிலை மின்கல தொழில் நுட்பமாகிய பெரும்பாலும் பாதரச மின்கலத்தின் குறுகிய ஆய்வுக்காலத்தினால் அவதியுற்றன.

1980களின் முடிவில் USA விலுள்ள ARCO உட்பட, பல நிறுவனங்கள் ஐசோடோப் மூலமாக வலுவூட்டிய இதயமுடிக்கிகளை உருவாக்கின. ஆனால் 1990 ஆம் ஆண்டு வில்சன் கிரேட்பாட்ச் உருவாக்கிய லித்தியம்-அயொடைட் மின்கலம் இதனை விஞ்சிவிட்டது. லித்தியம் –அயொடைட் அல்லது லித்தியம் நேர்மின்முனை மின்கலங்கள் எதிர்கால இதயமுடுக்கி வடிவங்களின் நிலையான உறுப்பானது.

முந்தைய கருவிகளின் நம்பகத்தன்மைக்கு இடையூறாக நின்ற மற்றொரு அம்சம் உடற்பாய்பொருட்களிலிருந்து ஈப்பாக்சி பிசின் கூட்டடைவு மூலமாக நீராவி பரவுவதாகும். இது எலக்ட்ரானிக் மின்சுற்றமைப்பை பாதித்தது. ஒரு காற்றுப்புகா முத்திரையிடப்பட்ட உலோகப் பெட்டியில் இதயமுடுக்கிக் கருவியை பெட்டகத்து வைப்பதால் இந்த தோற்றப்பாடு முறியடிக்கப்பட்டது. இதை முதலில் 1989 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் டெலெக்ட்ரானிக்ஸ் செய்தது, இதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டில் மினியாபொலிஸின் கார்டியாக் பேஸ்மேக்கர்ஸ் இன்க் செய்தது. டைடேனியம் கொண்டு பெட்டகத்து வைக்கும் இந்த தொழில்நுட்பம் 1990களின் மத்தியில் நிலையான பழக்கமானது.

மெட்டிரானிக் மினியாபொலிஸின் பாப் ஆண்டர்சன், தூய ஜார்ஜ் மருத்துவமனை, லண்டனின் ஜெ.ஜி (ஜெஃப்ரி) டேவிஸ், அமெரிக்கன் ஆப்டிக்கல்லின் பெரோ பெர்க்கொவிட்ஸ் மற்றும் ஷெல்டன் தேலர், டெலக்டிரானிக்ஸ் ஆஸ்திரேலியாவின் ஜெஃப்ரி விக்ஹம், மியாமியின் கார்டிஸ் கார்ப்பின் வால்டர் கெல்லர், முன்னமே கூறின ஸ்வீடனின் எலீமா-ஷொனேண்டரின் ரூன் எல்ம்க்விஸ்ட்டுடன் சேர்ந்த ஹான்ஸ் தார்னேண்டர், ஹாலண்டின் யான்வில்லெம் வேன் டெர் பெர்க் மற்றும் கார்டியாக் பேஸ்மேக்கர்ஸ் இன்க்., கைய்டண்டட்டின் ஆந்தனி அடுச்சி ஆகியோர் ஆரம்ப நாட்களில் இதயமுடுக்கியின் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பங்களித்தவர்கள் ஆவர். இன்னும் அண்மையில், ஏவரி பையொமெடிக்கல் டிவைசஸ் மூலமாக விற்கப்படும் டாக்டர். வில்லியம் எச். டொபெல்லுடைய கையடக்கமான சுவாச இதயமுடுக்கியை நாலங்கவாதம், மூச்சின்மை மற்றும் மற்ற சுவாசப் பிரச்சனைகள் உள்ள நோயாளிகள் பயன்படுத்துகின்றனர்.

வேகக்கட்டுப்பாட்டு முறைகள்[தொகு]

தட்டல் வேகக்கட்டுப்பாடு[தொகு]

மார்பகத்தாண்டு பொறிமுறை வேக்கட்டுபாடு என்றும் அழைக்கப்படும் தட்டல் வேகக்கட்டுப்பாடு, பொதுவாக மார்பெலும்பின் கீழ் இடது பக்கத்தில் வலது இதயக்கீழறைக்கும் மேலே பெருஞ்சிரையில், மூடிய கைமுட்டியைக் கொண்டு ஒரு கீழறை தாளத்தை தூண்ட 20 – 30 செமீ தூரத்திலிருந்து அடிப்பதாகும் (பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் அனெஸ்தீஷியா இதயக்கீழறையின் அழுத்தத்தை 10 – 15 மிமீஎச்ஜீக்கு உயர்த்தி மின் செயல்பாட்டை தூண்ட இது செய்யப்படலாமென்று ஆலோசிக்கிறது). இது ஒரு மின் இதயமுடுக்கி நோயாளியின் அருகே கொண்டு வரும்வரை உயிர்க்காக்கும் முறையாக மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு பழைய முறையாகும்.[16]

சருமத்தூடான வேகக்கட்டுப்பாடு[தொகு]

இரத்தவோட்டயியலில் குறிப்பிடத்தக்க குறை இதயத் துடிப்பின் அனைத்து வகைகளுக்கும் புற வேகக்கட்டுப்பாடு என்றும் அழைக்கப்படும் சருமத்தூடான வேகக்கட்டுப்பாடு (TCP) பரிந்துரைக்கப்படுகிறது. இரண்டு வேகக்கட்டுப்பாட்டு மெத்தைகளை நோயாளியின் நெஞ்சில், முன்புறம்/பக்கவாட்டு அல்லது முன்புறம்/பின்புறத்தில் வைத்து இந்த செய்முறை செய்யப்படுகிறது. மீட்பவர் வேக்கட்டுப்பாட்டு விகிதத்தை தேர்ந்தெடுத்து, ஒரு தொடர்புடைய நாடித்துடிப்புடன் மின் பிடிப்பு ஏற்படும் வரை (ஒரு அகலமான QRS காம்ப்ளெக்ஸுடனும், ECGல் உயரமான அகலமான T அலையாலும் சித்தரிக்கப்படுகிறது), மெது மெதுவாக வேகக்கட்டுப்பாட்டு மின்சாரத்தை (mAவில் அளக்கப்படுகிறது) அதிகரிக்கிறார். ECGயிலுள்ள வேகக்கட்டுப்பாட்டுப் பொருள் மற்றும் கடுமையான தசை இழுப்புகளால் இந்த நிர்ணயிப்பு கடினமாகிறது. நீண்ட நேரங்களுக்கு புற வேகக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை வைக்கக்கூடாது. சருமத்தூடான வேகக்கட்டுப்பாடு அல்லது மற்ற சிகிச்சைமுறைகள் பயன்படுத்தப்படும் வரை இது ஒரு பாலமாக அமைகிறது.

