செனட் ஹவுஸ் (சென்னைப் பல்கலைக்கழகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரவை இல்லம்
Map
பொதுவான தகவல்கள்
இடம்வாலஜா சாலை, சென்னை, தமிழ்நாடு
நாடுஇந்தியா
அடிக்கல் நாட்டுதல்1874
நிறைவுற்றது1879
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)இராபர்ட் சிஷோம்
பேரவைக் கட்டிடம்

சென்னப் பல்கலைக்கழக பேரவைக் கட்டிடம் (Senate House - University of Madras) என்பது சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாக மையம் ஆகும். இது மெரினா கடற்கரையோரம் வாலாஜா சாலையில் அமைந்துள்ளது.1874 மற்றும் 1879 ஆண்டுகளுக்கிடையே இராபர்ட் சிஷோம் என்பவரால் கட்டப்பட்டது. இந்த பேரவைக் கட்டிடம் இந்தோ சரசனிக் பாணி மற்றும் பழமையான இந்தியாவில் சிறந்த கட்டிடக்கலையின் உதாரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[1]

வரலாறு[தொகு]

ராபர்ட் சிஷோம் என்பவர் 19ஆம் நூற்றாண்டு பிரித்தானிய கட்டடக்கலைஞர் ஆவார். இவர் இந்தோ-சரசெனிக் கட்டிடக்கலை முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார். ஆரம்பத்தில் ரினைசன்ஸ் மற்றும் கோதிக் கட்டிடக்கலை பாணியை பயன்படுத்தி கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டதை சிஷ்லோம் இந்தோ-சரசெனிக் முறைக்கு மாற்றினார். 1871-ல் சேப்பாக்கம் அரண்மனையின் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் கட்டப்பட்டடதையடுத்து இம்மாற்றம் கொண்டுவரப்பட்டது.[2][3]

1864ஆம் ஆண்டு, சென்னை அரசு செனட் கட்டிடம் வடிவமைக்க அழைப்பு விடுத்திருந்தது.[4] சிஷோம் வடிவமைப்பு ஏற்கப்பட்டு, இக்கட்டிடம் ஏப்ரல் 1874க்கும் 1879க்கும் இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.[5][6] 

கட்டிடக்கலை[தொகு]

இந்தோ-சராசெனிக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட பேரவைக் கட்டிடத்தில், பைசண்டைன் பாணியின் பல கூறுகளை உள்ளடக்கியது.[4] பேரவைக் கட்டிடத்தில், பெரிய மண்டபம், மிகப்பெரிய உயரம் மற்றும் விகிதாச்சாரத்தில் உள்ளது. இந்தியாவில் இது சிறந்ததாக கருதப்படுகிறது. கட்டிடத்தின் தனித்துவமான உட்புறத்தில் வர்ணம் தீட்டப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள், அரிய ஓவியங்கள், சுவரோவியங்கள் மற்றும் வர்ணம் பூசப்பட்ட பட்டைகள் ஆகியவை அடங்கும்.[4][5]

மறுசீரமைப்பு[தொகு]

பேரவை மாளிகையின் மறுசீரமைப்பு 2006-ல் சென்னை பல்கலைக்கழகத்தின் செஸ்கி-நூற்றாண்டு (150வது ஆண்டு) கொண்டாட்டத்துடன் இணைந்து நிறைவு செய்யப்பட்டது. இந்த வரலாற்று கட்டிடத்தின் பல்வேறு அம்சங்களை மீட்டெடுக்க இண்டாக் மற்றும் தொல்லியல் துறையின் நிபுணர்கள் ஆலோசனை பெறப்பட்டது.[7] செப்டம்பர் 2006-ல், அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களால் பேரவை மாளிகை மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.[8] இருப்பினும், இது ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆகத்து 2015-ல் மீண்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவின் முதல் தேசிய கைத்தறி தினத்தை, பேரவை மாளிகை கட்டிடத்தில் தொடங்கி வைத்தார்.[9] பிப்ரவரி-மார்ச் 2019-ல் இந்தியாவிலேயே முதன்முறையாக நடத்தப்பட்ட புகைப்படக்கலை மாநாட்டான சென்னை போட்டோ இரண்டாம் பதிப்பின் கண்காட்சி ஒரு மாத காலத்திற்கு நடைபெற்றது.[10][11]

படங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  • Srinivasachari, C. S. (1939). History of the city of Madras written for the Tercentenary Celebration Committee. Madras: P. Varadachary & Co..