உள்ளடக்கத்துக்குச் செல்

செயப்படுபொருள் குன்றா வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழி இலக்கணத்தில் செயப்படுபொருள் குன்றா வினை என்பது செயப்படுபொருளை ஏற்கக்கூடிய வினை ஆகும். இது ஒரு வினைச்சொல் செயற்படுபொருளை ஏற்குமா ஏற்காதா என்ற அடிப்படையில் வினைகளை இரண்டாகப் பிரிப்பதால் ஏற்படும் பகுப்புக்களில் ஒன்று. மற்றது செயப்படுபொருள் குன்றிய வினை ஆகும். ஆங்கிலத்தில் இது Transitive verb எனப்படும்.

எடுத்துக்காட்டுக்கள்

[தொகு]

எதை? யாரை? ஆகிய கேள்விகளுக்கு பதில் தரக்கூடிய வினைகள் செயப்படுபொருளை ஏற்கக்கூடியவை. எனவே அத்தகைய வினைகள் செயப்படுபொருள் குன்றா வினைகள். எடுத்துக்காட்டாக, உண்டான் என்ற வினை தொடர்பில் எதை உண்டான்? என்ற கேள்விக்கு உணவு உண்டான் என விடை தர முடியும். இங்கே உணவு என்பது செயப்படுபொருள் ஆதலால் உண்டான் என்னும் வினை செயப்படுபொருளை ஏற்கிறது. எனவே உண்டான் என்பது செயப்படுபொருள் குன்றா வினை. இதைப் போலவே பின்வரும் வினைகளும் செயப்படுபொருள் குன்றா வினைகளாகும்:

  • கொடுத்தான் - (அறிவைக் கொடுத்தான்)
  • எழுதினான் - (கதை எழுதினான்)
  • உடுத்தான் - (உடை உடுத்தான்)
  • கேட்டான் - (பாடல் கேட்டான்)
  • வரைந்தான் - (படம் வரைந்தான்)

மேற்கோள்கள்

[தொகு]