இதய வெளியுறை வேகக்கட்டுப்பாடு (தற்காலிகமானது)[தொகு]

திறப்பு இதய அறுவை சிகிச்சையில் ஒரு இதய ஊற்றறை கீழறை தடுப்பு (ஏட்ரியோவெண்ட்ரிகுலர் பிலாக்) ஏற்படுவதானால் அப்போது தற்காலிக இதய வெளியுறை வேகக்கட்டுப்பாடு பயன்படுத்தப்படுகிறது. ஒரு தற்காலிக சருமத்தூடான மின்முனை உட்புகுத்தப்படும்வரை போதுமான இதய வெளியீட்டை பராமரிக்க இதயக்கீழறையின் வெளிச்சுவற்றில் (இதய வெளியுறை) தொடர்புகொள்ளும் வண்ணம் மின்முனைகள் வைக்கப்படுகின்றன.

தற்காலிக (இதய வெளியுறை) கீழறை இதயமுடுக்கியுடைய ஒரு சிகிச்சை பெறுபவரில் குறுமட்டம் நிர்ணயிப்பில் ஒரு ECG தாளத் துண்டு.பெருநாடி வாயில் அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை பெறுபவர் செயலிழந்தப்பின் இதய வெளியுறை நடத்திகள் வைக்கப்பட்டன.வரைவியின் முதல் பாதியில், நிமிடத்திற்கு 60 துடிப்புகள் என்று இதயமுடுக்கி தூண்டுவது ஒரு அகலமான QRS காம்ப்ளெக்ஸ் தோற்றுவித்திருக்கிறது. இதில் வலது கொத்து கிளைத் தொகுப்பு வடிவம் தெரிகிறது.படிப்படியாக பலம் குறைந்த வேகக்கட்டுப்பாடு தூண்டுதல் அளிக்கப்படுகிறது. இதனால் வரைவியின் இரண்டாவது பாதியில் இதயம் சுருங்காத நிலை ஏற்படுகிறது.வரைவின் முடிவில், (குறுகிய) தாழாக்சிய வலிப்பினால் நேரும் தசை இழுப்புகளால் திரிவு ஏற்படுகிறது.குறைந்த இதயமுடுக்கி தூண்டுதலினால் கீழறை நழுவு தாளம் நேரிடாததால், சிகிச்சை பெறுபவர் இதயமுடுக்கி-சார்ந்து இருக்கிறாரென்று கூறலாம். அவருக்கு ஒரு வரையறுக்கப்பட்ட இதயமுடுக்கி தேவைப்படுகிறது.

சிரைவழி வேகக்கட்டுப்பாடு (தற்காலிகம்)[தொகு]

தற்காலிக வேகக்கட்டுப்பாடிற்கு சிரைவழி வேகக்கட்டுப்பாடு பயன்படுத்தப்படும்போது சருமத்தூடான வேகக்கட்டுப்பாடிற்கு மாற்றாகும். ஒரு இதயமுடுக்கி கம்பியானது நுண்ணுயிரற்ற நிலைகளில் ஒரு சிரையில் வைக்கப்பட்டப்பின், வலது இதய ஊற்றறை (ஏட்ரியம்) அல்லது கீழறைக்குள் செலுத்தப்படுகிறது. இந்த வேகக்கட்டுப்பாட்டு கம்பியானது பின்பு உடலுக்கு வெளியே ஒரு புற இதயமுடுக்கியுடன் இணைக்கப்படுகிறது. நிரந்தர இதயமுடுக்கி வைப்பதற்கு ஒரு பாலமாக சிரைவழி வேகக்கட்டுப்பாடு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிரந்தர இதயமுடுக்கி உட்பொருத்தப்படும்வரை அல்லது இதயமுடுக்கி இனிமேலும் தேவையில்லை என்ற நிலைவந்து வெளியே எடுக்கப்படும்வரை அது அங்கேயே வைக்கப்படலாம்.

நிரந்தர வேகக்கட்டுப்பாடு[தொகு]

ஒரு இதயமுடுக்கி உட்பொருத்து செயல்முறையின் போது எக்ஸ்-ரேக்குக் கீழ் தெரிகின்ற வலது ஊற்றறை மற்றும் வலது கீழறை நடத்திகள்.படத்தின் மேல் இடதுப் பக்கத்தில் ஒரு U போன்ற வடிவத்திலுள்ள வளைந்த ஒன்றே ஊற்றறை நடத்தியாகும்.

உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியுடன் நிரந்தர வேகக்கட்டுப்பாடு செய்யும்போது அதில் இதயத்தின் ஒரு அறை அல்லது அறைகளுக்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேகக்கட்டுப்பாட்டு மின்முனைகளை சிரைவழியாக வைத்தல் உட்படும். இந்த செய்முறையில் தகுந்த ஒரு சிரையை கீறி கிழித்து அதில் மின்முனை நுழைக்கப்படுகிறது. இது சிரைவழியாக இதயத்தின் வாயில் வழியாக அறையில் ஓரிடத்தில் அமரும் வரை செலுத்தப்படுகிறது. இந்த செய்முறையானது ஃப்ளூரோஸ்கோபியினால் வழிநடத்தப்படுகிறது. இதன் விளைவால் மருத்துவர் அல்லது இதயவியல் நிபுணர் மின்முனைக் கம்பி செல்லும் பாதையைக் காணமுடிகிறது. மின்முனை ஒரு சரியான இடத்தில் அமர்ந்துவிட்டதென்பது உறுதியான பின்பு, மின்முனை நடத்தியின் மறுமுனை இதயமுடுக்கி இயற்றியுடன் (ஜெனரேட்டர்) இணைக்கப்படுகிறது.

ஈடுபடுகின்ற அறைகளின் எண்ணிக்கை மற்றும் அவைகளின் அடிப்படை இயக்க முறைமைகளின் அடிப்படையில் மூன்று அடிப்படை வகை நிரந்தர இதயமுடுக்கிகள் உள்ளன:[17]

 • ஒற்றை-அறை இதயமுடுக்கி . இவ்வகையில், இதய ஊற்றறை அல்லது கீழறை ஏதாவது ஒரு இதய அறையில் ஒரே ஒரு வேகக்கட்டுப்பாட்டு நடத்தி மட்டுமே வைக்கப்படுகிறது.[17]
 • இரட்டை-அறை இதயமுடுக்கி . இங்கு கம்பிகள் இதயத்தின் இரு அறைகளில் வைக்கப்படுகின்றன. ஒரு நடத்தி இதய ஊற்றறையை வேகக்கட்டுப்பாடு செய்கிறது, மற்றொன்று இதயக் கீழறையை அவ்வாறு செய்கிறது. இந்த வகையானது ஊற்றறைகள் மற்றும் கீழறைகளுக்கிடையேயான இயக்கங்களை ஒருங்கிணைத்து இதயத்தின் இயற்கையான வேகக்கட்டுப்பாட்டைப் போலவே தென்படுகின்றது.[17]
 • வேகம்-இணக்கமுள்ள இதயமுடுக்கி . இந்த இதயமுடுக்கியானது நோயாளியின் உடல் செயல்பாட்டில் மாற்றங்களை கண்டறிந்து உடலின் வளர்சிதை மாற்ற தேவைகளுக்கேற்ப தானாகவே வேகக்கட்டுப்பாட்டு விகிதத்தை மாற்றியமைக்கின்றது.[17]

இதயமுடுக்கி இயற்றியானது காற்றுப்புகா வண்ணம் மூடப்பட்ட ஒரு கருவியாகும். இதில் பொதுவாக லித்தியம் மின்கலம் போன்ற ஒரு சக்தி மூலம், ஒரு உணர்திறன் பெருக்கி, இதயமுடுக்கிக்குத் தேவையான கணினி தருக்கம் மற்றும் மின்முனைகளுக்கு வேகக்கட்டுப்பாட்டு தூண்டுதலை அளிக்கும் வெளியீட்டு மின்சுற்று ஆகியவை காணப்படும். இதில் உணர்திறன் பெருக்கியானது இதய மின்முனைகளால் உணரப்பட்ட இயற்கையான இதயத் துடிப்புகளின் மின் வெளிப்பாட்டை செயல்முறைப்படுத்துகிறது.

பெரும்பாலும் இயற்றியானது, மார்பகச் சுவரின் சருமத்தடி கொழுப்பிற்குக் கீழ், நெஞ்சின் எலும்புகள் மற்றும் தசைகளுக்கு மேலே வைக்கப்படுகிறது. எனினும் ஒவ்வொரு நபருக்கு ஏற்றார் போல் இதன் வைப்பிடம் மாறலாம்.

உடம்புடைய நோயெதிர்ப்பு மண்டலம் பொதுவாக அதை நிராகரிக்காத வண்ணம் இதயமுடுக்கிகளின் வெளிப்பெட்டகங்கள் வடிமவமைக்கப்படுகின்றன. இது பொதுவாக டைடேனியம் என்ற பொருளால் செய்யப்படுகிறது. இது உடலுடன் எந்த செயல்பாடும் புரிவதில்லை. இந்த முழு கருவியும் நிராகரிக்கப்படாமல் ஒரு உடல் துளையிடுதலில் நிகழ்வது போல வடுதிசுவினால் சூழப்படும்.

அடிப்படை செயல்பாடு[தொகு]

நவீன இதயமுடுக்கிகளில் பொதுவாக பல செயல்பாடுகள் இருக்கின்றன. மிகவும் அடிப்படை வடிவமானது இதயத்துடைய இயற்கையான மின் தாளத்தை கண்காணிக்கிறது. இதயமுடுக்கியானது ஒவ்வொரு துடிப்பு கால அடிப்படையில் ஒரு இதயத்துடிப்பை உணரமுடியாத போது, அது இதயக் கீழறையை ஒரு சிறிய குறைவு மின்னழுத்தத் துடிப்பைக் கொண்டு தூண்டிவிடுகிறது. இந்த உணர்தல் மற்றும் தூண்டுதல் செயல்பாடு ஒவ்வொரு இதயத் துடிப்பின் அடிப்படையில் தொடர்கிறது.

இன்னும் முன்னேற்றமடைந்த வடிவங்கள் மற்ற செயல்பாடுகளுடன் இதயத்தின் ஊற்றறை மற்றும் கீழறைகளை உணர்ந்து மற்றும்/ அல்லது தூண்டுவதற்கான ஆற்றல் பெற்றவைகளாக இருக்கும்.

குறை இதயத்துடிப்பிற்கு எதிரான வேகக்கட்டுப்பாட்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட NASPE/BPEG பொதுவான குறியீடு [18]
II III IV V
வேகக்கட்டுபாடு செய்யப்படும் அறை(கள்) உணரப்படும் அறை(கள்) உணர்தலுக்கான பதிலளிப்பு வேகக் குறிப்பேற்றம் பன்முனை வேகக்கட்டுப்பாடு
O = ஒன்றும் கிடையாது O = ஒன்றும் கிடையாது O = ஒன்றும் கிடையாது O = ஒன்றும் கிடையாது O = ஒன்றும் கிடையாது
A = ஊற்றறை A = ஊற்றறை T = தூண்டப்படுகிறது R = வேக குறிப்பேற்றம் A = ஊற்றறை
V = கீழறை V = கீழறை I = கட்டுப்படுத்தப்படுகிறது V = கீழறை
D = இரட்டை (A+V) D = இரட்டை (A+V) D = இரட்டை (T+I) D = இரட்டை (A+V)

இதிலிருந்து அடிப்படை கீழறை “தேவைக்கேற்ற” வேகக்கட்டுப்பாடு வடிவமானது VVI அல்லது உடற்பயிற்சிக்கான தானியங்கி வேக திருத்தியமைப்புடன் VVIR ஆக இருக்கிறது. இந்த வடிவமானது ஊற்றறை உதறலில் தேவைப்படுவது போல, ஊற்றறை வேகத்துடன் எவ்வித ஒருங்கிணைப்பும் தேவைப்படாத போது ஏற்றதாகும். இதற்கு இணையான ஊற்றறை வேகக்கட்டுபாட்டு வடிவமானது AAI அல்லது AAIR ஆகும். ஊற்றறை-கீழறை கடத்தல் சரிவர செயல்பட்டு, ஆனால் சைனோ ஏட்ரி மக்கனு நம்பப்படமுடியாத போது இதுவே ஏற்ற விருப்பத்தேர்வாகும். இந்நிலை சைனஸ் வளைவு நோய் (SND) அல்லது நோய்வுற்ற சைனஸ் நோய்க்குறித்தொகுப்பு என்றழைக்கப்படுகிறது. ஊற்றறை-கீழறை தடை (AVB) என்பது பிரச்சனையாக இருக்கும்போது ஊற்றறை துடிப்பை கண்டறிந்து (உணர்ந்து) ஒரு இயல்பான தாமதத்திற்குப் பின் (0.1-0.2 வினாடிகள்) ஒரு கீழறை துடிப்பு நடக்காதப் பட்சத்தில் அதை தூண்ட வேண்டியிருக்கும். இது VDD முறையாகும். வலது ஊற்றறையிலும் (உணர) கீழறையிலும் (உணரவும் வேகக்கட்டுப்படுத்தவும்) ஒரு ஒற்றை வேகக்கட்டுப்படுத்தும் நடத்தியில் மின்முனைகளுடன் இதை செயல்படுத்தலாம். AAIR மற்றும் VDD ஆகிய இம்முறைகள் அமெரிக்காவில் பொதுவானவைகள் அல்ல. ஆனால் லத்தீன் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இவை மிகவும் பொதுவானவைகளாகும்[19][20]. அனைத்து விருப்பத்தேர்வுகளையும் உள்ளடக்குவதால் DDDR முறையானது மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் இம்முறையில் இதயமுடுக்கிகளுக்கு தனியான ஊற்றறை மற்றும் கீழறை நடத்திகள் தேவைப்பட்டு மிகவும் பலக்கியவைகளாக இருக்கின்றன. மேலும் தகுந்த முடிவுகள் கிடைக்கப்பெறுவதற்கு இவைகளின் செயல்பாடுகள் மிகவும் கவனமான நிரலொழுங்கு செய்யப்பட வேண்டும்.

இரட்டை கீழறை வேகக்கட்டுப்பாடு (BVP)[தொகு]

இந்த இதய மறுஒத்தியிங்கல் கருவியின் உதாரணத்தில் மூன்று நடத்திகள் காணமுடிகிறது: ஒரு வலது ஊற்றறை நடத்தி (ஆழ்க் கருப்பு அம்புக்குறி), ஒரு வலது கீழறை நடத்தி (கோடிட்ட கருப்பு அம்புக்குறி) மற்றும் ஒரு கரோனரி வளை நடத்தி (சிவப்பு அம்புக்குறி).கரோனரி வளவி நடத்தியானது இடது கீழறையை சூழ்ந்துகொள்கிறது. இதனால் இடது கீழறையின் வேகக்கட்டுப்பாடு நடைபெற முடிகிறது. இங்கிருக்கும் வலது கீழறை நடத்திக்கு கடத்தி சுருள்களைக் குறிக்கும் இரண்டு தடியான அம்சங்களிருப்பதையும் இயற்றியானது மற்ற பொதுவான இதயமுடுக்கி இயற்றிகளைவிட பெரிதானவைகளாயிருப்பதையும் கவனிக்கவும். இது இந்த கருவியானது இதயமுடுக்கியாகவும் கார்டியோவெர்ட்டர்-உதறல்நீக்கியாகவும் வேலை செய்கிறதென்பதை காண்பிக்கிறது. இது அபாயகரமான அளவில் துரிதமாக இருக்கும் அசாதாரணமான கீழறை தாளங்களுக்கு மின் அதிர்ச்சிகளைக் கொடுக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது.

ஒரு இரட்டை கீழறை இதயமுடுக்கியென்பது, CRT (இதய மறுஒத்தியங்கல் சிகிச்சைமுறை) என்றும் அழைக்கப்படுகிறது. இது இடது கீழறையின் இடைச்சுவர் மற்றும் பக்கவாட்டிலுள்ள இரண்டு சுவர்களையும் வேகக்கட்டுப்பாடு செய்யக்கூடிய இதயமுடுக்கி வகையாகும். இடது கீழறையின் இரண்டு பக்கங்களையும் வேகக்கட்டுப்பாடு செய்வதன் மூலம் ஒத்து சுருங்காத நேரெதிர் சுவர்கள் உள்ள இதயத்தை இந்த இதயமுடுக்கி மறுஒத்தியங்க செய்ய முடியும். இந்த நிலை இதயக்கோளாறுள்ள 25 – 50% நோயாளிகளுக்கு ஏற்படலாம். CRT கருவிகள் குறைந்தது இரண்டு நடத்திகளாவது கொண்டிருக்கின்றன. ஒன்று இடைச்சுவரை தூண்ட வலது கீழறையில் மற்றொன்று வலது கீழறையின் பக்கவாட்டு சுவரை வேகக்கட்டுப்பாடு செய்ய கரோனரி வளையினுள்ளே நுழைக்கப்படுகிறது. அவ்வபோது, இயல்பான வளை தாளமுள்ள நோயாளிகளில், ஊற்றறை சுருக்கம் ஒத்தியங்க உதவ வலது ஊற்றறையிலும் ஒரு நடத்தி வைக்கப்படுகிறது. சரியான அளவு இதய இயக்கத்தை அடைய ஊற்றறை மற்றும் கீழறை சுருக்கங்களுக்கு இடையேயான நேரம் மற்றும் இடது கீழறையின் இடைச்சுவர் மற்றும் பக்கவாட்டு சுவர்களின் சுருக்கங்களுக்கு இடையேயான நேரம் மாற்றியமைக்கப்படலாம். இதயக் கோளாறு அறிகுறிகளுள்ள நோயாளிகளில் CRT கருவிகள் இறப்பு விகிதத்தைக் குறைத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக காண்பித்துள்ளன; 35% அல்லது அதற்குக் குறைவான LV வெளியாக்கல் விகிதம் மற்றும் EKGயில் 120 மிவினாடி அல்லது அதற்கு அதிகமான QRS கால அளவு.[21][22][23] CRT ஒரு உட்பொருத்தக்கூடிய கார்டியோவெர்ட்டர்-டீஃபிரிலேட்டருடன் (ICD) சேர்க்கப்படலாம்.[24]

இயக்கத்தில் முன்னேற்றங்கள்[தொகு]

கம்பி வழியிடலை காண்பிக்கும் நிறுவப்பட்ட இதயமுடுக்கியின் எக்ஸ்-ரே நிழற்படம்

பல்வேறு உள்ளீடுகளின் உதவியால் இயற்கையைப் போலவே ஒரு வேக-இணக்கமுடைய இதயமுடுக்கியை உண்டாக்க முயல்வதே இதயமுடுக்கி இயக்கத்தில் ஒரு பெரிய படியாகும். இது QT இடைவெளி, தமனி-சிரை அமைப்பிலுள்ள pCO - pCO2 (கரைந்த பிராணவாயு அல்லது கார்பன் டையாக்சைடு அளவுகள்), முடுக்க அளவியால் (ஆக்ஸலரோமீட்டர்) நிர்ணயிக்கப்பட்டபடி உடற்செயல்பாடு, உடல் வெப்பநிலை, ATP அளவுகள், அட்ரினலின் போன்ற பரிமானங்களைக் கருத்தில் கொண்டு அடையப்படுகிறது. ஒரு நிலையான, முன்நிர்ணயிக்கப்பட்ட இதயத் துடிப்பை அல்லது இடைப்பட்ட கட்டுப்பாட்டை அளிப்பதற்கு பதிலாக, ஒரு ‘டைனமிக் இதயமுடுக்கியானது’ உண்மையில் ஏற்படுகின்ற சுவாச லோடிங்கையும் எதிர்பார்க்கப்பட்ட லோடிங்கையும் ஈடு செய்யலாம். லண்டன், UKவின் நேஷனல் ஹெல்த் மருத்துவமனையிலுள்ள டாக்டர். ஆந்தனி ரிக்கர்ட்ஸ் 1982 ஆம் ஆண்டு முதல் டைனமிக் இதய முடுக்கியை கண்டுபிடித்தார்.[சான்று தேவை].

வருங்கால செயற்கை இதயங்களுக்கும் டைனமிக் இதயமுடுக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம். டிரான்சிஷனல் திசு வெல்டிங்கில் நடைபெறும் முன்னேற்றங்கள் இந்த முறைக்கும் மற்ற செயற்கை உடலுறுப்பு/மூட்டு/திசு மாற்றும் முயற்சிகளுக்கும் உதவியாக இருக்கும். நிலைமாறுகின்ற திசு இணைப்பிற்கு முதல்நிலை உயிரணுக்கள் பலனளிக்கலாம், பலனளிக்காமலும் போகலாம்.

இதயமுடுக்கியானது ஒருமுறை உட்பொருத்தப்பட்டப் பிறகு அதின் கட்டுப்பாட்டை மேம்படுத்த பல முன்னேற்றங்கள் நடந்தேறியுள்ளன. மைக்ரோபிராசஸர் மூலமாக கட்டுப்படுத்தப்படும் இதயமுடுக்கிகளுக்கு மாறியதால் இந்த முன்னேற்றங்களில் பல சாத்தியமாயின. கீழறைகளை மட்டுமல்லாமல் ஊற்றறைகளையும் கட்டுப்படுத்தும் இதயமுடுக்கிகள் புழக்கத்தில் வந்துவிட்டன. ஊற்றறைகளையும் கீழறைகளையும் கட்டுப்படுத்தும் கருவிகள் இரட்டை-அறை இதயமுடுக்கிகள் எனப்படுகின்றன. இவ்வகை இரட்டை-அறை கருவிகள் பொதுவாக அதிக விலையுள்ளவைகளாயிருந்தாலும், கீழறைகள் சுருங்குவதற்கு முன் ஊற்றறைகள் சுருங்குமாறு செய்வது இதயத்தின் எக்கியனுப்பும் செயலை மேம்படுத்துகிறது. இது இரத்தச் சேர்க்கை இதயச் செயலிழப்பில் உதவியாக இருக்கும்.

வேக இணக்கமுள்ள கட்டுப்பாட்டினால் கருவியானது நோயாளியின் உடற்செயல்பாட்டை உணர்ந்து வேகம் மாற்றும் நெறிமுறைகள் (அல்காரிதங்கள்) வழியாக அடிமட்ட வேகக்கட்டுப்பாட்டு விகிதத்தை அதிகரிக்க அல்லது குறைக்க வழிவகுக்கிறது.

வலது கீழறையை தேவையில்லாமல் வேகக்கட்டுப்பாடு செய்வதால் இதயக் கோளாறு நேர்ந்து ஊற்றறை உதறல் அதிகரிக்கலாம் என்று DAVID சோதனைகள்[25] காண்பித்துள்ளன. புதிய இரட்டை அறை கருவிகள் வலது கீழறையில் ஏற்படும் வேகக்கட்டுப்பாட்டை குறைத்து இதய நோய் மோசமடைவதை தவிர்க்கிறது.

நோயாளியின் கரிசனைகள்[தொகு]

உட்செலுத்துதல்[தொகு]

ஒரு இதயமுடுக்கியானது பொதுவாக ஓரிட உணர்ச்சிநீக்கி அல்லது முழு உடல் உணர்ச்சிநீக்கியைப் பயன்படுத்தி ஒரு எளிதான அறுவை சிகிச்சை மூலமாக சிகிச்சை பெறுபவருக்குள் வைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்பாக சிகிச்சை பெறுபவர் ஆசுவாசப்படுவதற்காக ஒரு மருந்தும் வழங்கப்படலாம். நோய்த்தொற்றைத் தவிர்க்க பொதுவாக ஒரு ஆண்டிபையாடிக் அளிக்கப்படுகிறது.[26] பெரும்பாலான நேரங்களில் இதயமுடுக்கியானது இடது தோள்பட்டை பகுதியில் வைக்கப்படுகிறது. இங்கு காறை எலும்புக்குக் கீழே கீறி ஒரு சிறிய இடைப்பள்ளத்தை உண்டாக்கி அதில் இதயமுடுக்கியானது வைத்து வைக்கப்படுகிறது. நடத்தி அல்லது நடத்திகள் (இதயமுடுக்கியின் வகைக்கேற்ப நடத்திகளின் எண்ணிக்கை மாறுபடும்) ஒரு பெரிய சிரையினூடாக உட்செலுத்தப்படுகின்றன. இந்த செயல்முறையை கண்காணிக்க ஒரு ஃப்ளூரோஸ்கோப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தற்காலிக வடிகட்டி நிறுவப்பட்டு அடுத்த நாள் எடுக்கப்படலாம். அறுவை சிகிச்சையானது சுமார் ஒரு மணி நேரம் எடுக்கலாம்.

அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து சிகிச்சை பெறுபவர் காயம் ஆறும் வரை அதை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இதையடுத்து ஒரு பின் தொடர்வு அமர்வு நடைபெறும். இதில் ஒரு ‘பிரோகிராமரை’ கொண்டு இதயமுடுக்கியானது சோதிக்கப்படுகிறது. இது கருவியுடன் தொடர்பு கொண்டு இந்த முழு அமைப்பானது ஒழுங்காக வேலை செய்கிறதாவென்று ஒரு உடல்நலப் பராமரிப்பு நிபுணர் மதிப்பாய்வு செய்யவும் வேகக்கட்டுப்பாட்டு மின்னழுத்த வெளியீடு போன்ற அமைப்புகளையும் சரிப்பார்க்கவும் அனுமதிக்கிறது.

அறுவை சிகிச்சைக்கு முன் சிகிச்சை பெறுபவர் சில அடிப்படை ஆயத்தங்களை செய்துகொள்வது நன்று. மிகவும் அடிப்படையான ஆயத்தங்களில் உடலில் ரோமம் உள்ளவர்கள் மழித்து அல்லது ஒரு மயிர்நீக்கியின் துணையுடன் அதை அகற்றிவிடுவது நல்லது. ஏனெனில் அறுவைசிகிச்சையில் மருந்துக்கட்டுகள் மற்றும் கண்காணிப்புக் கருவிகள் உடலில் பொருத்தப்படுதல் உட்படலாம்.

இதயமுடுக்கி மின்கலங்களைப் பயன்படுத்துவதால், மின்கலங்கள் சக்தியிழக்கும்போது இந்த கருவியே மாற்றப்பட வேண்டியிருக்கும். கருவி மாற்றமானது முதல் உட்செலுத்துதலை விட எளிதான செயல்முறையாகும். ஏனெனில் இதில் பொதுவாக நடத்திகள் பொருத்தப்பட வேண்டியிருக்காது. பொதுவான ஒரு மாற்ற செயல்முறையில் அறுவை சிகிச்சை ஈடுபடுகிறது. இதில் உள்ளிருக்கும் கருவியை வெளியெடுக்க ஒரு கீறல் செய்யப்படுகிறது. உள்ளிருக்கும் கருவியிலிருந்து நடத்திகள் எடுக்கப்பட்டு, அவை புது கருவியுடன் இணைக்கப்பட்டு, புதிய கருவியானது பழைய கருவிக்கு பதிலாக நோயாளியின் உடலில் நுழைக்கப்படுகிறது.

இதயமுடுக்கி சிகிச்சை பெறுபவர் அடையாள அட்டை[தொகு]

சர்வதேசிய இதயமுடுக்கி சிகிச்சை பெறுபவர் அடையாள அட்டையில் பின்வரும் தகவல்கள் காணப்படுகின்றன: சிகிச்சை பெறுபவர் தரவு (மற்றவைகள் உட்பட, ஆரம்ப அறிகுறி, ECG, நோய்க்காரணி), இதயமுடுக்கி மையம் (மருத்துவர், மருத்துவமனை), IPG (விகிதம், செயல்படுமுறை, உட்பொருத்திய தேதி, MFG, வகை) மற்றும் நடத்தி [27][28].

இதயமுடுக்கியுடன் வாழ்வது[தொகு]

காலாந்தர இதயமுடுக்கி சோதனைகள்[தொகு]

இதயமுடுக்கி சிகிச்சை பெறுபவர்கள் பயன்படுத்தும் இருவகை தொலையுணர் கண்காணிப்பு கருவிகள்.

இதயமுடுக்கி ஒருமுறை உட்பொருத்திய பின்னர், கருவியானது வேலை செய்கிறதாவென்றும் ஒழுங்காக வேலை செய்கிறதாவென்றும் முறையான கால இடைவெளிகளில் சோதிக்கப்படுகிறது. பின் தொடரும் மருத்துவர் நியமிக்கிற இடைவெளிக்கு ஏற்ப, கருவியானது தேவைக்கேற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் சோதிக்கப்படலாம். வழக்கமான இதயமுடுக்கி சோதனைகள் பொதுவாக அலுவலகத்தில் ஒவ்வொரு ஆறு (6) மாதங்களுக்கொரு முறை செய்யப்படுகிறது. என்றாலும் இது சிகிச்சை பெறுபவர்/ கருவி நிலை மற்றும் ரிமோட் கண்காணிப்பு கிடைக்கப்பெறுவதற்கேற்ப வேறுபடலாம்.

அலுவலக பின் – தொடர்வின் போது, கருவியானது நோயறிதல் சோதனைக்குட்படுத்தப்படும். பின்வருவன இந்த சோதனைகளில் அடங்கும்:

 • உணர்தல்: கருவியானது உள்நடக்கும் இதய செயல்பாட்டை ‘பார்க்கக்’கூடிய ஆற்றல் (ஊற்றறை மற்றும் கீழறை மின்முனைவுமாற்றம் (டீபோலரைசேஷன்))
 • மின் எதிர்ப்பு (இம்பீடன்ஸ்): நடத்தியின் நம்பகத்தன்மையை அளக்கும் சோதனை. மின் எதிர்ப்பில் பெருமளவிலான மற்றும்/அல்லது திடீர் அதிகரிப்புகள் நடத்தி முறிவை சுட்டிக்காட்டலாம். அதே நேரத்தில் பெருமளவிலான மற்றும் அல்லது திடீர் குறைவுகள் நடத்திக் காப்பில் பிளவு ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டலாம்.
 • குறுமட்டம்: இந்த சோதனையானது சோதிக்கப்படும் அறையானது நம்பகமாக முனைமாற்றம் (கைப்பற்ற) செய்ய தேவையான குறைந்த அளவு சக்தியை (மின்னழுத்தம் மற்றும் துடிப்பகலம் இரண்டும்) உறுதி செய்கிறது. குறுமட்டத்தை நிர்ணயிப்பது அலைட் பிரஃபஷனல், பிரதிநிதி அல்லது மருத்துவரை கருவியின் ஆயுட்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு தகுந்த பாதுகாப்பு வரையறையை கணிக்கும் ஒரு வெளியீடை நிரலொழுங்க செய்ய அனுமதிக்கிறது.

நவீன இதயமுடுக்கிகள் ‘தேவைக்கேற்ப’ அதாவது தேவை எழும்போது மட்டுமே அவை வேகக்கட்டுப்பாடு செய்வதால், கருவியின் ஆயுளானது அது பயன்படுத்தப்படுகிற அளவைப் பொருத்திருக்கிறது. மின்கலத்திலிருந்து மின்சக்தி அதிக அளவில் வடிய வைக்கும் நிரலொழுங்கு செய்யப்பட்ட வெளியீடு மற்றும் நெறிமுறைகள் (அம்சங்கள்) கருவியின் ஆயுளை பாதிக்கும் மற்ற காரணிகள் ஆகும்.

கடந்த பின் – தொடர்விலிருந்து சேமிக்கப்பட்ட வேறு ஏதாவது நிகழ்வுகளை பரிசோதிப்பது அலுவலக சோதனையின் மற்றொரு கூடுதல் அம்சமாகும். மருத்துவரால் நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட தகுதிவிதிகளின் அடிப்படையில் மற்றும் சிகிச்சை பெறுபவருக்கு ஏற்ப பொதுவாக இவை சேமிக்கப்படுகின்றன. சில கருவிகள் நிகழ்வு தொடங்கிய போது ஏற்பட்ட இதயத்துள்ளான மின்னியல் வரைவுகள் மற்றும் நிகழ்வையே காண்பிப்பதற்கான அம்சங்களை பெற்றிருக்கின்றன. நிகழ்வின் காரணம் அல்லது மூலத்தை கண்டறிய இது மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இதைக் கொண்டு தேவையான நிரலொழுங்கு மாற்றங்களையும் செய்யலாம்.

வாழ்க்கைமுறை மாற்றங்கள்[தொகு]

ஒரு இதயமுடுக்கியை உட்செலுத்துவதால் ஒரு சிகிச்சை பெறுபவருடைய வாழ்க்கைமுறை வெகுவாக மாறுவதில்லை. தீவிரமான காந்தபுலம் உட்படுத்தும் உடல் தொடர்பு (ஃபுல் காண்டாக்ட்) விளையாட்டுகள் போன்ற சில செயல்களில் ஈடுபடுவது ஆலோசிக்கப்படுவதில்லை.

இதயமுடுக்கியுள்ள் சிகிச்சை பெறுபவர் ஒரு சில வகை தினசரி செய்கைகளை மாற்றியமைக்க வேண்டிய தேவையை உணரலாம். உதாரணத்திற்கு ஒரு வாகன இருக்கை வாரானாது தோள்பட்டையை சுற்றி பொருத்த வேண்டியிருந்து அந்த வாரானது இதயமுடுக்கி உட்பொருத்திய இடத்தின் மேல் படர்ந்தால் இது அவருக்கு அசௌகரியத்தை விளைவிக்கலாம்.

தீவிரமான காந்தபுலம் உள்ள எவ்வகை செயல்பாடும் தவிர்க்கப்பட வேண்டும். இதில் வில் பற்றவைப்பு (ஆர்க் வெல்டிங்க்), அதிலும் குறிப்பிட்ட சில கருவிகளைக் கொண்டு[29] அல்லது தீவிரமான காந்தபுலங்களை வெளியிடும் கன இயந்திரங்களைப் பராமரிப்பது (MRI (காந்த அதிர்வலை வரைவு இயந்திரம்) போன்றவை).

2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்[30], சில கையடக்க இசைக் கருவிகளில் இருக்கும் காந்தங்கள் இதயமுடுக்குகளுக்கு ஒரு இஞ்ச் எல்லைக்குள் வைக்கப்படும்போது அவை இடர்வினைகளை உண்டாக்கக் கூடுமென்று கண்டறிந்தது.

சில மருத்துவ செயல்முறைகள் செய்யப்படுவதற்கு முன் ஆண்டிபையாடிக்ஸ் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். தனக்கு இதயமுடுக்கியுள்ளதென்று சிகிச்சை பெறுபவர் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இதயமுடுக்கியுள்ள சிகிச்சை பெறுபவருக்கு காந்த அதிர்வலை வரைவு (MRI) போன்ற சில வழக்கமான மருத்துவ செயல்முறைகள் பயன்படுத்தவே முடியாது.

கூடுதலாக, அமெரிக்க இதய நிறுவனத்தின்படி சில வீட்டு உபகரணங்கள், அரிதாக ஒரு ஒற்றைத் துடிப்பைத் தடுத்து ஒரு இடர்வினையை உண்டாக்குவதற்கான ஒரு அரிதான வாய்ப்பைக் கொண்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் கிடைக்கப் பெறும் கைபேசிகள் (3 வாட்ஸுக்கு குறைவான) துடிப்பு இயற்றிகளை சேதப்படுத்துவதாகவோ இதயமுடுக்கியின் இயக்கத்தையோ பாதிப்பதாக தெரியவில்லை.[31]

இரகசியக்காப்பு மற்றும் பாதுகாப்பு[தொகு]

கம்பியற்ற தொலை தொடர்பை அனுமதிக்கும் இதயமுடுக்கிகள் பாதுகாப்பு மற்றும் இரகசியக்காப்பு கரிசனைகளை எழுப்பியுள்ளன. அங்கிகரிக்கப்படாத மூன்றாவது தரப்பினர் இதயமுடுக்கியிலுள்ள சிகிச்சை பெறுபவர் பதிவுகளை படிக்கக் கூடும் அல்லது ஒரு ஆராய்ச்சிக் குழுவினர் செய்து காட்டியது போல கருவிகளை நிரலொழுங்கற்று செய்யமுடியும்.[32] இந்த செயல்விளக்கமானது குறுகிய வீச்சில் வேலை செய்தது. அவர்கள் ஒரு நெடும் வீச்சு உணர்கொம்பை பயன்படுத்தவில்லை. இந்த கருப்பொருளின் நிருபனத்தால் தொலைத்தொடர்பில் அணுகக்கூடிய மருத்துவ உட்பொருத்துகளில் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை பெறுபவர் விழிப்பு நடவடிக்கைகள் மேம்படுத்துவதன் அவசியம் தெளிவாகிறது.[32]

இதயமுடுக்கி இயக்கமுடைய மற்ற கருவிகள்[தொகு]

சில நேரங்களில் இதயமுடுக்கிகளைப் போலவே காணப்படும் ICD என்றழைக்கப்படும் கருவிகள் உட்பொருத்தப்படுகின்றன. இந்தக் கருவிகள் திடீர் இதயக்கோளாறினால் இறப்பு ஏற்படக்கூடிய அபாயத்திலிருக்கும் நோயாளிகளுக்கான சிகிச்சையில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. ICD என்பது வேகக்கட்டுப்பாடு, கார்டியோவெர்ஷன் அல்லது உதறல் நீக்கல் போன்றவைகளால் பல்வகை இதயத்தாள கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கக் கூடியவைகளாயிருக்கின்றன.

NASPE / BPEG உதறல்நீக்கி (NBD) குறியீடு - 1993 [33]
II III IV
அதிர்ச்சி அறை துரித இதயத் துடிப்பு எதிர்ப்பு வேகக்கட்டுப்பாடு அறை துரித இதயத் துடிப்பு கண்டறிதல் குறை இதயத் துடிப்பு எதிர்ப்பு வேகக்கட்டுப்பாடு அறை
O = ஒன்றுமில்லை O = ஒன்றுமில்லை E = மின்னியல் வரைவு O = ஒன்றுமில்லை
A = ஊற்றறை A = ஊற்றறை H = இரத்த ஊட்டமளிப்பு A = ஊற்றறை
V = கீழறை V = கீழறை V = கீழறை
D = இரட்டை (A+V) D = இரட்டை (A+V) D = இரட்டை (A+V)
NASPE/BPEG உதறல்நீக்கி (NBD) குறியீட்டின் சுருக்க வடிவம் [33]
ICD-S அதிர்ச்சி ஆற்றல் மட்டுமே உள்ள ICD
ICD-B குறை இதயத் துடிப்பு வேகக்கட்டுப்பாடு மற்றும் அதிர்ச்சி உள்ள ICD
ICD-T குறை (மற்றும் அதிவேக) இதயத் துடிப்பு வேகக்கட்டுப்பாடு மற்றும் அதிர்ச்சி உள்ள ICD

குறிப்புதவிகள்[தொகு]

 1. McWilliam JA (1899). "Electrical stimulation of the heart in man". Br Med J 1: 348–50. doi:10.1136/bmj.1.1468.348.  “எலக்டிரிக்கல் ஸ்டிமுலேஷன் ஆஃப் த ஹார்ட் இன் மேன் பரணிடப்பட்டது 2010-12-05 at the வந்தவழி இயந்திரம் – 1899”ல் காணப்படும் பகுதி குறிப்பு, இதயத் தாள சமூகம் , 2007ம் ஆண்டு மே 11ம் தேதி அணுகப்பட்டது.
 2. லிட்வெல் எம். சி, “உணர்ச்சி நீக்கி சம்பந்தப்பட்ட இதய நோய்கள்” டிரான்சாக்ஷன்ஸ் ஆஃப் த தர்ட் செஷன் , ஆஸ்திரலேஷியன் மெடிக்கல் காங்கிரஸ், சிட்னி, ஆஸ்திரேலியா, செப்டம்பர். 2-7 1929, ப 160.
 3. 3.0 3.1 Mond H, Sloman J, Edwards R (1982). "The first pacemaker". Pacing and clinical electrophysiology : PACE 5 (2): 278–82. doi:10.1111/j.1540-8159.1982.tb02226.x. பப்மெட்:6176970. 
 4. அக்விலினா. ஓ, "“இதய வேகக்கட்டுப்பாட்டின் ஒரு சுருக்கமான வரலாறு பரணிடப்பட்டது 2007-05-17 at the வந்தவழி இயந்திரம்", Images Paediatr Cardiol 27 (2006), ப.17-81.
 5. Furman S, Szarka G, Layvand D (2005). "Reconstruction of Hyman's second pacemaker". Pacing Clin Electrophysiol 28 (5): 446–53. doi:10.1111/j.1540-8159.2005.09542.x. பப்மெட்:15869680. http://doi.org/10.1111/j.1540-8159.2005.09542.x. 
 6. "ஹார்வர்ட் கெசெட்: பால் மாரிஸ் சோல்". Archived from the original on 2011-02-07. பார்க்கப்பட்ட நாள் 2010-09-19.
 7. Weirich W, Gott V, Lillehei C (1957). "The treatment of complete heart block by the combined use of a myocardial electrode and an artificial pacemaker". Surg Forum 8: 360–3. பப்மெட்:13529629. 
 8. சக்ஸஸ் ஸ்டோரிஸ்: லார்சன், ஆர்ன்: செண்ட். ஜூட் மெடிக்கல்
 9. Furman S, Schwedel JB (1959). "An intracardiac pacemaker for Stokes-Adams seizures". N. Engl. J. Med. 261: 943–8. doi:10.1111/j.1540-8159.2006.00399.x. பப்மெட்:16689837. http://www.blackwell-synergy.com/openurl?genre=article&sid=nlm:pubmed&issn=0147-8389&date=2006&volume=29&issue=5&spage=453. [தொடர்பிழந்த இணைப்பு]
 10. “1962ஆம் ஆண்டில் நிரந்தர சிரையூடான வேகக்கட்டுபாடு” பார்சொனெட்.வி, PACE,1:285, 1978
 11. “ஒரு இதயத்துள் வைக்கப்படும் இருமுனை மின்முனையைக் கொண்டான நிரந்தர உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியை உருவாக்குவது குறித்தான ஆரம்பக்கட்ட ஆராய்ச்சி” பார்சொனெட்.வி, சக்கர் ஐ. ஆர், ஆசா எம். எம், க்ளினிக்கள் ரிசர்ச் 10:391, 1962
 12. Parsonnet V, Zucker IR, Maxim Asa M (1962). "An intracardiac bipolar electrode for interim treatment of complete heart block". Am. J. Cardiol. 10: 261–5. doi:10.1016/0002-9149(62)90305-3. பப்மெட்:14484083. 
 13. Lagergren H (1978). "How it happened: my recollection of early pacing". Pacing Clin Electrophysiol 1 (1): 140–3. doi:10.1111/j.1540-8159.1978.tb03451.x. பப்மெட்:83610. 
 14. Lagergren H, Johansson L (1963). "Intracardiac stimulation for complete heart block". Acta Chir Scand 125: 562–6. பப்மெட்:13928055. 
 15. ஜான் ஜேக்ஸ் வெல்டி: பையோகிராஃபி, ஹார்ட் ரிதம் ஃபௌண்டேஷன்
 16. Eich C, Bleckmann A, Paul T (October 2005). "Percussion pacing in a three-year-old girl with complete heart block during cardiac catheterization". Br J Anaesth 95 (4): 465–7. doi:10.1093/bja/aei209. பப்மெட்:16051649. http://bja.oxfordjournals.org/cgi/content/full/95/4/465. 
 17. 17.0 17.1 17.2 17.3 "Pacemakers, Patient and Public Information Center : Heart Rhythm Society". Archived from the original on 2010-06-19.
 18. Bernstein A, Daubert J, Fletcher R, Hayes D, Lüderitz B, Reynolds D, Schoenfeld M, Sutton R (2002). "The revised NASPE/BPEG generic code for antibradycardia, adaptive-rate, and multisite pacing. North American Society of Pacing and Electrophysiology/British Pacing and Electrophysiology Group". Pacing Clin Electrophysiol 25 (2): 260–4. பப்மெட்:11916002. 
 19. Bohm A, Pinter A, Szekely A, Preda I (1998). "Clinical Observations with Long-term Atrial Pacing". Pacing Clin Electrophysiol 21 (1): 246–9. doi:10.1111/j.1540-8159.1998.tb01097.x. http://www3.interscience.wiley.com/journal/119941339/abstract. பார்த்த நாள்: 2010-05-06. 
 20. Pitts Crick JC for the European Multicenter Study Group (1991). "European Multicenter Prospective Follow-Up Study of 1,002 Implants of a Single Lead VDD Pacing System". Pacing Clin Electrophysiol 14 (11): 1742–4. doi:10.1111/j.1540-8159.1991.tb02757.x. http://www3.interscience.wiley.com/journal/119992153/abstract. பார்த்த நாள்: 2010-05-06. 
 21. Cleland JG, Daubert JC, Erdmann E, et al. (2005). "The effect of cardiac resynchronization on morbidity and mortality in heart failure". N. Engl. J. Med. 352 (15): 1539–49. doi:10.1056/NEJMoa050496. பப்மெட்:15753115. http://content.nejm.org/cgi/content/full/352/15/1539. 
 22. Bardy GH, Lee KL, Mark DB, et al. (2005). "Amiodarone or an implantable cardioverter-defibrillator for congestive heart failure". N. Engl. J. Med. 352 (3): 225–37. doi:10.1056/NEJMoa043399. பப்மெட்:15659722. http://content.nejm.org/cgi/pmidlookup?view=short&pmid=15659722&promo=ONFLNS19. 
 23. Cleland J, Daubert J, Erdmann E, Freemantle N, Gras D, Kappenberger L, Tavazzi L (2005). "The effect of cardiac resynchronization on morbidity and mortality in heart failure". N Engl J Med 352 (15): 1539–49. doi:10.1056/NEJMoa050496. பப்மெட்:15753115. 
 24. Bristow M, Saxon L, Boehmer J, Krueger S, Kass D, De Marco T, Carson P, DiCarlo L, DeMets D, White B, DeVries D, Feldman A (2004). "Cardiac-resynchronization therapy with or without an implantable defibrillator in advanced chronic heart failure". N Engl J Med 350 (21): 2140–50. doi:10.1056/NEJMoa032423. பப்மெட்:15152059. 
 25. Wilkoff BL, Cook JR, Epstein AE, et al. (December 2002). "Dual-chamber pacing or ventricular backup pacing in patients with an implantable defibrillator: the Dual Chamber and VVI Implantable Defibrillator (DAVID) Trial". JAMA 288 (24): 3115–23. doi:10.1001/jama.288.24.3115. பப்மெட்:12495391. http://jama.ama-assn.org/cgi/content/full/288/24/3115. 
 26. de Oliveira JC, Martinelli M, D'Orio Nishioka SA, et al. (2009). "Efficacy of antibiotic prophylaxis prior to the implantation of pacemakers and cardioverter-defibrillators: Results of a large, prospective, randomized, double-blinded, placebo-controlled trial". Circ Arrhythmia Electrophysiol 2: 29–34. doi:10.1161/CIRCEP.108.795906. 
 27. ஐரோப்பிய இதயமுடுக்கி சிகிச்சை பெறுபவர் அடையாள அட்டை
 28. "யுகொமெட்". Archived from the original on 2011-07-10. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.
 29. "Testing of work environments for electromagnetic interference (Pacing Clin Electrophysiol. 1992) - PubMed Result". www.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 2008-11-10.
 30. "MP3 Headphones Interfere With Implantable Defibrillators, Pacemakers - Beth Israel Deaconess Medical Center". www.bidmc.org. பார்க்கப்பட்ட நாள் 2008-11-10.
 31. http://www.americanheart.org/presenter.jhtml?identifier=4676
 32. 32.0 32.1 Halperin, Daniel; Thomas S. Heydt-Benjamin, Benjamin Ransford, Shane S. Clark, Benessa Defend, Will Morgan, Kevin Fu, Tadayoshi Kohno, and William H. Maisel(May 2008). "Pacemakers and Implantable Cardiac Defibrillators: Software Radio Attacks and Zero-Power Defenses"(PDF). {{{booktitle}}}. 2008-08-10 அன்று அணுகப்பட்டது..
 33. 33.0 33.1 Bernstein A, Camm A, Fisher J, Fletcher R, Mead R, Nathan A, Parsonnet V, Rickards A, Smyth N, Sutton R (1993). "North American Society of Pacing and Electrophysiology policy statement. The NASPE/BPEG defibrillator code". Pacing Clin Electrophysiol 16 (9): 1776–80. பப்மெட்:7692407. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_இதயமுடுக்கி&oldid=3791817" இலிருந்து மீள்விக்கப்பட்டது